இன்பம் எனும் சொல் எழுத 6 (2)

தே நேரம் அரண்டு போய் துங்கவ் வீட்டிற்கு வந்து நின்றது இன்னொரு உருவம்,. இஷ்பாவின் அப்பா.

“அந்த ஆதன் வீட்டுப் பொண்ணு போட்டோவ எவனோ கன்னா பின்னானு பேப்பர்ல போட்டு வச்சுருக்கான், எங்க என் பொண்ண கூட்டிட்டுப் போன கடுப்புல நான்தான் அவன் தங்கச்சிய  இப்படி செய்றேன்னு நினச்சு, அவன் என்ன பொண்ண இதே மாதிரி எதாவது போட்டா நான் என்ன செய்வேன்“ என அரற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உண்மையில் மகள் மீது உள்ள அக்கறையோ குடும்ப கௌரவம் பத்திய கவலையோ, இல்லை துங்கவ் வீட்டில் இவர்தான் மகள் ஓடிப் போன குரோதத்தில் ஆதன் தங்கையை இப்படி செய்வதாக நினைத்து இவரிடம் கோபபட்டால் என்ற பயமோ,

ஆம் மகளுக்காக மட்டுமே இவர் ஆட்டத்தை சகித்துக் கொண்டு கேட்கிற போதெல்லாம் பணம் வீசிக் கொடுத்துக் கொண்டிருந்த குடும்பம், இப்போது மகள் இவருக்கு இல்லை என்றான பின், இவரை எதாவது சொல்லி உறவை வெட்டிக் கொண்டால் அடுத்து அவர் நிலை என்னகுமாம் என்ற பயம் இருக்கிறதுதானே,

ஆக இந்த காரணங்களில் எதற்காகாவோ, அவர் அழுது ஆர்பாட்டம் செய்து தான் இந்தப் புகைப்படம் போட்ட வேலையை செய்யவில்லை என நிரூபிக்க செய்ய முயன்று கொண்டிருக்க,

இத்தனைக்கும் இன்னும் அனிச்சா அங்கு துங்கவன் வீட்டில் இருப்பது அவருக்குத் தெரியாது.

அடுத்து இஷ்பாவுடன் பேசி முடித்து துங்கவின் குடும்பம் ஓசூரில் இஷ்பா குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்குக் கிளம்ப,

அப்போதுதான் துங்கவின் அம்மா அருகில் அனிச்சாவைப் பார்த்தவர், இன்னுமாய் ஏகத்துக்கு மிரண்டு போய் சத்தமின்றி இன்றி அமைதியாய் அடங்கினார்.

பிறகென்ன அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் கிட்டதட்ட அனைத்து போராட்டமும் முடிந்திருந்தது.

ஆதனுக்கும் இஷ்பாவுக்கும் ஏறத்தாழ ஒரு வருடமாகவே ஒருவர் மேல் ஒருவருக்கு விருப்பமாம்,

குடும்ப சூழ்நிலை உணர்ந்து அவங்க செய்த திட்டம் என்னனா, முடிஞ்ச வரை சீக்கிரமா ஆதன் வெளிநாட்டுக்கு வேலைய மாத்திட்டுப் போய் குடியேறணும்,

அதுக்குள்ள அனிச்சாவுக்கும் நல்ல இடமா பார்த்து வெளிநாட்லயே கல்யாணம் செய்து கொடுத்துட்டாலும் சரி, இல்லனா கூட கூட்டிட்டுப் போனாலும் சரி, அவளையும் பாதுகாப்பா  செட்டில் செய்துடணும்,

அடுத்து தன் வீட்ல யாருக்கும் தெரியாம இஷ்பா ஆதன் இருக்க நாட்டுக்கு போய் அங்க இவங்க கல்யாணம் செய்துக்கணும்,

அப்பதான் இஷ்பாவாடோ அப்பாட்ட இருந்து ஆதன் வீட்டையும், துங்கவ் குடும்பத்தையுமே கூட காப்பாத்தலாம்,

கொஞ்சம் காஞ்சதும்  இஷ்பாவோட அப்பா அடங்கி வருவார்னு ஒரு எதிர்பார்ப்பு, அந்த சிச்சுவேஷன்ல அவரை சேர்க்க வேண்டிய விதமா சேர்த்துக்கணும்,

இந்த திட்டத்தை செயல்படுத்த வருஷக் கணக்கா காத்திருக்க வேண்டி வரும்ன்றதால, ரெண்டு பேரும் சந்திச்சுக்கிறது ரொம்பவும் அபூர்வம், அப்படி ஒரு டைம் மீட் பண்றப்பதான் துங்கவ் கண்ல விழுந்தாங்க,

அடுத்து ரொம்ப காலம் பார்க்காம  இருந்தவங்க இன்னும் சில நாளில் ஆதனின் பிறந்தநாள்  என்பதில் இஷ்பா அவனைப் பார்க்க ரொம்பவும் ஆசைப்பட, சென்னையில வச்சு சந்திச்சா ப்ரச்சனை என ரெண்டு பேரும் மீட் பண்ண ப்ளான் செய்த இடம் ஓசூர்.

