இன்பம் எனும் சொல் எழுத 5 (2)

ட்டென நாற்காலி சரிய, அதை தள்ளிவிட்ட துங்கவின் கைகளில் போய் இவள் விழுவது புரிகிறது. ஏதோ கம்பியில்லாத அலங்கார சன்னல் வழியாய் ஏறி உள்ளே வந்திருக்கிறான் அவன்.

“செம அடி வாங்கப் போற நீ என்ட்ட, இப்ப என்ன ஆகிட்டுன்னு?” முழு கோபமும் மொத்த தவிப்புமாய் துங்கவின் முகம் கண்ணில் படுகிறது இவளுக்கு.

பழகி சில நாள்தான் ஆன போதும் மனதுக்குள் அவன் மீது வந்திருந்த மறைக்கப்பட்ட காதல், சாவை தேடும் இந்த நொடி அப்பட்டமாய் வெளியே வர,

ஒரு கணம் அவன் தவிப்பை உணர்ந்து, அவனை விட்டு நிரந்தரமாய் மரணத்தால் பிரிய இருப்பதை நினைத்து, அவனை இறுகி அணைத்தவள்,

அடுத்த நொடி அவன், அவன் அப்பா, அவனோட ஸ்டாஃப்ஸ் எல்லோரும் கூட அந்த ஃபோட்டோவைப் பார்த்திருப்பாங்க என்ற உணர்வில்

அவனைப் பிடித்து மூர்க்கமாய் தள்ளியவள், “ழ்ழ்ழே” என எதையோ கத்தலாய் ஆரம்பித்து அதை சொல்ல கூட முடியாமல் மயங்கி சரிந்தாள்.

“ஹேய் விழிச்சுக்கோ, விழிச்சுக்கோடி சொல்றேன்ல” மீண்டுமாய் இவளுக்கு விழிப்பு வரும் போது சரிந்தவளை தன் கைகளில் தாங்கி இருந்த துங்கவ் இவள் கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தான்.

“இங்க பாரு, இங்க பாருன்னு சொல்றேன்” சரியாய் மயக்கம் தெளியாமல் மலங்க விழித்தவள் நாடியைப் பிடித்து ஆட்டினான் அவன்.

ஓரளவு சுதாரிப்பு வர, கூடவே அந்த அருவருப்பான ஃபோட்டோவும் நியாபகம் வர, இப்பொழுது முழு நினைவுக்கும் திரும்பியவள்,

“ஐயோ, ஐயோ” என அலறியபடி இவன் கைகளில் இருந்து உருவிக் கொண்டு ஓட,

இழுத்து இவளை அசையவிடாமல் ஒற்றைக் கையால் சுற்றிப் பிடித்தவனின் செயலின் முரட்டுதனத்தை முதன் முதலாக உணர்ந்தாள்.

“விடுங்க என்ன, எத்தனை பேர் வீட்டுக்கும் போயிருக்கும் அது, எல்லோரும் பார்த்துருப்பாங்க, என் சொந்தக்காரங்க, என் கூட படிச்சவங்க, தெருல போறவங்க, எல்லோரும்” இருந்த அதிர்ச்சியில் தோணிய எல்லாத்தையும் சொல்லி அரற்றினாள்.

”இனிம அவங்க முகத்தை நான் எப்படி பார்ப்பேன், என்னைப் பார்க்கப்ப என்ன நினச்சுட்டு பார்ப்பாங்க” புலம்பிக் கொண்டு போனவள்,

அவன் தன் சக்தி முழுவதும் திரட்டி முறைத்துக் கொண்டிருந்த முறைப்பில் தன் புலம்பலை தொடர முடியாமல் நிறுத்தினாள்.

“நம்ம ஃபோட்டோவையே வெவ்வேற ட்ரெஸ்ல வெவ்வேற ஆங்கிள்ள அடுத்த அடுத்த பக்கம் போட்டா அது ரெண்டும் ஒருத்தர்தான்னு எத்தன பேர் கண்டு பிடிச்சுப்பாங்கன்னு சொல்ல முடியாது,

இதுல உன் ஃபோட்டோவே இல்லாத ஒன்னுக்கு இத்தன ஆர்பாட்டமா?

அந்த போட்டோவப் பார்த்தா ரோட்ல போற உன்ன அடையாளம் கண்டு வந்துடப் போறாங்க? அதுவும் உன்ன மாதிரி சல்வார் போட்டுட்டு போறப்ப, இது அந்த பொண்ணுனு யார்க்காவது தோணும்னா நினைக்கிற?”

“இங்க பாரு அனி, ரொம்ப டெலிகேட் சிச்சுவேஷன்ல ரொம்பவும் சென்சிடிவா  சென்சிபிளா என்னை புரிஞ்சுகிட்ட, அந்த சென்சிடிவிட்டி சரிதான்.

