இன்பம் எனும் சொல் எழுத 4 (2)

னிச்சா அவனது வீட்டிற்கு வந்து மூன்று நாள் ஆகி இருந்தது.

“உன்னை இங்க தான் பெரியப்பா கண்டிப்பா தேட மாட்டாங்க, அதனால இந்த சிக்கல் தீர்ற வரைக்கும் இங்கயே அம்மா கூட இரு” என சொல்லிவிட்டுப் போயிருந்தான் அவன்.

அதற்கு முன்பாக “ நம்ம வீட்டு விஷயம் வெளிய போகாம பார்த்துக்கோ என்ன?” என ஒரு வேண்டுதலும் இல்லாத கட்டளையும் இல்லாத இரண்டுமாயும் ஒன்றைச் சொன்னவன்,

“பெரியம்மாதான் என் அம்மாவுக்கு அக்கா, பெரியப்பா அவங்க வழியாதான் ரிலடிவ், பெரியம்மா முன்னாலயே தவறிட்டாங்க, அவங்க பொண்னு இந்த இஷு,

பெரியப்பா ரொம்பவும் ரெக்லெஸ், எந்த வேலையும் செய்யாம, எப்பவும் சும்மா சுத்திட்டு இருக்ற ஆள், கைல எந்த காசும் கிடையாது,

எங்களால இஷுவ கண்டுக்காம விட முடியாது, அதனால அவளுக்காக பெரியப்பாவையும் சேர்த்து பார்த்துட்டு இருக்கோம்னு வச்சுக்கோயேன், இஷு தங்கமான பொண்ணு, அவளுக்கு இதெல்லாம் வருத்தம், அவள வச்சு அவ அப்பா எங்கட்ட இருந்து காசு பிடுங்குறார்னு ரொம்பவுமே ஃபீல் பண்ணுவா,

உன் அப்பா பத்தி சொன்ன தெரியுமா, அந்த விஷயத்துலதான் உன் அண்ணாக்கும் இஷுக்குமே ஒருத்தரை ஒருத்தரை பிடிச்சுருக்கலாம்னு எனக்கு தோணுது, ரெண்டு பேருக்கும் சரி இல்லாத அப்பா,

எப்படியோ இப்ப இந்த கல்யாண விஷயம் எங்களுக்கு தெரிஞ்சு நடந்தா, வசதி இல்லாத மாப்ளைய நாங்கதான் பார்த்துட்டோம்ன்ற மாதிரி ஆடு ஆடுன்னு ஆடி, அதையும் காரணமா காமிச்சு இன்னுமா காசு வாங்க ட்ரைப் பண்ணுவார் பெரியப்பா,

இப்பன்னா எங்களுக்கே கோபம்னு நாங்க விலகி நின்னுடுவோம்னு இஷு  யோசிச்சுருப்பாளோன்னு தோணுது,

எங்க வீட்ல லவ் மேரேஜ்னா அம்மா அப்பா யாருக்கும் பிடிக்காது, நாங்களே விலகி நிக்றப்ப பெரியப்பாவால எங்களையும் ஒன்னும் செய்ய முடியாது, உன் அண்ணாவையும் ஒன்னும் செய்ய முடியாதுன்னு கால்குலேட் செய்து, எங்கட்ட சொல்ல கூடாதுன்னு அவ யோசிச்சுருப்பா, அவ நேச்சர் அது,

ஆனா உன்னை எப்படி இப்படி விட்டுட்டு போனாங்கன்னுதான் தெரியலை, உன்ன அவ அப்பா பிடிச்சுட்டுப் போய் ஆதன மிரட்டுவார்னு அவளுக்கு நல்லா தெரியும்.

அதான் என்ட்ட மட்டும் முன்னமே கொஞ்சம் விஷயத்தை லீக் பண்ணி, என்னை உள்ள இழுத்துவிட்டு உன்னை சேஃப் கார்ட் செய்துருக்காங்க உன் அண்ணாவும் இஷுவும் ஒரு யூகம் எனக்கு,

என் மேல உன் அண்ணாவுக்கு நல்ல இம்ப்ரெஷன்னு சொன்னியே, அதான் இப்படி காய் மூவ் பண்ணிருக்கான் உன் அண்ணானு தோணிச்சு,

ஆனா உன் குணத்துல, நீ விஷயங்களை அப்ரோச் செய்ற சென்சிடிவிட்டில பாதி உன் அண்ணாவுக்கு இருந்தா கூட இப்படி ப்ளான் செய்ய அவனால முடியாதுன்னும் தோணுது,” என்றுவிட்டு போயிருந்தான்.

ஏதோ ஒரு வகையில் அது இவள் மனதுக்கு இதமாக இருந்தது.

அடுத்தும் அவன் அம்மாவும் வெகு இயல்பாக இவளிடம் பழகியது இன்னுமாய் நன்றாய் தோன்றியது இவளுக்கு.

மனதை உறுத்திய ஒரே விஷயம் ‘ஆது எங்க? ஏன் இவட்ட கூட சொல்லாம போய்ட்டான்? என்பதே,

அதற்கு பதில் வந்த வகையில் தான் நொறுங்கிப் போனாள் இவள்.

தொடரும்…

இன்பம் எனும் சொல் எழுத 5

Advertisements

One comment

Leave a Reply