அங்க ஆதனும் இஷ்பாவும் பார்த்து பேசிட்டு கிளம்பின நேரம்,

ஆதன் இவளை பஸ் ஏத்திவிட்டுட்டு தன் கார்ல திரும்பணும், அதுக்காக பஸ் ஸ்டாண்ட் போற டைம்,

ஒரு ரோட்டோர பூக்கடையில் பூ வாங்க இவ இறங்கிக் கொண்டு இருக்க,

ஆதன் கொண்டு வந்திருந்த காரை அந்த பக்கமா வந்த லாரி சின்னதா அடிச்ச மாதிரிதான் இருந்துது, ஆனா ஆதனுக்கு இன்னுமே நினைவு திரும்பல, அவனுக்கு ஹெட் இஞ்சுரி,

அவன் அவ்வளவு ஆபத்தான நிலமையில இருந்தப்ப முதல்ல ஷாக்ல அவனை ஹாஸ்பிட்டல் கொண்டு போகணும் காப்பாத்தனும்ன்றத தவிர இஷ்பாவுக்கு எதுவும் நியாபகம் வரலைனா,

அடுத்து அவன் அங்க ஐ சி யூல உயிருக்கு போராடிட்டு இருக்கப்ப, இவ வீட்டுக்கு கூப்ட்டு சொன்னா, இவளை இவ அப்பா இழுத்துட்டு போய்டுவாரே, அப்படி அவனை விட்டுட்டு போக அவளுக்கு முடியலை,

அதோட அப்படி போய்ட்டா அடுத்து  பயந்த சுபாவமான அனிச்சா மட்டும் தனியா நின்னு ஆதனை பார்த்துகணும்,

இதுல இவ வீட்ல ஏன் ஓசூர் போனான்னு ஆரம்பிச்சு, ஆதன இவ விரும்புற விஷயம் வெளிய வந்துட்டோ, ஹாஃஸ்பிட்டல்ல இருக்க ஆதனுக்கும் அனிச்சாவுக்குமே அது ப்ரச்சனையாகும்.

இதெல்லாம் யோசிச்சு  அவ வீட்டை தொடர்பு கொள்ளவே இல்லை.

இப்பவும் இவள காணோம்னதும் எப்படியும் வீட்ல தேட ஆரம்பிப்பாங்க, ஆனா ஓசுர்ல இருக்றதை கண்டு பிடிக்கிறது கஷ்டம்,

ஆதன் லவ் மேட்டர் எப்படியும் இப்ப மாட்டும், ஆனா அத முதல்ல கெஸ் செய்றது  துங்கவாதான் இருக்கும்,

அவன் எப்படியும் அனிச்சாவ இவ அப்பாட்ட மாட்ட விட மாட்டான்னு இவளுக்கு நம்பிக்கை,

ஆக அப்படியே அமைதியா இருந்துட்டு ஆதன் ஹெல்த் கொஞ்சம் ஸ்டேபிளானதும் அடுத்து என்ன செய்யன்னு யோசிக்கலாம் என இருந்துவிட்டாள்.

அவளுக்கு இப்ப உடனடித் தேவை ஆதன் ரெக்கவர் ஆகுறது மட்டுமே, இதுல ஆக்சிடென்ட் கேஸ்.

முதல்ல இருந்த ஷாக்ல இவ எதுவும் சொல்ற நிலையிலேயே இல்லை என்பதாலும், ஆதன் வந்திருந்தது அவனோட ஃப்ரெண்ட் கார் என்பதாலும், அந்த பேரிலேயே கேஸ் பதிவாகி இருக்க,

அதனால் இப்போது வரை விஷயம் வீட்டுக்கு போகாமல் இருக்கிறது என்றால்,

போலீசோ, இந்த ஆக்சிடெண்ட் வேண்டுமென்று செய்யப்பட்ட கொலை முயற்சி என்கிறது. இதே நேரம் அனிச்சா போட்டோவும் அப்படி பேப்பர்ல வர, இதுக்கு மேல தனியாள தான் விஷயத்தை சமாளிக்க நினைப்பது விபரீதமாகிடும் என இஷ்பா தன் அண்ணன் துங்கவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி அழுதாள்.

அதுதான் அந்த தொலைபேசி அழைப்பு.

தொடரும்…

இன்பம் எனும் சொல் எழுத 7

Advertisements

One comment

Leave a Reply