இன்பம் எனும் சொல் எழுத 3 (2)

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ஒரு 15 நிமிஷத்துல வந்து சொல்லிட்டு கிளம்பிடுவேன், உன் ஆது அண்ணாவ கண்டு பிடிக்க வரைக்கும் நீ இங்க தங்கிக்கோ, உனக்கு பாதுகாப்பு” என்றுவிட்டு இறங்கிப் போனான்.

15 நிமிடங்கள் எனதான் சொல்லிவிட்டுப் போனான், ஆனால் அடுத்த ஒரு மணி நேரம் கிட்டவே அவன் வரவில்லை.

முதலில் சற்று நிதானமாய் இருந்தாலும் நேரம் போகப் போக அனிச்சாவுக்கு பதற்றம் ஏறிக் கொண்டே போகிறது.

இதில் சற்று நேரத்தில் பவர்கட் வேறு, ஓரளவிற்குப் பொறுத்துப் பார்த்தவள், பின் மெல்ல இறங்கி தரைத் தளத்துக்குப் போனாள்.

சுற்றிலும் கும்மி இருட்டு என்பதைத் தவிர ஏதுமில்லை.

வீட்டின் கதவிலிருந்து முதல் படியில் கால் வைக்க நினைக்க, அத்தனை படியும் தண்ணீரில் மூழ்கி தண்ணீர் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்குள் நுழையும் என்ற அளவில் நிற்கிறது எனப் புரிகிறது இவளுக்கு.

ரு வேளை சொல்லாமலே கிளம்பி வீட்டுக்குப் போய்ட்டானோ என தன்னை சமாதானப் படுத்த நினைத்தால் ஷெட்டில் இருந்து கார் கிளம்பிய சத்தம் எதுவுமே இது நேரம் வரை கேட்கவில்லையே என்றும் இருக்கிறது.

இப்படியாய் ஒரு மணி நேரம் கழிய, இப்பொழுது தவிப்பின் உச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இவள் நின்றிருக்க,

“ஹேய் தேர், நான் கூப்டுறது கேட்குதா? ரூம்ல பெட்டுக்கு கீழ எமர்ஜென்சி லேம்ப் இருக்குது எடுத்துட்டு வர  முடியுமா?” அவன் எங்கிருந்தோ கேட்பது காதில் விழுகிறது.

ஓடிச் சென்று மாடியிலிருந்து அதை எடுத்துக் கொண்டு இவள் குரல் வந்த திசையில் ஓடினாள்.

“ஹேய், ஏன் தண்ணில இறங்கின? பயப்படுவியே, வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன” என்றபடி இவள் கையிலிருந்த விளக்கை வாங்கியவன், ஒரு கணம் குனிந்து தன் காலைப் பார்த்துக் கொண்டான்,

இயல்பின் படி  இவளும் பார்வை தாழ்த்தி அவன் காலைப் பார்க்க, ரத்த பார்டருடன் அங்கு ஆழமாய் நீளமாய் பிளந்து நின்றது சதை.

பார்க்கவே பக்கென்றது இவளுக்கு.

“ப்ச்,ஓங்கி வெட்டிட்டேன் போல” என்றதோடு காயத்தை அசட்டை செய்த அவன்,

“இங்க இருந்து லைட்டை தூக்கி காண்பிச்சா வீட்டுக்கு போய்டுவியா? இல்ல நான் வரனுமா? வேலை பார்க்கிற எல்லா ஃபேமிலியும் பக்கத்துல எங்கயோ மேரேஜ் வீடாம் போய்ருக்காங்க, ரெண்டு செக்யூரிட்டியோட சேர்ந்து தண்ணிய வெட்டி வயல் பக்கமா திருப்பி விட்டுட்டு இருக்கேன்.இல்லனா மாடு இருக்க இடத்துக்கு தண்ணி போய்டும்”

என்ன செய்து கொண்டிருக்கிறேன் என சொல்லி அவள் முகம் பார்த்தான்.

“அதெல்லாம் வீட்டுக்கு போய்டுவேன், ஆனா நீங்க உங்க  காலைப் பார்த்துக்கோங்க, செப்டிக் ஆகிடக் கூடாது” தயங்கித் தயங்கி சொன்னவள்,

“என் பேரு அனிச்சா” என்றுவிட்டு மீண்டுமாய் திரும்பி வந்து வாசலில் நின்று கொண்டாள்.

“தேங்க்ஸ், வீட்டுக்கு போற வழியில ஹாஸ்பிட்டல் போய்ட்டுதான் போவேன்” என்றுவிட்டுப் போனான் அவன்.

அடுத்து கொஞ்ச நேரம் கழிய, இப்பொழுது வீட்டிற்குள் தண்ணீர் வரத் துவங்கியது, மெல்ல புரிய துவங்கிறது இவளுக்கு ஆபத்தின் அளவு.

அடுத்த பக்கம்

Advertisements