இன்பம் எனும் சொல் எழுத 7

ற்கனவே செய்தித்தாளில் அனிச்சா புகைப்படம் கொடுத்தது யார் என விசாரித்து அவனைப் பற்றி தனக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரியிடம் துங்கவ் விசாரிக்கச் சொல்லி இருந்ததால்,

குற்றவாளியை பிடிக்க அரை மணி நேரம் கூட ஆகவில்லை.

அவன் ஒரு லாரி ட்ரைவர், ட்ரக் அடிக்ட், அனிச்சாவ எங்கயோ பார்த்தானாம், பிடிச்சுட்டுதாம்.

அவளை கொஞ்சகாலம் துரத்தி துரத்தி ஐ லவ் யூ சொன்னவன், அவ சம்மதிக்கலைனதும் ஆதன்ட்ட வந்து பொண்ணு கேட்டு பார்த்தான்.

ஆதனும் முடியாதுன்னு சொல்ல, அந்த கோபத்துலதான் அடுத்து எதேச்சையா ஆதனை ஓசூர்ல பார்த்தப்ப, ப்ளான் செய்துன்னு இல்லாம, அந்த நேர ஐடியால லாரிய வச்சு அவன் காரை ஒரு இடி, அடுத்து அப்படியே ஒரிஸ்ஸா போய்ட்டானாம்.

இஷ்பா யாரு அவ பேக்ரவ்ண்ட் என்ன என எதுவும் அவனுக்குத் தெரியாது.

ஆதன அடிச்ச ரெண்டு நாளைக்கு பிறகு அந்த ட்ரைவருக்கு வீட்ல அனிச்சா தனியா இருப்பான்னு அடுத்த ஐடியா வர,

அவளை டார்கெட் செய்து அவன் வீட்டுக்கு வந்தா, அவளை அங்க காணோம்.

ஆக அந்த வேகத்துல கொடுத்ததுதான் அந்த விளம்பரம்.

இப்ப அவனை அரெஸ்ட் செய்தாச்சு, சட்டப்படி அவனுக்கு என்ன பனிஷ்மென்ட் உண்டோ அது கண்டிப்பா கிடைக்கும், அதுக்கு துங்கவ் கேரண்டி.

ஆதனும் இப்போது ஆபத்தான நிலையை தாண்டி, நார்மலுக்கு வந்திருந்தான்.

அவன் உடல்நிலை சரியானதும், ரெண்டு அண்ணா தங்கையும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்றதுன்னு பெரியோர்களால் பேசி நிச்சயிக்கபட வைத்தார்கள் சின்னவர்கள்.

திருமணத்துக்குப் பிறகு ஆதனும் இஷ்பாவும் கொஞ்ச வருஷம் வெளிநாடு போய்ட்டு வரட்டும் என்பதும் ஒரு முடிவு.

கொஞ்ச வருஷம் இஷ்பா அப்பா தனியா இருக்கட்டும் அப்பவாவது அவருக்கு உறவோட அருமை தெரியுதான்னு பார்க்கலாம் என ஒரு முய்ற்சி.

மாசம் இவ்ளவுன்னு நான்தான் அப்பாவுக்கு பணம் அனுப்புவேன், மத்தபடி என்ன ட்ராமா போட்டலும் நீங்க அப்பாவுக்கு காசு மட்டும் கொடுக்க கூடாது என இஷ்பா துங்கவ் வீட்டுக்கு எல்லா வகையிலும் கட்டளை போட்டு வைத்திருந்தாள்.

எல்லாம் சரியா வரும்னு நம்புவோம்.

இதில் இரண்டு வருஷமா காத்துட்டு இருக்ற ஃபீலை கொடுத்த இரண்டு மாதம் கழித்து ஒரு வழியாய் நடந்தேறியது இரண்டு ஜோடிகளின் திருமணம்.

ன்று இரவு ஃபார்ம் ஹவ்ஸில் தங்குவதென முடிவெடுத்தது துங்கவும் அனியும் சேர்ந்துதான்.

அதன்படி வெட்டிங் மற்றும் ரிஷப்ஷன் என எல்லாம் முடிந்து இவர்கள் இருவருமாக அங்கு கிளம்பிச் சென்றனர்.

இவர்கள் அங்கு கார் ஷெட்டில் சென்று காரை நிறுத்தும் வரைக்குமே மழையின் அறிகுறி எதுவும் இல்லை என்ற போதும், அதை விட்டு வெளியில் வரும் போது சடசடவென பிடித்துக் கொண்டது மழை.

ரிஷப்ஷன் முடியவே லேட்டாகிவிட்டதால் அங்கிருந்து நேராக கிளம்பி வந்திருந்த இருவரும் ரிஷப்ஷன் உடையிலேயே இருக்க,

வாழ்க்கைக்கும் பத்ரமா வச்சுருக்க வேண்டிய புடவையாச்சே, அனி தன் பட்டுப் புடவை நனைந்துவிடக் கூடாதென வேக வேகமாக வீட்டுக்கு ஓடினாள்.

துங்கவோ அவள் ஒற்றைக் கையில் புடவையை சற்று தூக்கிப் பிடித்தபடி ஓடுவதை சிறு சிரிப்போடு பார்த்திருந்தவன்,

“அனி, ட்ரெஸ் சேஞ்ச் செய்யனும்னா செய்துக்கோ, நான் வர கொஞ்சம் லேட்டாகும்,” என்றுவிட்டு மட்டுக் கொட்டகை இருக்கும் திசை பார்த்து போனான்.

“இன்னைக்கு இங்க யாரையும் வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லி இருக்கேன்” என காரில் வரும் போது துங்கவ் சொன்னது அவனது அனிக்கு ஞாபகம் இருந்ததால்,

‘மழை பெய்ய ஆரம்பிக்கிறதால எல்லாம் சேஃபா இருக்கான்னு பார்த்துட்டு வருவான்’ என்ற புரிதலுடன் இவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

குளித்து உடைமாற்றி அடுத்தும் சின்ன சின்னதாய் சில வேலைகள் செய்து முடித்த போதும் அவன் வந்திருக்கவில்லை.

அவனுக்காய் இன்னும் சிறிது நேரம் காத்திருந்தவள் ஒரு கட்டத்தில் என்னவாயிற்று என்ற ஒரு தேடலில், வெளியே தேடிச் சென்றாள்.

வெளியே விளக்கென்று எதுவும் எரியாத நிலையில் மழையில் கழுவப்பட்டுக் கொண்டிருந்தது கடும் இருட்டு, பவர்கட் போல.

பார்க்க ஒரு கணம் பயம் வந்தாலும், மழையில் இருட்டில் அவன் என்ன செய்கிறான்? என தேடிப் போகத்தான் செலுத்துகிறது சின்னவளின் அனிச்சம் பூ மனம்.

மாடுகள் இருந்த திசையைப் பார்த்து அவனை கூப்பிட்டுக் கொண்டே நடந்தாள்.

“துவன்,”!!!!! “துவிப்பா,”!!!

அவனிடமிருந்து பதில்தான் வரவில்லை.

இதில் காலுக்கடியில் நச நசத்த ஈரத்தரை சட்டென காணாமல் போகிறது, அவ்வளவுதான் தனக்கு என்ன நடக்கிறது என புரியும் முன் கால் நழுவி ஆழ தண்ணீருக்குள் பதற பதற அவள் விழுந்தாள்.

அடுத்த பக்கம்

Advertisements