என்னைத் தந்தேன் வேரோடு 8 (4)

அதுவரை தன் விழி உயர்த்தி அவன் விழிகளை ஊடுருவிக்கொண்டிருந்தவள் பார்வை தாழ்த்தினாள். “எனக்கு இன்னொரு ஹெல்த் இஷ்யூ இருக்குது”

அவள் நெற்றி மேல் இருந்த தன் நெற்றியை விலக்கி நிமிர்ந்தான் அவன். முகத்திலும் சற்று இறுக்கம் வந்திருந்தது.

வேரியின் முகம் விழுந்துவிட்டது. “எங்க வீட்ல, இல்ல… நான் உங்கள ஏமாத்திட்டேன்னு என்னைய விட்டுட்டு போய்டுவீங்களா?” பயமும் தவிப்புமாக அவள் கேட்ட விதத்தில் இளகிவிட்டது அவனுக்கு.

“ஹெல்த் இஷ்யூன்னா மெடிக்கல் ஹெல்ப் எடுத்துகாம இதென்ன ஒளிஞ்சு பிடிச்சு விளையாட்டுன்னு கேட்க வந்தேன்டா”

“அதுக்கு சொலுஷனே இல்லைனு சொல்லிட்டாங்க, என் கால் மாதிரி, இந்த ப்ரச்சனை  கூடயும் நான் வாழ பழகிகிடனும்னு சொல்லிட்டாங்க”

“ஓ, அதுக்கு மேடம் கண்டுபிடிச்ச வழிதான் இந்த நைட் ஷிஃப்டிங்கா?” தன் இடக்கையால் அவள் காதின் அருகில் ஆடிக்கொண்டிருந்த சிறு முடி கற்றையை காதின் பின் தள்ளினான்.

“சாரி,”

“இன்னும் நீ விஷயம் என்னனு சொல்லலை”

“அது” எப்படி சொல்லவென்று அவளுக்கு தெரியவில்லை. சுற்றிலும் அவள் கண்கள் சுழன்றன.

கவிழ தொடங்கியிருந்த மென் இரவு. தூரத்தில் தெரிந்த மின் விளக்கு. வலக்கையால் இடையோடு வளைத்து தன்னோடு சேர்த்து பிடித்திருந்த இவள் கணவன்.

இப்படியே நின்றுவிடாதா சர்வமும்.

நொடி நேரம் அனைத்தும் மறந்து போனது.

அவன் மார்பில் பதுங்கினாள்.

“என்னாச்சு குல்ஸ்?”

“வீட்ல போய் சொல்றனே”

வீட்டிற்கு வந்ததும் வேக வேகமா ஒரு காகிதத்தில் எதையோ எழுதி கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை படித்தவன் தன் முகத்தையே பார்த்த வண்ணம் நின்றிருந்த அவளைப் பார்த்துக்கேட்டான்.

“இப்படி ஒரு ப்ராப்ளமா?“

“ம், நான் பிறக்க ரொம்ப டைம் எடுத்ததால சில நெர்வ் டிஸ்டர்ப் ஆகி, கால் பாதத்துல ப்ராப்பர் கன்ட்ரோல் இல்ல, அது மாதிரி யூரினரி ப்ளடர்லயும் ப்ராப்பர் கன்ட்ரோல் இல்ல,

விழிச்சிரிருக்கப்ப எல்லாம் நார்மலாதான் இருக்கும், ஆனா தூங்றப்ப என்னை அறியாமலே யூரின் பாஸாயிடும்,

நார்மலா குழந்தைகளுக்கெல்லாம் இருக்கிற மாதிரி  கிடையாது இது, நான் தூக்கத்தில எதோ ஒரு போஷ்சர்ல படுக்கிறப்ப மட்டும் இப்படி ஆகிடுதாம்,

யார்ட்டயும் இதை நான் சொன்னதில்ல, சொல்ல ரொம்ப கூச்சமா அருவருப்பா”

சொல்லிக்கொண்டு போனவளை இழுத்து தன் மார்பில் சாய்த்தான் கவின்.

“இதெல்லாம் ஒரு விஷயமா?” கேட்டான்.

“அம்மாக்கும் பாட்டிக்கும் மட்டும் இது தெரியும்,  எனக்கு நார்மல் மேரேஜ் லைஃப் பாஸிபிளே கிடையாதுன்னு அவங்க ரொம்ப பயப்டுவாங்க, இதெல்லாம் தெரிஞ்சா யார் கல்யாணம் செய்துப்பான்னு ரொம்ப புலம்புவாங்க, தெரியாம கல்யாணம் செய்துட்டா கூட விட்டுட்டு போய்டுவாங்கன்னு, அதுக்குள்ள குழந்தை வந்துடனும்னு…”

இதற்கு மேல் அவள் பேச முடியாதபடி அவன் அணைப்பு இறுகியது.

தொடரும்…

One comment

  1. How many types of problems are faced by women? So sad mam . Entha mathiri oru problem pathi first time naan therikuten. Vari pavam she is immature to handle it. Kavin how he is going to solve this problem? Waiting eagerly for your next update mam.

Leave a Reply