இன்பம் எனும் சொல் எழுத 3

னதில் தோன்றியதையெல்லாம் சட் சட்டென கேட்கும் நிலையில் இவள் இல்லையே!

இப்படி இவனோட கிருபையில் இவ தப்பிக்கிற அளவில் நின்று கொண்டு எப்படி அவனிடம் நீ என்ன நினைக்கிற? என் அண்ணா என்ன காய் மூவ் பண்றான் என கேட்பதாம்?

அதற்காக கேட்காமலும் இருக்க முடியலையே?!

தயங்கி தயங்கி இவள் வாயை திறக்க நினைத்த நொடி, அந்த கார் ஷெட்டின் சுவரில் இருந்த ஸ்விட்சை தட்டி லைட்டை ஆன் செய்தான் அவன்.

தோராயமாய் அவன் இருந்த திசையைப் பார்த்துக் கொண்டிருந்தவள் வெளிச்சத்தில் மீண்டுமாய் பேச ஆரம்பிக்க,

அவனோ வெகு இயல்பாய் தன் கோட்டை கழற்றி காருக்கு மேலே போட்டான், அடுத்தபடியாய் தன் டையை களைந்தான், அதையும் காரின் மேல் எறிந்தவன், இப்போது கழுத்தை இறுக்கி பிடிந்திருந்த காலர் பகுதி பட்டனை கழற்றத் தொடங்கினான்.

இதற்கு மேல் வைத்த கண் வாங்காமல் இவள் அவனை எப்படி பார்த்துக் கொண்டிருக்கவாம், சட்டென திரும்பிக் கொண்டாள்,

இவள் செயலைப் பார்த்து “ஹேய்,”.என எதோ ஆரம்பித்த அவன்,

அடுத்து எதுவும் சொல்லவில்லை. பின் சில நொடிகளுக்குப் பின் இவளை கடந்து கார் ஷெட்டின் வாசலில் வந்து நின்றவன், பின்னாலிருந்த இவள் புறம் திரும்பாமலே

“பார்த்தல்ல மழைல நானும்தானே நனைஞ்சுருக்கேன், அதான், அதுக்குப் போய் இப்படி டென்ஷனாகி, எனக்கே எதோ தப்பு செய்த மாதிரி தோணிட்டு, வாட்டெவர் தப்புனா சாரி” என்றுவிட்டு முன்னால் நடக்க தொடங்கியவன்,

பின் சட்டென நின்று, ”வெளிய தண்ணி தேங்கி இருக்குது, ப்ளீஸ் பேண்ட்ஸை மடக்கிகிறேன், அதுக்கும்  டென்ஷனாகாத“ என்றபடி குனிந்து அவன் சொன்னதை செயலாக்க,

இவளுக்கு ஒரு பக்கம் சின்னதாய் சிரிக்க வருகிறதெனில் மறுபக்கம்  அசடு வழிதல் ஆப்டாய் படுகிறது.

“என் பின்னாலயே வா, இங்க சரியா வெளிச்சம் கிடையாது, கொஞ்சம் தண்ணியா இருக்குது“ சொன்னபடி நடந்தவனை அவன் கால் வைத்த இடத்தில் மட்டும் கால் வைத்து பின் பற்றியவள்,

“பாம்ப பார்த்த பயப்படாத” என சொல்ல வந்ததை  அவன் சொல்லிக் கூட முடிக்கவில்லை,

பயத்தில் “ஹிக்” என விக்கெலெடுக்க சற்றாய் தடுமாறி எதோ கல்லில் கால் வைத்து சின்னதாய் வழுக்கி தொப்பென விழுந்தாள்.

“ஹேய்” என்றபடி விழுந்தவளை அவசரமாய் கை கொடுத்து தூக்கிவிட்டவன்,

”எல்லாம் தண்ணிப் பாம்பு, அதை சொல்றதுக்குள்ள இப்படியா?!” சலித்துக் கொண்டான் துங்கவ்.

“ஆனாலும் நீ செம டச் மி நாட் போல, இதுக்கே இப்படி டென்ஷனாகிற, டேம்ல தண்ணி திறந்துவிட்டு இங்க தண்ணி வந்தா சில டைம் முதலை கூட வரும்னு சொல்வாங்க” என்றபடி வீட்டு படிகளில் ஏற,

அவனுக்கும் முன்பாய் ஓடிப் போய் அதில் ஏறி நின்றிருந்தாள் இவள்.

அவன் கேலியாய் சிரிக்கிறானோ என ஒரு உணர்வு இவளுக்கு, ஆனாலும் அவனை இவள் திரும்பியே பார்க்கவில்லை.

கதவை திறந்து உள்ளே நுழைந்து மின்விளக்கைப் போட்டவன்,

”கீழ் ஃப்ளோர் ஸ்டோர் ரூம், இங்க ஃபார்ம்ல விளையுறது எல்லாம் வச்சு எடுப்பாங்க, மாடிதான் தங்க வசதியா இருக்கும்“ என்றபடி மாடிப் படிகளில் ஏறத் தொடங்கினான்.

“இது எங்க ஃபார்ம், இங்க விவசாயமும் செய்றோம், டெய்ரி ஃபார்மும் உண்டு, உள்ள நாலு குடும்பம் தங்கி இருந்து பார்த்துக்குறாங்க,

அவங்க வீடு அந்த பக்கமா இருக்கும், இந்த கேட் கீ மட்டும் நம்மட்ட இருக்கும், நானாவது அப்பாவாவது வருவோம்”

சொல்லியபடி மாடியை அடைந்து அந்த கதவையும் திறந்து அதன் விளைக்கையும் போட்டான்.

ஒரு சின்ன வரவேற்பறை ஒரு படுக்கை அறை ஒரு சமையலறை என பார்க்கவும் புரியுமளவிற்கு இருந்தது அந்த வீடு.

“விளை நிலத்துல வீடு கட்ட கூடாதுன்றதால ஃபார்ம்க்கு தேவைக்கு மேல பெருசா எதுவும் இங்க செய்யலை” விளக்கியவன்

“நீ அந்த ரூமை எடுத்துக்கோ, நனைஞ்சுட்டல்ல, உள்ள டவல் இருக்கும்” என்றபடி படுக்கை அறையை சுட்டிக் காண்பித்தான்.

தனியா இவன் கூட இந்த வீட்டுக்குள் வர அவள் சங்கடப்படுவாள் என உணர்ந்து இயல்பாய் உணரவைக்க அவளிடம் பேசிக் கொண்டே வந்திருக்கிறான் என புரிகிறது இவளுக்கு.

அடுத்த பக்கம்

Advertisements