இன்பம் எனும் சொல் எழுத 2

ய் விடு, யார் நீங்க? என்ன வேணும் உனக்கு? எதுனாலும் என் அண்ணாட்ட பேசுங்க” என இவள் மரியாதைக்கும் ஒருமைக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்த நேரத்தில்,

இவள் வீட்டுக் கதவைத் திறந்து இவளோடு வெளியேறி, காம்பவ்ண்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த அவனது காரை அடைந்திருந்தான்.

இப்போது கார் கதவைத் திறந்து இவளை பின் சீட்டிற்குள் அவன் திணிக்க,

”டேய் விடுறா என்னை” என்ற நிலைக்கு வந்திருந்தாள் அனிச்சா.

இவள் என்ன கத்தி என்ன? அடுத்து அடுத்து வீடு இருந்தால் கூட இந்த மழையில் இவளது சத்தம் கேட்டு யாரும் வருவார்களா என சொல்வதற்கில்லை, இதில் இப்படி வீடில்லா ஊரில்???

இவளது துப்பட்டாவால் இவளது கைகளை சேர்த்து கட்டியவன் அவளை அந்த சீட்டில் விட்டுவிட்டு, ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை செலுத்த துவங்கினான் படு கேஷுவலாய்.

அவனது ஒரு அசைவில் கூட எந்த பதற்றமோ பயமோ குழப்பமோ எதுவும் இல்லை.

தினமுமே இதுதான் இவன் வேலையா?

ரியர்வியூவில் தெரிந்த அவன் கண்களில் மட்டுமே கவனம், அக்கறை மற்றும் கடும் கண்காணிப்பு.

நடப்பதை என்னதென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் அரண்டு போய் அனிச்சா.

“என் பேர் துங்கவ்” அவன் ஆரம்பிக்க, ஹார்ஸ் ரேஸ் கணக்கில் கன்னா பின்னாவென ஓடிக் கொண்டிருந்த இவள் இதயத்தில் ஏதோ ஒருவகையில் இம்மியளவு குறைகிறது இதுவரை ஏறி இருந்த பிபி.

காரணம் இவள் இந்தப் பெயரை நல்ல விதமாக எங்கேயோ கேட்டிருக்கிறாள்.

காருக்குள் ஏறும் முன் மழையில் நனைந்து விட்டதால் ஏற்பட்ட குளிரில் வெடவெடத்ததை விடவும் அதிகமாய் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவள்,

எங்க கேட்டா? ஓ, ஆதுதான் எப்பவோ சொன்ன ஞாபகம், அவனோட ஆஃபீஸ்ல,

ஹான்ன்ன்ன்ன் இது அவன் சி இ ஓ துங்கவன் அற்புதராஜா?

AR க்ரூப்ஸ் சேர்மனோட ஏக வாரிசு, இவன் இங்க என்ன செய்துட்டு இருக்கான்?

ஆது இவன எதோ ஒரு டைம் நேர்ல மீட் பண்ண முடிஞ்சுட்டுன்னு தலை கால் தெரியாம ஆடிட்டு இருந்தான்,

என்னமோ இவன மீட் பண்றதே எதோ அவார்ட் வாங்கின மாதிரினு சொல்லிட்டு இருப்பான்.

இதுல இவன் நம்ம வீடு வரை தெரிஞ்சு தேடி வந்திருக்கான், அப்படி என்ன விஷயமா இருக்கும்?

ஆது கண்டிப்பா எதுவும் ஃப்ராடு செய்துருக்க மாட்டேன், அப்படியே ஆது மேல எதாவது தப்புன்னு இவனுக்கு தோணிச்சுன்னா கூட போலீஸ்க்கு போயிருக்கனும் இவன்.

ஒரு வேளை கம்பெனி சீக்ரெட், வெளிய விஷயம் தெரிஞ்சுடக் கூடாதுன்னா கூட நாலு குண்டாஸைதானே அனுப்பி இருக்கனும் இவன்? அதைவிட்டுட்டு ஏன் நேர்ல வந்தான்?

