இன்பம் எனும் சொல் எழுத 3 (3)

கொஞ்சமாய்த்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் கால் ஊன்றி இருக்கும் தரையில் தண்ணீரின் அளவு உயர்வது தெரிகிறது இவளுக்கு,

திக் திக்,திக் திக்.,

என்ன செய்ய வேண்டும் இவள்?

தண்ணீர் கணுக்காலைத் தாண்டும் போது, இங்கயே இவ்வளவு தண்ணினா வெளியே எவ்வளவு இருக்கும் என கேள்வி வந்து கிடுகிடு என ஆடுகிறது உடம்பு. நடு நடுங்கிப் போகிறது மனது.

இன்னும் என்ன செய்றான் அவன்?

அவன் காலில் இருந்த காயம் நியாபகம் வர, மயங்கி எதுவும் விழுந்திருப்பானோ என்ற அடுத்த பயக் கேள்வியில்,

“துங்கவ் சார், துங்கவ் சார்” என கூப்பிட ஆரம்பித்தவள்,

அடுத்த 17 ஆம் நிமிடம் 22 வது நொடி, இடுப்பு அளவு தண்ணீரில் இறங்கி அவனைத் தேடி ஓடிக் கொண்டிருந்தாள்.

முன்பு அவன் வந்தானே அந்த திசையிலேயே ஓடினாள்.

டேம்ல இருந்துதான் தண்ணி திறந்து விட்ருப்பாங்க, முதலை வரும்னு சொன்னானே, இவன் கால்ல வேற ரத்தம், ரத்தவாடைக்கு இவனை அது…

என்னதெல்லாமோ மனதில் அலை மோத, பதறியடித்து அவன் பேரைச் சொல்லி அலற அலற ஓடியவள், ஒரு கட்டத்தில்,

“ஹேய், இங்க எங்க வந்த? வீட்லதான இருக்க சொன்னேன்?” என்ற அவன் பதிலில்,

“முதலை… ரத்த வாடை… கால்ல உங்களுக்கு…”

மூச்சிளைப்பதிலும் இருக்கும் பயம் மற்றும் பதற்றத்திலும் எதையும் முழுதாய் சொல்ல முடியாமல், கடைசியில் அழுது வைத்தவள்,

இதற்குள் அவசர அவசரமாய் இவளிடம் வந்திருந்தவன் கையை அப்பிப் பிடித்தாள்.

அவனைப் பிடித்த அவள் கை மீது தன் மறுகையை வைத்த அவனோ,

“அனிச்சா, ப்ளீஸ், ரிலாக்‌ஸ், எனக்கு ஒன்னும் இல்ல” என மென்மையாய்ச் சொன்னவன்,

“இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா?” எனும் போது குழந்தையிடம் பேசும் தொனிக்கு வந்திருந்தான்.

“என்னை பிடிக்கிற முதலை உன்னைப் பிடிக்காதா? இப்படியா ஓடி வருவ?” அவன் கேட்கும் போதுதான் அதுவே தோண, இவளுக்கு இப்ப என்ன சொல்லவென தெரியாத நிலை.

இவள் பே பே என முழிப்பதை அந்த இருட்டிலும் உணர்ந்தானோ?

“உண்மையிலேயே தண்ணி ரொம்ப அதிகமாவே உள்ள வருது, என்ன இஷ்யூன்னு தெரியலை, கவ்ஸை இனியும் இங்க வைக்க முடியாது, பாவம் தண்ணில போய்டும், அதனால வீட்டுக்கு ஷிஃப்ட் செய்ய போறோம்” என பேச்சை மாற்றினான்.

“எமெர்ஜென்சி லேம்பல சார்ஜ் ஓவர்” விளக்கினான்.

“வீட்லயும் தண்ணி” இவளும் சொல்ல வேண்டியதைச் சொன்னாள்.

அடுத்து அந்த செக்யூரிட்டி இரண்டு பேரும் இவனுமாக சேர்ந்து மாடுகளை ஒன்றொன்றாக மொட்டை மாடிக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

கூடவே முடிந்த வரை அதுக்கு தீவனம் வேற எடுத்து வைந்து வைத்தார்கள்.

இவள் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசலில் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் ஓட்டி வந்த ஹம்மருக்கும், இவளது அண்ணா சொன்ன இவனது பேக்ரவ்ண்டிற்கும்,

பேண்ட்ஸை மடித்து விட்டுக் கொண்டு தொப்பல் தொப்பலாய் நனைய மாடுகளை காப்பாத்தி வைக்க அவன் செய்யும் வேலைக்கும்,

அண்ணாக்கு இவனை எதுக்கு பிடிக்குது என இவளுக்கு புரிவது போல் இருக்கிறது.

“எங்க வீட்டுக்குள்ள தண்ணி வராதுங்கய்யா, ஆனாலும் நாங்க போகனும்” கேட்ட  செக்யூரிட்டீஸை அனுப்பி வைத்தவன்,

அவங்க வீடெல்லாம் என்ன ஆகும் என முழித்துக் கொண்டு நின்ற இவளிடம்,

“இங்க பூர்வீகமா ஊர் இருக்ற எந்த இடத்துக்கும் தண்ணி வராது, ஏரில அணை கட்றதுக்கும் முன்னமே உள்ள ஊர் அதெல்லாம், மேடான இடத்துல மட்டும்தான் ஊரே இருக்கும், அதனால அங்க தண்ணி போகாது” என விளக்கம் சொன்னவன்,

“அதனால அவங்களை நினைச்சும் பயந்துட்டு இருக்காத” என முடித்த போது தனக்கே இவனை எதற்கு பிடிக்கிறது என்பது சற்று புரிந்தது போல் இருந்துது அனிச்சாவுக்கு.

தொடரும்..

இன்பம் எனும் சொல் எழுத 4

Advertisements

One comment

Leave a Reply