இன்பம் எனும் சொல் எழுத 5

வள் தன் வீட்டில் தங்கி இருக்கிறாள் என்பதற்காக துங்கவ் வீட்டிற்கு வராமல் இருந்தான் என்றெல்லாம் இல்லை.

காலையிலும் மதியமும் அவனைப் பார்க்க முடியாதெனினும் நைட் டின்னர் நிச்சயமாய் இவளுடனும் அவனது அம்மாவுடனும்தான் இருக்கும் அவனுக்கு.

அதில் அன்று டின்னரில் அவனது அப்பா அற்புதராஜும் கூட இருந்தார், பொதுவான பேச்சுகளுக்கு பின், சாப்பிட்டு முடியவும்,

“என்னமா உன் அண்ணாவையும் இஷுவையும் தெரிஞ்ச எல்லா வகையிலும் தேடியாச்சு, எங்க போனாங்கன்னு தெரியலை, எதுனாலும் கூப்ட்டு வச்சு அவங்களுக்கு மேரேஜ் செய்து அனுப்பினாதானே சரியா இருக்கும், அதனால மீடியாக்கு போகலாம்னு யோசிக்கிறேன்மா,

இதுதான் விஷயம்னு குடும்ப விஷயம் எதையும் சொல்லாம, .இன்டைரக்டா அவங்களுக்கு மட்டும் புரியுற மாதிரி அவங்களை நம்மள கான்டாக்ட் செய்ய கேட்டு விளம்பரம் எதுவும் கொடுக்கலாமான்னு நினைக்கிறேன்மா” என இவளிடம் விஷயத்தை சொல்வது போலவும், அனுமதி கேட்பது போலவுமாக துங்கவின் அப்பா பேச,

அப்படி என்ன விளம்பரம் கொடுக்க முடியும் என புரியாத போதும், இவள் தலையை ஆட்டி வைத்தாள்.

அந்த நியாபகத்தில் மறுநாள் காலை செய்தித்தாளைப் பார்த்தவள், துங்கவின் அப்பா சொன்னது போல் விளம்பரம் எதுவும் வந்திருக்கிறதா என பேப்பரில் தேட,

இரண்டாம் பக்கத்தை பார்க்கவும் கொடும் தீ ஒன்று திடும் என இதயத்துக்குள் பற்றி ஏற, தீக்குள் விழுந்த சிறு புழு போல துடித்துச் சுருண்டு வெந்து போனாள்.

தன் கண்களை நம்ப முடியாமல் இரண்டாம் முறையாக அந்த முழு பக்க விளம்பரம் மேல் கண் வைத்தவளுக்கு தலை சுற்றியது.

கீழ்காணும் மாடல் எங்கள் விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், அவரை திடீரென காணவில்லை.

இவரை எங்கேனும் பார்த்தால் கீழ்கண்ட முகவரிக்கு தகவல் கொடுக்கவும், என இவள் வீட்டு முகவரியையே கொடுத்திருந்தது அது, அதில் ஒன்றும் இல்லை இவளுக்கு எதிராய்.

ஆனால் கீழிருந்த அந்த முழு பக்க படம், அதன் முகம் மட்டும் தான் இவளது, மற்றபடி டூ பீஸ் நீச்சல் உடையில் யாருடையோ உடலோ,

மார்ஃபிங் செய்து இவளை இப்படி ஒரு கோலத்தில் நிற்பது போல் காட்டி இருந்தனர்.

எத்தனை பேர் இதை பார்த்ருறுப்பாங்க, எல்லோருக்கும் இது இவ ஃபோட்டோன்னுதானே தோணும்?

முழுசா ட்ரெஸ் செய்துட்டு போறப்பவே எத்தனை வக்ர பார்வைகள் சுத்திலும், இதில் இனிமே இவளால யாரைப் பார்க்க முடியும்?

அவளுக்கு தெரிந்த ஒவ்வொரு ஆண் கண்களும் இவளை இந்த கோலத்தில் பார்ப்பதாக ஒரு உணர்வு தோன்ற,

கிடுகிடுவென உடல் ஆட, அத்தனை அத்தனை அருவருப்பும், அப்படியே உயிரோடு பற்றி எரிவது போல ஒரு கொதிப்புமாய் இவள் வேரறுந்து வெந்து கொண்டிருந்த நேரம் இவளிடம் ஓடி வந்தது துங்கவ்.

சட்டென இவள் கையிலிருந்த அந்த திறந்த பேப்பரை பிடுங்கி எறிந்தவன்,

“அது நீ இல்லமா, வெறும் மார்ஃபிங், உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லடா, யார் செய்தாங்கன்னு தெரியலை, ஆனா செய்தவன இன்னும் 10 நிமிசத்துக்குள்ள பிடிச்சுடுவோம்” அவன் சொல்லிக் கொண்டு போக,

இவளோ தலை தெறிக்க இவளுக்காக கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள் ஓடியவள், அதை உட்பக்கமாக தாழ் போட, பின்னால் வந்திருந்த துங்கவ் கத்துவது கேட்கிறது,

“ஏய் பைத்தியம் மாதிரி எதையாவது செய்து வைக்காத, இது ஒரு சின்ன விஷயம், அனி சொல்றது கேட்குதா, கதவத் திற நீ முதல்ல”

சுற்று முற்றும் பார்த்தவள் அங்கிருந்த நாற்காலியை எடுத்து அந்த கட்டிலில் போட்டு, அதன் மேல் ஏறி நின்ற போது,

“உன் ஆது உன்ன தேடுவான் லூசு” துங்கவ் எங்கிருந்தோ சொல்லும் சொல்லில் ஆது முகம் நியாபகம் வர சில நொடி அப்படியே நின்றாள்.

அண்ணாவ பார்க்கனும் என ஒரு ஏக்கம் வெள்ளமாய் வருகிறது இவளுக்குள், அடுத்த கணமே, அவனும் இந்த ஃபோட்டாவ பார்ப்பான் என நியாபகம் வரவும்,

துப்பட்டாவை எடுத்து மேலிருந்த  மின்விசிறியில் போட முனைந்தாள்.

அடுத்த பக்கம்

Advertisements