என அவசர அவசரமாய் அனைத்தையும் குழப்பி கும்மி அடித்ததில்,

இந்த துங்கவனைப் பத்தி இவ அண்ணா கொடுத்திருந்த “துங்கவன் சார்க்கு என்ன ஒரு லீடர்ஷிப் தெரியுமா, சான்சே இல்ல, மனுஷன் gem of a person, ரொம்ப நியாயமும் பர்ப்பார், அதே டைம் ஒரு கேரிங் பெர்சனாலிட்டின்னு அவரை பத்தி சொல்லுவாங்க” என்ற சர்டிஃபிகேட் நியாபகம் வர,

‘டேய் அறிவுகெட்ட ஆது, கையில கன்னோட ஒரு வீட்டு மாடி கதவை உடச்சு உள்ள வர்றவன் தான் உனக்கு நியாயம் பார்க்கிற நல்ல மனுஷனாடா?’ என அண்ணாவுக்கு அடி மனதில் அத்தனை வகை அர்ச்சனையும் செய்து கொண்டே,

“என் அண்ணா ரொம்பவும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட் அண்ட் சின்சியர் எம்ப்ளாயி சார், எதாவது தப்பா போயிருந்தா கூட இன்டென்ஷனலா செய்துருக்க மாட்டான் சார், அப்படியேனாலும் நீங்க அஃபீஷியலா ஆக்க்ஷன் எடுங்க சார்” என இங்கே எதிரில் இருந்தவனை கெஞ்சிப் பார்த்தாள்.

இப்பொழுது ரியர் வியூவில் இவளைப் பார்த்த அந்த துங்கவோ,

”ஆஃபீஸ் விஷயத்துக்காகத்தான் நான் பிஸ்டலும் கையுமா சுத்துவனோ? உன் அண்ணா உன்ன கூட விட்டுட்டு இப்படி ஓடி ஒழிஞ்சுப்பானோ?” என பதில் கேள்வி கேட்டான்.

ஆனால் அடுத்த நொடியே

“சாரி,வீட்ல நீ மட்டும் தான் இருக்கன்னு தெரியாது” என்று மன்னிப்பும் கேட்டான்.

‘தெரிஞ்சிருந்தா என்ன செய்துருப்பானாம்? இவள் பேந்த முழிக்க, மனதிற்குள் முனங்கியது காதில் கேட்குமா என்ன?

கேட்ட மாதிரி “தெரிஞ்சிருந்தா பிஸ்டலை எடுத்துருக்க மாட்டேன்” என விளகெண்ணை ரேஞ்சில ஒரு விளக்கம் சொன்னான் பாருங்க,

இவளுக்கு ‘டேய்ய்ய்ய்ய் என்னடா நினைச்சுட்டு இருக்க?’ என கத்தனும் போல வருகிறது,

பொண்ண கடத்துறது தப்பு இல்லையாம் கன் எடுத்ததுதான் தப்பா போச்சுதாம்!

எது எப்படியோ தனக்கு முதலில் இருந்த பயம் அவன் வகையில் மெல்ல குறைந்து வருவதை உணர்ந்தாள்.

இதற்குள் எதிரில் ஒளிரும் ஏதோ வாகனத்தின் ஹை பீம் வெளிச்சத்தில் சட்டென நிற்கிறது கார்,

“படுத்துக்கோ எழும்ப மட்டும் செய்துடாத” இவளுக்கு கட்டளையிட்டவன் காரின் அவன் பக்க கண்ணாடி ஜன்னலை இறக்க,

அவன் குரலில் இருந்த எதோ ஒன்றில் இவள் எதையோ உணர்ந்ததால், அதை மீற தைரியமற்று சீட்டோடு சீட்டாக  பம்மினாள்.

திறந்த வின்டோ வழியாக மழையின் தூவனம் இவள் மீது தெறிக்கிறதெனில், வெளியே யார் நிற்கிறார் எனவும் தெரியவில்லை, என்ன சொல்கிறார் என எதுவும் புரியவில்லை.

“இங்க பார் நைட்டுக்குள்ள பொண்ணு கைக்கு வந்தாகனும்” இந்த துங்கவன் கடைசியாக சொன்னது மட்டும் காதில் விழுகிறது இவளுக்கு.

இவளை தன் காரிலேயே வச்சுகிட்டு, பொண்ணு கைக்கு வரனும்னு சொல்லிட்டு இருக்கான், ஏன்????

அடுத்த பக்கம்

Advertisements