இன்பம் எனும் சொல் எழுத 2 (2)

ப்பொழுது கார் மீண்டுமாய் கிளம்பிச் செல்ல,

”உன் அண்ணா எங்கயும் போறதா ரீசண்ட் டைம்ல சொல்லி கேள்விபட்ருக்கியா, எங்கயாவது விசா ட்ரைப் பண்ண மாதிரி லைக் தட் எதாவது ட்ராவல் ப்ளான் செய்து பார்த்திருக்கியா?

பைதவே, உன் பேர் என்ன, பேர் இல்லாம இப்படி மொட்டை மொட்டையா பேச முடியலை”  விசரணையை துவங்கினான் துங்கவ்.

படுத்திருந்தவள் சீட்டில் எழுந்து உட்கார்ந்தாள் இப்போது.

‘இவள வச்சு இவன் என்ன கேம் விளையாடுறான்? இவள தேடுற மத்தவங்கல்லாம் யாரு?  ஏன் தேடுறாங்க? இவன் ஏன் அவங்களை தேடச் சொல்றான்?

அதே நேரம் அவங்கட்ட இருந்து இவன் ஏன் இவள ஒழிச்சும் வைக்கான், இந்த விளையாட்டுக்கு பலி ஆடு ஆதுவா?

ஆதுவ என்ன செய்யப் போறான் இவன்? அவங்களால ஆதுக்கு எதுவும் ஆபத்தா? இப்படி பலவும் இவளுள் மண்ட,

“எனக்கு சொந்தம்னு இருக்றது என் அண்ணா மட்டும்தான், தயவு செய்து அவனை உயிரோடு திருப்பி தந்துடுங்க” ரியர்வியூவில் தெரிந்த அவன் கண்களைப் பார்த்து கெஞ்சினாள்.

பதிலேதும் சொல்லாமல் சற்று நேரம் காரை செலுத்திய அவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மெயின் ரோடைவிட்டு பிரிந்த இருண்ட கிளைச்சாலையில் திருப்பி காரை நிறுத்தியவன்,

தன் இடக்கையால் இடப் பக்க புருவத்தை சற்று தேய்த்துக் கொண்டு,

“உன் அண்ணா என் தங்கைய கிட்நாப் செய்துட்டான்” என சைலண்டாய் ஆட்டம் பாம் வெடித்தான் இவள் முன்னிலையில்.

அரண்டு போனாள் இவள், இப்படி ஒன்றை இவள் எதிர்பார்க்கவே இல்லையே!

“கிட்நாப்னா எனக்கு ஒரு யூகம், அவங்க லவ் பண்றாங்களோன்னு” அவன் தொடர

மயக்கம் வராத குறை இவளுக்கு.

ஆதன் இப்படி எதையும் இவளிடம் கோடிட்டது கூட கிடையாது.

என்ன நம்பிக்கையில் இப்படி செய்தான் அவன்?

AR க்ரூப்ஸ் பேக்ரவ்ண்ட் என்ன? அவர்களை இவளது அண்ணன் தனியாளாக எதிர்த்து நிற்பதாமா?

அதோடு இப்படி இவட்ட சொல்லாம கொள்ளாம கூடவா ஓடிப் போய்டுவான்??? அவங்கள இவ எப்படி சமாளிப்பா?

“ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்தோ பேசியோ யாருமே பார்த்தது இல்ல, ஆனா நான் ஒரே ஒரு டைம் அவங்களை கொஞ்சம் வித்யசமா ஃபீல் ஆகுற அளவுக்கு சேர்ந்து பார்த்துருக்கேன்,

விசாரிக்கிறப்ப இன்னைக்கும் உன் அண்ணா கூடதான் என் தங்கை போனதா தெரியுது, அவளா இஷ்டப் பட்டு போனாளோ இல்லையோ தெரியலை,”

“…..”

“எது எப்படினாலும் வீட்டுப் பொண்ண காணலைனா எப்படி இருக்குது தெரியுமா? எனக்கு அவ பத்ரமா என் கைல வந்து சேர்ற வரைக்கும் உயிர் இருக்காது”

பிசிறில்லாமல் பேசிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அந்த துங்கவ் கொந்தளித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

அனிச்சாவின் பலமா இல்லை இது பலவீனமோ, சட்டென இந்த துங்கவின் நிலை உணர்ந்து இவளுக்கு இரக்கம் தான் முதலில் தோன்றுகிறது.

இவ 9த் படிச்சுட்டு இருந்தப்ப, ஒரு டைம் ஸ்கூல்ல வச்சு இவ ஃப்ரெண்டுக்கு ரொம்ப ஜுரம், ஸ்கூல் முடியவும் அவளை தனியா அனுப்ப மனசு வராம இவ கொண்டு போய் விடப் போன ஆளு,

அவ வீடு புளியந்தோப்பு ஏரியா, இவளுக்கு முன்ன பின்ன சுத்தமா தெரியாத இடம், போறப்ப  கூட ஃப்ரெண்ட் வந்ததால ஒன்னும் ப்ரச்சனை இல்ல,

.திரும்பி வர்றப்ப இவ ஏறின பஸ் எதோ கட் சர்வீஸ் போல, இவ தெரியாம ஏறி, பாதி வழியில இறங்கி,

எப்படி வீட்டுக்கு வரதுன்னு தெரியாம செம டென்ஷனாகி, யார் யார்ட்டயோ விசாரிச்சு, எத்தனை பஸ்ஸோ மாறி வீட்டுக்கு வந்து சேர்றப்ப மணி கிட்டதட்ட 10.

நடுங்கிப் போய்தான் வந்து சேர்ந்தாள் இவள்.

இவங்க வீட்டு பஸ் ஸ்டாப்ல இறங்கிறப்ப அங்க அந்த ஆது தான் சுத்திகிட்டு இருந்தான், இவ ஸ்கூல் வரை போய் தேடி அலஞ்சுட்டு வந்திருப்பான் போல,

இவளைப் பார்க்கவும் கன்னா பின்னானு திட்டுவான், அடி கூட விழும்னு இவளுக்கு தோணுது.

ஆனாலும் அவன பார்த்ததே உயிர் வந்தது போல இருக்கவும் அவனைப் பார்த்து இவ ஓடினா, அதுக்குள்ள இவளப் பார்த்துட்ட அவன் ஓடி வந்து ரோடுன்னு கூட பார்க்காம இவள கட்டிப் பிடிச்சு அழுதுட்டான்.

“பயந்துட்டேன்டா, ரொம்ப பயமா இருந்துது, என்ன ஆச்சு? எவன் என்ன செய்தானோ? இப்ப பார்க்கிற நியூஸ்லாம் நியாபகம் வந்துன்னு” ஆரம்பிச்சு என்னலாமோ சொன்னான்.

அதை விட அவன் உடம்பு நடுங்கிட்டு இருந்தது இப்ப வரைக்குமே இவளுக்கு நியாபகம் இருக்கு.

அடுத்த வேலையா, அன்னைக்கே அம்மாட்ட பிடிவாதம் பிடிச்சு மறுநாளே மொபைல் வாங்கியும் கொடுத்தான், இத்தனைக்கும் அப்ப அவனுக்கு மொபைல் கிடையாது.

ஆதுவோட அந்த தவிப்புதான் இப்ப இவ இந்த துங்கவ்ட்ட பார்க்கிறதும், பார்க்க உண்மையில் பாவமா இருக்குது, ஆனா என்ன ஆறுதல் சொல்ல முடியும்?

அடுத்த பக்கம்

Advertisements