இன்பம் எனும் சொல் எழுத 2 (3)

குனிந்த தலை நிமிராமல் “சாரி” என மெல்லமாய் சொல்லி வைத்தாள்.

“ஆது ரொம்ப சாஃப்ட் அன்ட் சென்சிடிவ், கண்டிப்பா யாரையும் கஷ்டபடுத்த மாட்டான்” அதே குனிந்த தலை, இறங்கிப் போன குரலில் இவள்,

சில மாசமாவே இவள் இதை பார்த்திருக்கிறாள்.

.லேட்நைட்ல வீட்டு காம்பவ்ண்ட்குள்ள நடந்துகிட்டே அவனுக்கு அடுத்து போய் நின்னா கூட நமக்கு காதுல விழாத குரல்ல யார்ட்டயோ பேசிட்டு இருப்பான் ஆது, அப்ப அது லவ் மேட்டரா இருக்கும்னு இவளுக்கு தோணலை,

இப்ப ஆது லவ் பண்ணிதான் கூட்டிட்டு போய்ருப்பான் என சொல்ல தோணுகிறது இவளுக்கு.

எவனோ ஒருத்தன் கிட்நாப் செய்துருக்கான்றப்ப வர்ற பயத்தைவிட லவ் பண்ணவன் கூட போய்ட்டான்ற இந்த விஷயம் கொஞ்சம் வலி கம்மியா இருக்கும்தானே, இல்லையோ ?

என் வீட்டு பொண்ண தூக்கினா பதிலுக்கு உன் வீட்டு பொண்ண தூக்குவேன்ற காட்டுமிராண்டி  சிந்தனை உள்ளவங்களுக்கு இந்த காதலுக்கு கிட்நாப்பே பெட்டரா தோணுமோ? இவள் மனம் தடுமாற,

“அவங்க லவ் பண்றாங்கன்னு உனக்கு தெரியுமா? இஷு விரும்பித்தானே போயிருக்கா?“  கண் நிறைய பரிதவிப்போடு இப்போது அந்த துங்கவ் கேட்ட போது,

அடுத்து எதையும் யோசிக்க தோணவில்லை இவளுக்கு, ஆதுவின் மொபைல் பேச்சைப் பற்றி அவனிடம் சொன்னாள்.

அடுத்து நொடிக் கணக்கில் சைலண்டாய் இருந்த துங்கவ், “உன் வீட்டப் பத்தி சொல்லு“  என்றபடி  காரை மீண்டுமாய் கிளப்பினான்.

“வீட்ல நானும் ஆதுவும் தான், அப்பா வெளிநாட்ல வேலை பார்த்தாங்க, அம்மா இங்க பேங்க் எம்ப்ளாயி, என் ஆறு வயசு வரை அப்பா இயர்லி ஒன்ஸ் வந்துட்டு போவாங்க,

ஆனா அடுத்து வரலை, கொஞ்சம் கொஞ்சமா போன்ல பேசுறதையும் நிறுத்திட்டாங்க, இப்ப எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது.

அதனாலயே ஆது IIT ல பி இ முடிச்சான், எப்பவுமே அவன் குடும்ப நிலை உணர்ந்தவன், பொறுப்பா நடந்துப்பான், அப்பா இல்லைனு நானோ அம்மாவோ ஃபீல் பண்ண முடியாத அளவு எல்லாம் பார்த்துபான்.

நான் பிஎஸ்சி பயோக்மிஸ்ட்ரி, ஃபைனல் இயர்ல இருக்கப்ப அம்மா தவறிட்டாங்க, ஆதுவும் நானும்தான் வீட்ல இப்ப.

அப்பா மாதிரி தானும் ஆகிடக் கூடாதுன்னு அவனுக்கு ஒரு வெறியே உண்டு, பொண்ணுங்கட்ட ரொம்ப மரியாதையா நடந்துப்பான்,

அவன் எப்படி லவ் பண்ணான்னே தெரியலை, ஆனா எது எப்படினாலும் என்னை இப்படி தனியா விட்டுட்டு போறதெல்லாம் ஆதுவுக்கு முடியவே முடியாது,

கண்டிப்பா எனக்காக வருவான் எங்கண்ணா” இவள் பேசி முடிக்கும் போது கார் எங்கயோ காட்டுக்குள் இருந்த கேட் முன் நின்றிருந்தது.

