கர்வம் அழிந்ததடி 8 (3)

‘குடும்பத்துக்கு அடங்காதவனா? யாரெல்லாம் இருக்காங்க அவர் குடும்பத்துல? மனைவி????? குழந்தைகள்????? ச்சீ ச்சீ இருக்காது? அவனைப் பார்த்தா அப்படித் தெரியலையே!!!!! கோபக்காரனா????? சிரித்துக் கொண்டே இருந்தானே!!!!! அவனைப் பார்த்தா அப்படித் தோணலையே!!!!’ குழப்பம் அதிகமாகியது அச்சுவிற்கு.

 

அக்ஷராவின் குழப்பம் அதிகமாக முழித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த மீனாவுக்கு சிரிப்பு வந்தது. இருந்தும் தன் பேத்தி இப்படி தலையை உடைத்துக் கொள்வது பொறுக்காதவராய் “சுலோவுக்கு அடங்கவே மாட்டான் அச்சும்மா அவன். பொய் சொன்னா பிடிக்காது. மொத்த குடும்பத்துக்கும் அவன் தான் செல்லப் பிள்ள. ஏன் அச்சும்மா??? அவன் உங்கிட்ட ஏதாவது வம்பிழுத்தானா? என்னாச்சு???” என்று பேச்சோடு பேச்சாக கேட்டு வைத்தார் மீனா. “அதெல்லாம் இல்லை… சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்” என்று விட்டு இதற்கு மேல் ஏதாவது கேட்டால் எங்கப்பா குதிருக்குள்ள இல்லைன்னு தானே காட்டிக் குடுத்தாற் போலாகி விடுமென்பதால் அங்கிருந்து மெல்ல அகன்றாள் அக்ஷரா.

 

வலிய அமிர்தனை தனது எண்ணங்களில் இருந்து ஒதுக்கி அன்றைய நடப்புகளை எண்ணியபடியே உறங்கிப் போனாள் அக்ஷரா. அடுத்த நாள் காலையில் சீக்கிரமே முழிப்புத் தட்ட எழுந்தவள் மெல்ல மீனாவிடம் சென்று “ஆச்சி!!!!! நான் இப்படியே ஜாகிங் போயிட்டு வரவா?” என்றாள். கருப்பு நிற ட்ராக் ஸூட்டில் வந்து நின்றவளைப் பார்த்த மீனாவும் மறுக்க தோன்றாது “நம்ம தெரு முக்குக்குப் போய் இடதுபக்கம் திரும்பினா வாய்க்காலுக்குப் போற வழி தான். போயிட்டு சுருக்கா வந்துரு.” என்று அனுப்பி வைத்தார்.

 

ஆச்சி சொல்லிய வழியில் சென்றவள் முன் விரிந்த பாதை அந்தக் காலை நேரத்திற்கு ரம்மியமான இருந்தது. வழிநெடுக இருபுறமும் தென்னை மரங்கள் அணிவகுத்தது. ஐபோடில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் பாடலை ஓடவிட்டபடி தனது சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டே ஓடினாள். ஐந்து நிமிட ஓட்டத்தில் வாய்க்கால் தென்பட்டது.

 

வாய்க்காலின் மறுபுறம் வயக்காடும் இந்தப்புறம் தோப்புமாக இருந்தது. ஓட்டத்தை மெல்ல நிறுத்தியவள் தன்னைச் சுற்றி பார்வையை ஓட்டினாள். எங்கும் பச்சை நிறமே. ‘பச்சை நிறத்துல இத்தனை ஷேட்ஸ் இருக்கா?’ என்று வாய்பிளந்து பார்க்கத் தோன்றியது. தென்னந்தோப்பின் ஒரு மூலையில் மயில் தோகைவிரித்து நின்றது.

Advertisements

அந்தக் காலை நேரத்து இளம்வெயிலும் தன்னைச் சுற்றி இருக்கும் பசுமையும், இந்த தோகைவிரித்த மயிலும் எல்லாமாகச் சேர்ந்து அக்ஷராவை ரசனையில் ஆழ்த்தியது. தனது ட்ராக் பாண்ட்டின் பாக்கெட்டிற்குள் கைவிட்டு தனது மொபைலை எடுத்து இதை எல்லாம் படம்பிடித்து வைத்துக் கொண்டாள். மயிலைப் படம்பிடிக்கும் பொருட்டு அதன் கவனத்தைக் கலைக்காமல் இருக்க அங்கிருந்த புதரின் பின் மெல்ல ஓசை எழுப்பாமல் சென்றாள்.

 

ஆசை தீருமட்டும் மயிலையும் அந்தக் காலை நேரத்துச் சூரியனையும் வளைத்து வளைத்து தனது அலைபேசிக்குள் அடக்க முற்பட்டு படமெடுத்துத் தள்ளினாள். ஃபோட்டோ எடுக்கும் மும்முரத்தில் தனக்கருகில் கேட்ட புஸ் புஸ் சத்தம் அவளது கவனத்தைக் கவராது போனது.

 

ஒரு க்ளோஸப் ஷாட் எடுக்கலாம் என்று காலைத் தள்ளி வைக்க எத்தனிக்கும் போது தான் தனது காலின் கீழிருந்த அந்தப் பாம்பைப் பார்த்தாள் அக்ஷரா. முதலில் அதனைக் கயிரென்றே எண்ணியவள் காலை அகற்றப் போக அது மெல்ல நெளியத் துவங்கவும் தான் புரிந்தது அது கயிறல்ல பாம்பென்று.

 

 

ஒருநிமிடம் மூச்சே நின்றுவிடும் போலானது அவளுக்கு. ஓசையில்லாமல் நின்றவளின் முன் தனது தலைவிரித்து நின்று ‘வரியா?’ என்பது போல் போஸ் கொடுத்தார் நமது நாகராஜன். உடலெல்லாம் தொப்பலாக வியர்த்து வழிய கண்கள் பயத்தில் விரிய பார்த்தபடி நின்றாள் அக்ஷரா!!!!!!!

 

தொடரும்!!!!!!!!

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

கர்வம் அழிந்ததடி – Comments Thread

 

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

Advertisements