இன்பம் எனும் சொல் எழுத 8

து தங்க முனைகள் கொண்ட குண்டாய் க்யூட்டாய் ஒரு நோட்டுப் புத்தகம்.

“.இதுல என் லைஃப்ல நடந்த  எல்லா முக்கியமான விஷயத்தை மட்டும் எழுதி வச்சுருக்கேன், இன்ஃபேக்ட் இத எழுத ஆரம்பிச்சது என் அம்மா” என்றபடி இவளுக்கு பக்கவாட்டில் வந்தவன்,

இவள் கையிலிருந்த அதை திறந்து முதல் பக்கத்தை காண்பித்த படி,

“அம்மாக்கு மேரேஜாகி ஃபைவ் இயர்ஸ் கழிச்சு பிறந்தவன் நான், இங்க பாரு, அவங்க  ப்ரெக்னன்சி கன்ஃபார்ம் ஆனதுல இருந்து இதுல எழுத ஆரம்பிச்சுருப்பாங்க” என்றவன்

இப்போது நிமிர்ந்து இவள் முகம் பார்த்து “அப்றம் அபப்டியே என் 13த் பேர்த் டே வரைக்கும் நான் என்னல்லாம் செய்தேன், எனக்கென்னலாம் நடந்துச்சோ அதுல முக்கியமான எல்லாத்தையும் அம்மா எழுதியிருப்பாங்க,

அதுக்கு பிறகு என்னை எழுத சொல்லி என்ட்ட கொடுத்தாங்க, நான் சரின்னு நினைச்சு செய்தது, தப்புன்னு தெரிஞ்சே செய்தது, அடுத்து அதுக்காக ஃபீல் பண்ணி மாத்திக்க ட்ரைப் பண்ணதுன்னு எல்லாமே இருக்கும் அதில்,  நேரம் கிடைக்கப்ப படிச்சுப்பாரு”

கேஷுவலாய் சொல்லிக் கொண்டு வந்தவன்,

“என் வைஃப்க்கு தெரியாம எதுவும் என் வாழ்க்கைல இருக்க கூடாதுன்றது என் ஆசை, என் பாஸ்ட் இதுல இருக்கு, இனி என் வாழ்க்கைல வர்ற எல்லாத்தயும் உன்ட்ட நான் ஷேர் பண்ணிப்பேன், அதுல உனக்கு எதை இதுல எழுதணும்னு தோணுதோ அதை நீயே எழுதி வை” என கேஷுவலாகவே சொல்லி முடித்தான்.

ஆனால் அதைக் கேட்டிருந்தவளுக்கு எப்படி இருந்ததாம்??

வட்டவிழி முட்டையென விரிய அவனை அள்ளாமல் கிள்ளாமல் அப்படியே விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இதயத்தில் இமாலய காதல் புயல்,

உருகி நின்றவளை ஒரு கணம் பார்த்தவன்,

”அன்னைக்கு இங்க வச்சு என்னைப் பார்க்க மாட்டேன்னு திரும்பினியே அதான் உனக்கு இந்த பனிஷ்மென்ட், என்னோட எல்லாத்தையும் நீ பார்த்தாகணும்” என விளையாட்டாய்ச் சொல்ல,

இப்போது எதிர்பாரா நேரம் அவன் கன்னத்தில் இதழ் பதித்தது அவன் மனையாள்.

ஒரு கணம் கண் மூடி அதை ஏற்றவன், அடுத்த கணம் அவளை கைகளில் அள்ளினான்

”அனிச்சம் பூ இனி நாம அடுத்த ஸ்டேஜ் தாராளாம போலாம்தானே” என்றபடி.

இவர்களது படுக்கை அறையில் வந்து இறக்கி விட்டவன்,

“2 மினிட்ஸ் ஃப்ரெஷப் செய்துட்டு வர்றேன்” என விலகிப் போக,

அவன் கொடுத்திருந்த அந்த டைரியை திறந்தாள் இவள்,  கடைசியாக எழுதி இருப்பதை எடுத்துப் பார்த்தாள்.

ஆண் என்ற நிலை தாண்டி

கணவன் எனும் பதம் ஏக

தாயாய் தனையனாய்

நண்பனாய் நல்துணையாய்

தலைவனாய் சரிசமமாய்

அவளுக்காய் அவளோடு

இனி நான்,

என ஒரு கவிதை இன்றைய தேதியிட்டு,

அதன் கீழ்

Hey man, I’m married!! என ஒரு வாக்கியம்,

அதற்கும் கீழ்

நைட்டுக்கு நிறைய ப்ளான் இருக்கு, 😉  என அடுத்த சென்டென்ஸ்

கடைசியாக

இன்பம் எனும் சொல் எழுத, எனத் தொடங்கி

‘மீதி கவிதையை இனி என் அனிச்சம் பூ கூடதான் எழுதனும்’ என முடிக்காமல் முடித்திருந்தான்.

படித்திருந்த மனைவியோ முழு ஆசையும் ஆனந்தமுமாய் முந்திய பக்கங்களை திருப்பினாள்.

பேப்பரில் இவள் போட்டோ வந்த நாளைப் பற்றி அவன் என்ன எழுதி இருக்கிறான் எனப் பார்க்க தோன்ற, அதை தேடிப் பிடித்தாள்.

இன்னைக்கு என் அனிச்சம் பூ ரொம்ப அழுதுட்டு, ரொம்ப கஷ்டமாகிட்டு எனக்கு,

இன்பமான வாழ்க்கை வேணும்னா இரண்டு மாதிரியும் இருக்கணும், அனிச்சம் பூவும் அவசியம், பாறாங்கல்லும் இருக்கணும்னு அனிட்ட சொல்லி இருக்கேன், புரிஞ்சுப்பா.

ப்ளான் செய்தபடி  ப்ரோபோஸ் செய்யாம, இன்னைக்கே எங்க வெட்டிங் பத்தி அனிட்ட பேசிட்டேன்,

அவள சந்தோஷமா பார்த்த பிறகுதான் நிம்மதியா இருக்குது.

Hey man, Now I’m engaged!

இப்படியாய் இருந்தது அது.

அடுத்த பக்கம்

Advertisements