சுற்றி இருந்த கடும் இருட்டில் கார் கதவை திறந்து கொண்டு இறங்கிய அந்த துங்கவ் முகம் சிடுசிடுப்புடன் இருப்பது காரின் வெளிச்சத்தில் இவளுக்கு சற்றாக தெரிகிறது.

“அண்ணன் தங்ச்சி ரெண்டு பெரும் லூசு போல” சிடுசிடுத்துக்  கொண்டே  சென்று எதிரில் இருந்த கேட்டை திறந்தவன், மீண்டுமாய் காரில் ஏறி,

“அவன் என்னனா தங்கச்சிய வீட்ல தனியா விட்டுட்டு பொண்ண கூப்டுட்டு ஓடிப் போய்ருக்கான், இவ பொண்ணு வீட்டு காரங்கட்ட எப்படியும் எங்க அண்ணா எனக்காக வருவான்னு சவால் விட்டுட்டு இருக்கா” என எரிச்சலும் ஏளனமுமாய் சொன்னவன்,

“இப்படி சொன்னா உங்க அண்ணாவ பிடிக்கிறதுக்காகவே உன்னை தூக்கிட்டு போக மாட்டாங்களா?” என்றபடி காரை உள்ளே தெரிந்த ஒரு ஷெட்டில் சென்று நிறுத்தினான்.

“இனிமதான் தூக்கனுமா என்ன? என இவள் முனுமுனுத்தது அவன் காதில் விழுந்தது போலும்,

“அப்படி வேற நினைப்பிருக்கா?“ என்றபடி இவள் பக்க கதவை திறந்தவன், கட்டி இருந்த இவள் கைகளை அவிழ்த்துவிட்டான்.

“கார்ல பின் சீட்ல இருந்துட்டு ட்ரைவ் பண்ற என் கூட நீ சண்டை போட்டா, காரோட நாம graveyard போற மாதிரி ஆகிடும்னுதான் உன் கைய கட்டினேன்,

மத்தபடி உன் அருமை பெருமை மிக்க அண்ணா மாதிரி நான் லூசும் கிடையாது மனசு இல்லாத மிருகமும் கிடையாது, என் பெரியப்பா கைல மாட்டி நீ எக்கேடும் கெட்டுப் போன்னு விடுறதுக்கு,

அதான் கூட்டிட்டு வந்தேன், இஷ்பா என் பெரியம்மா பொண்ணு” என விளக்கி முடித்தான்.

அவன் முகத்தை தவிப்பும் அவமானமும் குற்ற உணர்ச்சியும் நன்றிப்பெருக்குமாய் பார்த்தபடி காரில் இருந்து இறங்கியவள் மீண்டுமாய் ஒரு ‘சாரி’ யை உதிர்த்தாள்.

“அண்ட் தேங்க்ஸ்” வேற என்ன சொல்லன்னு இவளுக்கு தெரியவில்லை. ரொம்பவும் தர்ம சங்கடமாய் ஒரு உணர்வு.

ஆதுவ கைலபிடிச்சு அப்பளமா அடிச்சு நொறுக்கலாம் போல ஒரு கோபமும் வருகிறது இவளுக்கு.

என்னதான் நினைச்சான் அவன்? இந்த துங்கவ்ட்டயாவது தன் லவ் மேட்டர சொல்லி இருக்கலாமே அவன்?

பிழிஞ்சு வச்ச துணி மாதிரி சுருங்கி இருந்த இவள் முகத்தைப் பார்த்தான் போலும் அந்த துங்கவ்,

“என்னாச்சு?” என்றபடி காரை லாக் செய்தான்.

“இல்ல ஆது உங்கட்டயாவது இந்த விஷயத்தை சொல்லி இருக்கலாம், அவனுக்கு உங்க மேல ரொம்ப நல்ல இம்ப்ரெஷன் உண்டு” சற்று திக்கியபடி இதை சொல்லி முடித்தாள் இவள்.

சட்டென அந்த துங்கவின் பார்வை மாறியது, ஒரு சீரியஸ் லுக்கிற்குப் போனவன்,

“உன் அண்ணா கூட யோசிச்சுதான் காய் மூவ் பண்றான் போல” என சொன்ன விதத்தில் இவளுக்குள் பயம் பாத்தி கட்டியது.

தொடரும்…

இன்பம் எனும் சொல் எழுத 3

Advertisements

One comment

Leave a Reply