இன்பம் எனும் சொல் எழுத 7 (2)

யோ திரும்பவும் வெள்ள்மா?? துவன்க்கு என்னாச்சு? என அவளுக்கு பயம் கொள்ளக் கூட அவகாசம் கொடுக்காமல் இந்நேரம் பின்னிருந்து இடையோடு இழுத்துப் பிடிக்கிறது ஒரு கரம்.

“அன்னைக்கு முதலைல இருந்து காப்பாத்துறேன்னு வந்தல்ல அதுக்கானது இது” மயில் பீலி வருடலாய் சொல்லியபடி அவள் கழுத்தில் பதிகிறது அவளவன் இதழ்.

“அப்ப நீ என் வைஃபா இருந்திருந்தா இதைத்தான் செய்துருப்பேன”

காலுக்கடியில் இன்னுமே தரை என எதுவும் கிடைக்காத ஆழ நீரில் அவன் கை சிறையில் அப்பட்டமான பாதுகாப்பையும், அவன் இதழ் செயலில் அதுவரை அறிந்திராத ஆனந்த பூகம்பத்தையும் உணர்ந்தாள்.

இட்ட இடம் தொடங்கி இளையவள் தேக எல்லை மட்டும் சாக்லெட் சரவெடி.

தொடர் செயலாய் தீயென சிலிர்த்த சிறு தேகத்தை தன்னவன் கைகளுக்குள் இன்னுமாய் அவள் சுருக்கிய நேரம், எரியத் தொடங்குகிறது அருகிலிருந்த ஒரு எமெர்ஜென்ஸி லேம்ப்.

அவன்தான் ஆன் செய்திருந்தான், அவர்கள் இருப்பது ஒரு ஸ்விமிங் பூல் என தெரிகிறது இவளுக்கு, முன்பு இந்த இடத்தில் இது கிடையாது.

“பொதுவா ஸ்விம்ங்கே ரொம்ப பிடிக்கும், அதுவும்  மழையில ஸ்விம் செய்ய ரொம்ப ரொம்ப பிடிக்கும், சின்ன வயசில் அப்படி சான்ஸ் கிடச்சிருக்கு, இப்ப வெளிய போய் ஸ்விம் பண்ணவே ஒரு மாதிரி இருக்கும் போகமாட்டேன், இதுல மழையில எங்க போக?”

கடந்த ரெண்டு மாதத்தில் இவர்கள் வறுத்த கடலையில் இவளது  இதுவும் எப்போதோ இடம் பெற்றிருந்தது.

அதை நியாபகம் வைத்து அதற்காக செய்திருக்கிறான், கரைந்து போனாள்.

மழை வந்த டைமிங் மார்வலஸ், உள்ளும் புறமும் நனைந்து போனாள்.

அந்த இரவுக்கும் சிறு வெளிச்சத்துக்கும் சிலீர் மழைக்கும், அனைத்தையும் அற்புதமாக்கும் அவனது அருகாமைக்கும், உலகத்தை மறந்து போனாள்.

ஆனந்தமாய் கழிந்தது சிறு பொழுது.

அடுத்து, “இதுக்கு மேல இந்த டைம்ல தண்ணில நிக்க வேண்டாம் துவன்” என அவனை கிளப்பி வந்தாள் இவள்.

வீட்டை நோக்கி வந்த இவர்கள் கார் ஷெட்டை கடக்கும் போது,

“ஒரு நிமிஷம் அனுமா” என்றபடி காரை நோக்கி போனான் அவன், இயல்பாய் அவனைப் பின் பற்றினாள் இவள்.

சென்று கார் ஷெட் லைட்டை ஆன் செய்தான் அவன்,

கையிலிருந்த எமெர்ஜென்சி லேம்ப் வெளிச்சத்தில் தரையைப் பார்த்து கவனமாக அவன் பின்னால் சென்று கொண்டிருந்தவள்,

“ஷெட்டுக்கும் பவர் பேக்கப் உண்டா?” என்றபடி இப்போது நிமிர,

நீச்சல் குளத்தில் இருந்து வந்தவன் எப்படி இருப்பான்? முட்டு வரை நீள டெனிம் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தபடி ஈரம் சொட்ட சொட்ட நின்ற அவனைப் பார்க்கவும்

விலுக்கென்றது அவளது பெண்மை.

இது வரைக்கும் அவனோடுதான் விளையாடிவிட்டு வந்திருக்கிறாள், இருந்தாலும் வெளிச்சத்தில் அவனைப் அப்படிப் பார்க்க தவிர்ப்பும் தவிப்புமாய் ஒரு சடுகுடு ஆட்டம்.

பார் என்றும் பார்க்காதே என்றும் பாவை கண்கள் அவன் மீது பாண்டி ஆடிக் கொண்டிருக்க, இது எதையும் கண்டு கொள்ளாமல் அவனோ காரை திறந்து உள்ளிருந்து எதையோ எடுப்பது போல் குனிந்தவன், சட்டென இவள் புறம் திரும்பி, இவள் எதிர்பாரா நேரத்தில் இவளை  இழுத்து அணைத்தான்.

“அன்னைக்கு இங்க வச்சு என்ன பார்க்க மாட்டேன்னு திருப்பிக்கிட்டல்ல,அதுக்கானது இது” குறும்பும் ஆசையும் அளவின்றி கலந்திருக்கும்அவன் முழு முகமும்,

மில்லி மீட்டர் இடைவெளியில் மிக மிக அருகில் தெரியும் அவன் இதழ்களும்,  அடுத்து அவன் செயல் என்னவாய் இருக்கும் என புரிவிக்க,

“அச்சோ விடுங்க,” என்றபடி அவசரமாய் கண்களை இறுக மூடிக் கொண்டாள் அனி, கூடவே தன் கையால் அவன்  கண்களையும் மூடி வைத்தாள்.

“மேடம்ஜி எவ்ளவு நேரம் இப்படியே இருக்க ஆசைப்படுறீங்களோ அவ்ளவு நேரம் இங்க இப்படியே நிக்கலாம் நாம, எனக்கு டபுள் ஓகே” அவன் சொல்லில் மெல்ல பரிதாபமாய் படபடப்பாய் கண்களை திறந்து பார்த்தாள்.

“இது கார் ஷெட், திறந்திருக்கு” என எதை எதையோ சொல்லி வைத்தாள், அழுகை வரப் போகும் குரல்,

எல்லாவற்றையும் சீண்டலாய் சிந்தாத சிரிப்போடு பார்த்துக் கொண்டிந்தவன்,

“ஒரு குட்டி கிஃப்ட் கூடவே ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி”  என்றபடி இவளிடம் தன் கையிலிருந்ததை  நீட்டினான்.

“இதத்தான் தர வந்தேன், நீ என்ன நினச்ச?”

அவன் கேள்விக்கு இவள் என்ன பதில் சொல்வாள்??

‘கார் ஷெட்ல பல்ப் வாங்குறதே வேலையா போச்சு’ மனதுக்குள் முனங்கியபடி அவன் கொடுத்ததைப் பார்த்தாள்.

தொடரும்…

இன்பம் எனும் சொல் எழுத 8

Advertisements

One comment

Leave a Reply