இன்பம் எனும் சொல் எழுத 6

ன்ன பயம், நாள் போகப் போக உனக்கே தெரியும் இதனால ஒரு ப்ரச்சனையும் வரப் போறது இல்லனு, கூடவே நான் இருக்கேன், இன்னும்” அவனை முடிக்கவிடவில்லை,

“உங்களுக்கு என்னப் பார்த்தா?” அதுக்கு மேல் எப்படி கேட்க என தெரியாமல் இவள் நிறுத்த,

“நேத்து வரைக்கும் உன்னைப் பார்க்கப்ப எவ்ளவு பிடிச்சுதோ அதே அளவுதான் இப்பவும் பிடிச்சுருக்கு, கூட கொஞ்சம் பாவமாவும் இருக்கு, அதோட இதுக்கு மேல நம்ம மேரேஜ பத்தி உன்ட்ட பேசாம தள்ளிப் போட கூடாதுன்னும் இருக்கு”

அவன் சொல்லிக் கொண்டு போக,

சிலீரென பூக்கிறது ஒரு பூக்காடு இவளுள்ளே,

நேற்று வரை புரியாமல் நெஞ்சுக்குள் நொண்டியாடிக் கொண்டிருந்தது நொடி நேரத்தில் புரிகிறது, இதுதானா? இதையா? இதைத்தான் எதிர்பார்த்தாளா? துங்கவ் இவளை விரும்புகிறானா???

சின்ன சின்ன விஷயத்திலும் அவனுக்காய் அவள் யோசிக்க தொடங்கிய நொடி எதுவென தெரியாது, ஆனால் அதை ஏன் என்ன என்றெல்லாம் யோசித்ததில்லை அவள்,

இப்பொழுது இவனது இந்த வெளிப்படுத்தலில் என்னவெல்லமோ மனதில், எப்படியெல்லாமோ மாறி மாறி மாருதம் வீச, மத்தளம் வாசிக்க, செண்பகச் சாரல் சேர்க்க,

நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நில்லாமல் நெஞ்சில் ஊர்வலம் போக, ஒன்றொன்றும் ஒவ்வொரு விதமாய் காதலை கட்டி கூட்ட,

மங்கை மனம் அதற்குள் சரிய, பூத்த வெட்கத்துடன், அவளை சுற்றிப் பிடித்திருந்த அவன் கையிலிருந்து இவள் இப்போது மெல்ல விலக,

இதற்குள் விஷயம் அறிந்து அங்கு வந்திருந்த துங்கவின் அம்மா கண்ணில் பட,

வீட்ல யாருக்கும் லவ் மேரேஜ் பிடிக்காது என அவன் சொன்ன அந்த பதங்கள் முளைவிடும் இவளது இளங்காதலில் இடி மின்னலாய் கொதி நீராய் கொட்டி இறங்க,

சட சடெவன தன் வீடு தன் அண்ணா, தன் நிலை, இந்த இவங்களோட சோ கால்ட் ஸ்டேடஸ், என எதுவெல்லாமோ நியாபகம் வர,

இது கைக்கு வராமல் போகப் போற கானல் நீர் கனவு, கன்னா பின்னாவான முட்டாள்தனம் என எங்கெங்கோ ஒடுகிறது நினைவு,

கூடவே  இவங்கல்லாம் ஒத்துகிட்டா எப்படி இருக்கும்? என ஒரு ஏகாந்த ஏக்கம்,

இவள் முகத்தைப் பார்த்து மனம் படித்தான் போலும்,

“இந்த பொண்ண உனக்கு பார்ப்பமான்னு உன்னைப் பத்தி அம்மா கேட்ட பிறகுதான், எனக்கே என் மைன்ட்ல என்ன இருக்குதுன்றதுல ஒரு தெளிவு வந்துச்சுங்க மேடம்ஜி,

அந்த வகையில நீங்க ஒன்ஷாட்ல க்ளீன் போல்ட் ஆக்குனது உங்க மாமியரத்தாங்க, எனக்கு கொஞ்சம் டைம் எடுத்துச்சு“

சிறு கிண்டலுடன் இவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் சொன்ன துங்கவ், அடுத்து என்ன சொல்ல வந்தனோ,

