இன்பம் எனும் சொல் எழுத 4

டுத்து அவன் “இங்க பவர் பேக்கப் உண்டு, மாடிலதான் இருக்குது, பட் க்ரவ்ன்ட் ஃப்ளோர்ல தண்ணினதும் ட்ரிப் ஆகி இருக்கும்.

நான் போய் பார்த்து மாடிக்கு மட்டுமா மாத்த முடிஞ்சா மாத்திட்டு வர்றேன், மாடிலதான் இருப்பேன் பயப்படாத” என்றுவிட்டு கிளம்பிப் போக,

இவள் அவன் திரும்பி வருவதற்குள், கிட்சனை குடைந்து சில கிண்ணங்களில் எண்ணெய்விட்டு, கிடைத்த துணி கொண்டு திரி போட்டு, தீப்பெட்டியை கண்டு பிடித்து விளக்கும் ஏற்றி,

இருந்த ப்ரொவிஷன் வைத்து நூடுல்ஸ், கொஞ்சம் சாண்ட்விச், காஃபி என தயார் செய்து முடித்திருந்தாள்.

“வெளிச்சத்தில் பார்த்தாதான் எதுவும் செய்யலாம் போல, நாளைக்கு மார்னிங்க் பார்க்கனும்” என சொல்லிக் கொண்டே அவன் உள்ளே நுழையும் நேரம்,

வரவேற்பறையில் கேண்டில் லைட் டின்னர் போல், இந்த விளக்கு லைட் டின்னர் காத்திருந்தது அவனுக்கு.

அதை முதலில் பார்க்கவும் அவன் முகத்தில் வந்த அந்த அதிர்ச்சியும் சந்தோஷ மெச்சுதலும் நிச்சயமாக இவளுக்கு பிடித்தது.

ஆனால் ”வெரி சாரி, இதுக்கு மேலயும் நான் இங்க இருந்தா வீட்டுக்கு போக முடியுமான்னு தெரியலை, அதனால கிளம்புறேன்” என்ற அவனது அடுத்த ஸ்டேட்மென்டில் அரண்டு போனாள்.

“அச்சோ நான் பயத்துலயே செத்துடுவேன், போறதுன்னா என்னையும் கூட்டிட்டு போங்க” சொன்னபடி அவனுக்கு முன்பாக கிடுகிடுவென படி இறங்கியவள், பாதியிலேயே நின்று போனாள்.

தரைத் தளம் பாதிக்கு மேல் தண்ணிருக்குள் இருந்தது, அதைப் பார்த்தபின் அவனும்தான் எங்கு போக???

அடுத்து ஒரு திக் திக்குடனே மௌனமாய் சாப்பாடு முடிய,

“நான் விழிச்சுதான் இருப்பேன், தண்ணிய பத்தி யோசிக்காம ரூம்ல போய் படு” என இவளை அனுப்ப முனைந்தான் அவன்.

“நீங்க டிடி போடனும், இங்க ஃப்ர்ஸ்ட் எய்ட் பாக்‌ஸ்ல அது கூட இருக்குது, போட்டுக்கோங்க.” என்றபடி நின்றாள் இவள்.

அடுத்து அதை எப்படி போட வேண்டும் என இவள் டியூஷன் எடுக்க, அதில் அவன் முழிக்க, அவன் தோளில் இவள் தியரில படித்ததை ப்ராக்டிகாலா ப்ராக்டிஸ் செய்து, ஒரு வழியாக வெற்றிகரமா இவள் முடிக்க,

“கால விட கைதான் வலிக்குது” என கண் சிமிட்டியபடி அவன் சர்டிஃபிகேட் கொடுத்தான்.

ஒரு கணம் உர் என முறைத்தாலும் அவன் கிண்டல் செய்கிறான் எனப் புரிந்ததால்,

“வலிக்கட்டும் வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும், வலிக்கிறதுக்குதான இஞ்செக்ஷன் போடுறதே” என்றாள் இவள்,

அவனிடம் அந்த அளவு இலகு நிலை வந்திருந்தது இவளிடம்.

அடுத்து குட் நைட்டுடன் இவள் தனக்கான அறைக்கு வந்துவிட்டாள்.

உள்ளே தாழ் இட்டு படுக்கையில் படுத்தவளுக்கு அதுவரை வெள்ளம் மேல் இருந்த கவனம் அண்ணா மேல் திரும்பியது.

ஆது எங்க போனான்? இந்த வெள்ளத்தில் அவன் என்ன செய்துட்டு இருப்பான் என ஆயிரம் குடச்சல்.

றுநாள் பொழுது புலரும் வரையுமே இது தொடர்ந்தது.

காலையில் ஓரளவு தண்ணீர் வடிந்திருக்க,

“இப்படி தண்ணி வர்ற இடத்துல உன்னை என்னால விட்டு வைக்க முடியாது” என்றபடி இவளை வேறு ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டான் துங்கவ்.

அந்த வீட்டின் பார்க்கிங்கில் போய் காரை நிறுத்தும் வரைக்குமே அது யார் வீடு என எதுவும் சொல்லி இருக்கவில்லை அவன்.

காரைவிட்டு இறங்கவும் கண்ணில் பட்ட அந்த வீட்டின் அளவு இவளை பதற்றமாக்கியது என்றால்,

அதற்குள் கார் அருகில் வந்துவிட்ட அந்த சற்று வயதான பெண்மணியின்,

“நைட் எங்கடா இருந்த? உன் நம்பர் வேற ஸ்விட்ச் ஆஃப்? அப்படி ஒரு வெள்ளம்? எங்க போறன்னு யார்ட்டயாவது ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்ருக்கலாமில்லையா?” என்ற வார்த்தைகளில் தெரிந்த உரிமை இன்னுமாய் பதற வைக்கிறது இவளை.

இப்போதுதான் இவளைப் பார்த்தவர், ஒரு கணம் விஷயம் புரியாமல் பார்த்தாலும், அடுத்த கணம் முகத்தில் எதையும் வெளிப் படுத்தாமல், வெகு இயல்பான சந்தோஷப் புன்னகையுடன்,

“வாம்மா,” என வரவேற்றார்.

அவன் அறிமுகம் செய்யும் முன்னமும் இவள் ஏறத்தாழ யூகித்திருக்க,

“இது என் அம்மா” என இவள் புரிதலை சரி என உறுதி செய்தான் அவன்.

“அம்மா இது அனிச்சா” என அவன் சொல்லும் முன்னும் மரியாதையாய் கை கூப்பியவள்,

”சாரி நான் இங்க வர்றது சரி வராது” என்றாள்.

இப்பொழுது இவளை ஒரு முறை முறைத்தான் அவன்,

”இப்படித்தான் எல்லாத்தையும் வெளிய வச்சு பேசுவியா?” அவன்தான்.

“இல்ல யாரும் பார்க்க முன்னால என்ன அனுப்பி வச்சுடுங்க, ப்ளீஸ், என்னை இங்க பார்த்தா உங்க பெரியப்பா வீட்டுக்கு உங்க மேல கோபம் வரும், தேவையில்லாம உங்களுக்குள்ள ரிலேஷன்ஷிப் இஷ்யூ ஆகும்” இவள் தன் பக்க காரணத்தை விளக்க,

துங்கவ் அவன் அம்மாவைப் பார்த்தான், அவன் அம்மா இவனை. அந்த பார்வை பறி மாற்றத்தில் இருந்தது என்ன?

அடுத்த பக்கம்

Advertisements