மூச்சு காத்த புரிஞ்சுக்கிற அனிச்சம் பூ மதிரி சின்ன சின்ன விஷயத்தையும் அப்சர்வ் செய்து, கேர் எடுத்துன்னு, அது லைஃப் சந்தோஷமா போக தேவை.

ஆனா இந்த சென்சிடிவிட்டி இது கொஞ்சமும் நல்லதுக்கில்ல,

இந்த விஷயத்துல அனிச்சம் பூ மாதிரி இல்ல பாறை மாதிரி இருக்கனும்,

மகசீன்லயோ இல்ல நெட்லயோ, தன் போட்டோ மோசமா வந்தா ஒவ்வொரு பொண்ணும் சாகனும்னா, ஒவ்வொரு பொண்ணும், எவன் என்ன சொன்னாலும் கேட்கனும், இல்லனா அவன் இப்படி செய்துடுவான், உடனே பொண்ணு செத்துடனும் அப்படின்னு ஆகிடாதா?

தப்பு செய்றவன் அவன், அவன் உயிரோட ஜோரா சுத்திகிட்டு இருப்பானாம், ஒன்னும் செய்யாத அப்பாவிப் பொண்ணு சாகணுமாம், இது உனக்கே நியாயமா படுதா?

உண்மையில் 99% பேருக்கு அந்த போட்டோவும் நீயும் ஒன்னுனு கூட தோணப்போறது இல்ல, மீறி தோணினாலும் உன்ன என்ன செய்துட முடியும் அவங்க?

சிட்டில 11 மணிக்கு மேல ரோட்ல போய் பாரு, மெயின் ரோடு NHனு தெருவுக்கு தெரு சில பொண்ணுங்க ஃபுல் மேக்கப்ல நின்னு அடுத்தவங்க பார்க்றாங்கன்னு எந்த டென்ஷனும் இல்லாம ஆண்கள்ட்ட பேரம் பேசிட்டு இருப்பாங்க, நான் சொல்றது புரியுதுதானே, இந்த பொண்ணுங்களுக்கும் பகல் இருக்குது, அதுல ஒரு லைஃப் இருக்குது,

இவங்க செய்றத நான் சரின்னு சொல்ல வரலை, ஆனா என்ன சொல்றேன்னா அவங்க கூட வாழ்க்கைய எதிர்கொள்றாங்க, ஒரு ஃபோட்டோக்கு பயந்து ஒன்னும் செய்யாதவங்க செத்து போறாங்க,

அதுக்கும் மேல, ப்ராஸ்ட்யூஷன லீகலாக்குன்னு போராடுற லூசு கோஸ்டியும் உலகத்துல இருக்கு, அப்படி செய்தா ரேப்பை அவாய்ட் செய்யலாம்னு உளறிட்டு அலையும் கிறுக்கு கோஷ்டி அது,

இப்ப என்ன உலகத்துல ப்ராஸ்ட்யூஷனே நடக்கலையா, அப்றம் ஏன் இவ்ளவு ரேப் நடக்குதாம், ஒன்றரை வயசு குழந்தை கூட அப்யூஸ் ஆகுது,

இப்படி கேவலமா தியரி பேசிட்டு அலையுறவங்களும் தைரியமாவே உலகத்தை ஃபேஸ் செய்றாங்க, ஓடி ஒளியுறது இல்ல,

இவ்வளவு ஏன், தினமும் அந்த மாதிரி பொண்ணுட்ட போய்ட்டு வர்ற அத்தனை ஆம்பிளைங்களும் ஒரு பயமும் இல்லாம உலகத்துல சுத்திட்டு இருக்கான்,

குழந்தைய ரேப் பண்ணவன் கண்டுக்காம அலஞ்சுட்டு இருக்கான்,

ஆனா ஒரு ஃபோட்டோ மோசமா வந்துட்டுன்னு பொண்ணுங்க மட்டும் செத்துடணுமாம், போட்டோ போட்டவன் அடுத்த பொண்ணை இப்படி போட அலஞ்சுட்டு இருப்பான்.

முடிஞ்சா போட்டவனுக்கு .எவ்வளவு முடியுமோ அவ்ளவு பனிஷ்மென்ட் வாங்கி குடுக்க ட்ரைப் பண்ணுவியா அத விட்டுட்டு“  பொரிந்து தள்ளிக் கொண்டு போனவன்,

“நீ ஹர்ட் ஆகனும்னுதானே இதை செய்றான்மா, அப்ப கொஞ்சம் கூட அதை மைன்ட் பண்ணாம சந்தோஷமா இருந்து அவன தோக்க வையேன், அதவிட்டுட்டு அவன ஏன் ஜெயிக்க வைக்க?” சற்று தணிவாய் இறங்க,

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் இவள்.

பின் மெல்ல,”எனக்கு பயமா இருக்கு துங்கவ்?” என முனங்கினாள்,

தொடரும்..

இன்பம் எனும் சொல் எழுத 6

Advertisements

One comment

Leave a Reply