மனைவியாகப் போகிறவளின் மன மதிலில் நில்லாமல் துள்ளி எழுந்த நிம்மதி அலைகளும், வெடித்து கிளம்பிய சந்தோஷ சதிரும் அவளது முக நிறத்தில் வகை வகையாய் வண்ணம் சேர்க்கப் பார்த்தவன்,

முழு நொடி அதை முழுதாய் உணர்ந்து அனுபவித்தவன்,

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கா, என் வீட்ல சம்மதிப்பாங்களான்னு, முழுசா பத்து நிமிஷத்துக்குள்ள எத்தனை விஷயத்த யோசிச்சு எத்தனை எமோஷன்க்கு போய்ட்ட அனி? இதுதான் மனசு,

இன்னைக்கு ஒன்னுல உழலும், நாளைக்கு மத்த விஷயத்துக்கு மாறிப் போய்டும், அதுக்கு இந்த நொடி கஷ்டமா இருக்குதுன்னு லைஃபை முடிச்சுகிறது எவ்ளவு பைத்தியகாரத்தனம்?

அதே மாதிரிதான் அடுத்தவங்க மனமும், யாரும் நம்ம பத்தியே யோசிச்சுட்டே இருக்கப் போறதில்ல, இதையெல்லாம் மனசுல வச்சுகிட்டு வாழ்க்கைய பாரு போதும்” என்றவன்,

இப்போது சிறு கனைப்பால் தன் வருகையை அறிவித்தபடி அருகில் வந்த அவனது அம்மாவைப் பார்த்தான்,

”உன் பெர்சனல் நம்பர் ரிங்க் ஆகிட்டே இருக்குதுடா, ஆனா கால் அன்நோன் நம்பர்ல இருந்து வருது” என துங்கவின் மொபைலை அவனிடம் நீட்டியவர்,

அருகில் சற்று குறுகிப் போய் நின்று கொண்டிருந்த அனிச்சாவை தோளோடு பற்றி,

”எதோ கேசரி மாதிரி இன்னொரு ஸ்வீட் செய்வாங்கன்னு சொன்னியே அத ப்ரேக்ஃபாஸ்ட்க்கு செய்யலாமா?” என எதுவும் மாறிவிடவில்லை என்பதை உணர்த்தும்படி வெகு இயல்பாக கேட்டார்,

அவரது அக் கேள்வியை மற்றும் செயலை நம்ப முடியா ஒரு பார்வை பார்த்தவள், அடுத்த கணம் அவரது தோளில் முகம் புதைக்க,

“எனக்கே நீ இதெல்லாம் இன்னும் தரலை, அதுக்குள்ள மாமியாருக்கு மட்டுமா?” மொபைலை குடைந்து கொண்டிருந்த துங்கவ் அதை தொடர்ந்தபடியே இந்நேரம் இப்படி சொல்லிவிட்டு நகர,

அவன் அம்மாவின் முன் இப்படி சொன்னால் அவள் என்ன செய்வாளாம்?? வெரைட்டியாய் வெட்கம் கொள்ளவும், அதை வெளிக்காட்டாமல் பேந்த விழிக்கவும் பெண்ணுக்கு பெர்ஃபெக்ட் டைம்.

அதே நேரம் அவனுக்கு ஒரு சின்ன அடி வைத்த அவனது அம்மாவோ,

”அவன் கிடக்கான், நீ வாமா” என்றபடி இவளை கை பிடித்து நடத்தினார்.

இவள் மனதில் ஒரு இலகு நிலை உதித்த சமயம்,

“இப்ப எங்க இருக்க நீ?” என காட்டமாய் ஆரம்பித்து,

“ஏன் அழுற நீ? இஷு, கம் டூ சென்ஸ் இஷு, சொல்லிட்டு அழு” என பல் கடிப்பிற்குப் போய்,

“அழுதா என்ன விஷயம்னு எப்படி தெரியும், முதல்ல அழுகைய நிறுத்து, சொல்றேன்ல, இப்படி மொட்டையா அழுதா செமயா டென்ஷனாகுது” கெஞ்சலாய் மாறி,

”மூனு நாளா ஆளையும் காணோம், இப்ப இப்படி அழுகைனா நான் என்ன புரிஞ்சுக்க,?”  அண்ணணாய் மன்றாடிக் கொண்டிருந்தான் துங்கவ்,

உடல் விறைக்க சட்டென அட்டென்ஷனுக்கு வந்தாள் ஆதனின் தங்கை.

அடுத்த பக்கம்

Advertisements