கர்வம் அழிந்ததடி 6 (3)

“என்னிடம் வந்து சொல்லியிருக்கலாமே பேபி நீ. இப்படி எல்லார் முன்னாடியும் அவனை எம்பேரஸ் பண்ணிட்டியே. பாவமில்லையா அவன்.” என்றதற்கு “அங்கிள் உங்க பையனுக்கு அடுத்தவங்க பொருள் மேல் ஆசைப்படக்கூடாதுன்னு சொல்லிக் குடுங்க. பொய் சொல்லக் கூடாதுன்னும் சொல்லிக் கொடுங்க. ஆல்ஸோ இப்படி பையனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க. ஐ ஹேவ் ஸோ மச் ரெஸ்பெக்ட் ஃபார் யூ” என்று விட்டாள். அதற்கு மேல் அந்த மனிதர் என்ன சொல்லப் போகிறார்.

 

சத்தியனுக்கு ‘அந்த’க் குடும்பம் தன் மகளைப் பார்க்கக் கூடாதே என்ற பயம், சாருமதிக்கு புது இடத்தில் இவள் எந்தப் ப்ரச்சனையும் செய்யாமல் வரவேண்டுமே என்ற பயம். ஆளாளுக்கு அவரவர் கவலை. ஆனால் யாரைப் பற்றிக் கவலைப்பட்டனரோ அவள் மேலகரத்திலிருந்து வேட்டைக்காரன் குளம் செல்லும் வழியை ரசித்தபடி பயணித்தாள்.

 

 

இவர்களது கார் அந்த வீட்டின் முன் வந்து நிற்கவும் உள்ளிருந்து பருத்த மனிதர் ஒருவர் உருண்டோடி வந்தார். “வாங்க வாங்க!!! வா தாயீ!! சும்மாயிருக்கியா? (சுகமாயிருக்கியா) இது நம்ம சத்தி மவ தானே!! வா வா. உங்கப்பனும் நானும் சின்ன வயசுல கூட்டாளி. உங்கப்பன்கிட்ட ராசுன்னு கேளு. கதகதையா சொல்லுவான்.” உள்ளே அழைத்துச் சென்றவர் நான்ஸ்டாப்பாகப் பேசித் தள்ளினார். சத்தியன் மேல் அவருக்கிருக்கும் பாசம் அவரது குரலின் கரகரப்பில் நன்கு புரிந்தது.

Advertisements

“ஏ மீனா!! வா வா!!! வரமாட்டியோன்னு நினைச்சேன். இது யாரு? உன் பேத்தியா? சினிமா ஸ்டார் மாதிரி இருக்காளே!! வா தங்கம்!! உட்காரு வா. ஏலே சொர்ணம்!! பிள்ளைக்கு அந்தப் பால் கொண்டு வந்து குடுப்பா. மீனா சத்திய கூட்டிட்டு வந்திருக்கலாமே. கண்ணுக்குள்ளே நிக்குறான்.” கண்கள் கலங்கப் பேசியவருக்கு குறைந்தது அறுபது வயதிருக்கும். மீனா எல்லாருக்கும் ஏற்றவாறு பதிலளித்தவர் ஒவ்வொருவராய் அக்ஷராவிற்கு யாரென்று என்ன உறவுமுறை யென்று சொல்லிக் கொடுத்தார்.

 

இதுவரை குடும்பம் என்றால் தான் தந்தை அன்னை என்று மட்டுமே எண்ணியிருந்த அக்ஷராவிற்கு ‘தனக்கு இத்தனை சொந்தங்களா!!!!’ என்று வியப்பாக இருந்தது. விதவிதமான வரவேற்புகள் வித்தியாசமான பாச அழைப்புகள். அத்தனையையும் சந்தோஷமாக மனதுக்கு இதமாக இருந்தது. நல்லவேளை வந்தோம் என்றே தோன்றியது அக்ஷராவிற்கு.

 

திடிரென காற்றில் ஏதோ கரண்ட் ஷாக் கலந்த உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. யாரோ தன்னையே வெறித்துப் பார்ப்பது போன்ற உணர்வு. அன்று ரயில் நிலையத்தில் ஏற்பட்டது போன்ற அதே உணர்வு. அன்று கூட ஏதோ எச்சரிக்கை உணர்வு தான். ஆனால் இன்று ஏதோ தனக்கான ஒன்று தன்னை அரவணைப்பது போன்ற ஒரு கதகதப்பான உணர்வு. ரொம்பவே இதமாக உணர வைத்தது அவளை.

 

உடலில் ஏற்பட்ட பரபரப்பு மனதை தடுமாறச் செய்ய தன்னைச் சுற்றி பார்வையை படரவிட்டாள். எல்லோரும் ஃபங்க்ஷனுக்கே உண்டான சந்தோஷத்தில் பேசிக் கொண்டிருந்தனர். மீனா எல்லாரிடமும் தன்னைக் காட்டிக் காட்டி ‘எம்பேத்தி!!! இனி இங்கனதான் எங்கூடவே இருக்கப் போறா’ என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தார். தனது உடலில் பார்வையால் மாயம் செய்யும் அந்த நபர் யாரென்று புரியாமல் குழம்பித் தவித்துக் கொண்டிருக்க “ஆரா!! இது உன்னோட செயின் தானே? கீழே மிஸ் பண்ணிட்ட பாரு” என்று தன் முன் வந்து நிற்கும் ஆறடி உயர ஆண்மகனை இமைதட்டாமல் பார்க்கத் தான் முடிந்தது அவளால். நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது போன்ற உணர்வு. பேச முயன்றும் வார்த்தைக்குப் பஞ்சமாகிப் போன நிலை. தனது உயரத்தால் அங்கிருந்த அனைவரையும் குள்ளமாக்கிக் கொண்டிருந்த அவன் ஏதோ ஒரு வகையில் அசைத்துத்தான் பார்த்தான் அவளை. பார்த்ததும் மனதைப் பறிகொடுத்து தான்

ஒன்றும் பதின்வயது நிறத்திலும் இல்லை. அவனும் ஒன்றும் வசியக்காரனும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று கவர்ந்தது.

அடுத்த பக்கம்

Advertisements