என்னைத் தந்தேன் வேரோடு 8 (2)

அவளோ “நீங்க உடனே உங்க அம்மாப்பாட்ட போய் சேருங்க, எனக்கு என்னாலதான இவ்ளவும்னு ரொம்ப கவலையா இருக்குது” என நேரடியாக தன் மனதை குழப்பிய விஷயத்திற்கு வந்தாள்.

“வார்த்தைன்னு ஒன்னு கொடுத்தா காப்பாத்தனுமில்லையா?”

“உங்க ஊர்காரங்களதான சொல்றீங்க, அவங்க என்ன செய்ய சொல்றாங்களோ அத செய்துட்டு போய் சேர்ந்துகோங்க”

“நானும் அதை யோசிச்சிட்டேன் மிரு, கண்டிப்பா போய் சேர்ந்திடலாம், அதுக்கு வழி இருக்குது, ஆனா அவசரமா செய்ய முடியாது, டைம் எடுத்துதான் செய்ய முடியும், அப்பதான் சுமுகமா போகும், அதனால நீ அதைப்பத்தி குழப்பிகிடாத, மனசை உன் கேம்ஸ்ல மட்டும் வை”

அவள் மனதில் நிம்மதி வந்தது.

நீ இப்படி இந்தியாவிலேயே இருக்கிறது சரியா வராது, இன்டர் நேஷனல் மீட்ஸ் அட்டென்ட் செய்யனும்னு மிகிர் சொன்னாரில்லையா?

அத தவிர வேற எதையும் யோசிக்காதன்னு சொல்றானோ? ஆனா ஃபினான்ஸுக்கு…?! இவள் யோசனை முழுமை அடைய கூட இல்லை.

“ஃபினான்ஸ் சைட நான் பார்த்துகிறேன் மிர்னு”

“அது…”

“என்னை நம்புறதான?”

அதற்கு மேல் அவனிடம் அதை குறித்து பேச அவளுக்கு மனம் வரவில்லை.

நம்பிக்கையை வார்த்தையில் வெளிப்படுத்த முடியுமா என்ன? அதை வாழ்ந்தல்லவா காட்ட வேண்டும்?

டுத்து வந்த நாட்களில் மிர்னா மிஹிருடன் பயிற்சியில் மூழ்கிப்போனாள்.

கடும் பயிற்சி எனினும் அவளுக்கு இதுவரை இப்படி ஃப்ரெஃபஷனல் லெவல் பயிற்சி கிடையாது என்பதால் இது புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

பெரும்பாலான நேரம் தன் லேப்டாபில் தலையை நுழைத்தபடி அல்லது மொபைலில் பேசியபடி என்றாலும் வியன் இவர்கள் பயிற்சி பெறும் இடத்தில் தான் இருப்பான்.

அதுவே மிர்னாவிற்கு போதுமானதாக இருந்தது.

அதோடு மிஹிரும் ஒரு நல்ல நண்பனாக பழக, பயிற்சி பளுவாக அவளுக்கு  தோன்றவே இல்லை.

எதென்ஸில் நடக்கவிருக்கும் இன்டர்நேஷனல் மீட்டுக்கு செல்லும் வரை அவள் எதைப் பற்றியும் யோசிக்க கூட நேரவில்லை.

ஒருவகையில் வியன் அதற்கு அனுமதி கொடுக்கவும் இல்லை.

ஆனால் அங்கு அவள் மரணத்தின் முகப்பில் நின்றபோது யோசிக்காமல் இருக்கமுடியவில்லை.

ஏன்???? எதற்கு????யார் இவளை கொல்ல நினைக்கிறார்கள்????

யோசிக்க வேண்டிய கட்டாயம்.

ங்கு கவின் வேரி வாழ்க்கையும் சில நாட்கள் எந்த மாற்றமுமின்றி சென்றது.

அன்று இரவில் வேரியை கையில் மொபைலுடன் பார்த்த கவினுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.

இவன் சொன்னதற்காக வேரி இப்பொழுதுவரை அவள் பெற்றொருடன் பேசவில்லை என இவனுக்கு தெரியும்.

அவர்களுக்கு நான் தான் இல்லை என்று ஆகிவிட்டேன், மீதி உள்ள மிர்னாவாவது அவர்களுக்கு வேண்டும் என்றாளே,

அதோடு மிர்னா இவனுடன் பேச மறுத்ததால் அடுத்து அவளுடன் கூட இவன் மனைவி பேச முயலவில்லையே, இத்தனைக்கும் தன் சொத்தை அவளுக்கு கொடுக்க தயாராக இருந்தவள்.

பின், இதென்ன, மொபைல்? சட்டென புரிய சிரிப்பு வந்தது அவனுக்கு. அலார்ம், அவன் விழிக்கும் முன் எழ அலார்ம் வேண்டுமே!

குட்டி பாப்பா, இதுக்காக யோசிக்கிற குட்டி மூளைய என்ன நம்புறதுக்கு யோசிக்க யூஸ் செய்தா நல்லா இருக்கும்.

சிறிது நாள் போகட்டும் அவளாக வருவாள் என தோன்ற கவினும் அவள் இரவு ரகசியத்தை தானும் கண்டு கொண்டதாக காண்பிக்காதுவிட்டான்.

அன்று வேரி கவினின் அலுவலக அறையில் இருந்தாள்.

கவின் தனது குடும்ப பிஸினஸான ஸ்பின்னிங் மில்களை நிர்வகித்தாலும் தன் சொந்த முயற்சியில் பயாலிஜிகல் கழிவுப்பொருட்களை வைத்து எரிபொருள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை தொடங்கும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.

அந்த தொழிற்சாலை கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் இருந்தது போலும். ஏனோ இந்த எரிபொருள் தொழிற்சாலையில் வேரிக்கு மனம் ஒன்றவில்லை. அதனால் அவள் அதற்கான மீடிங்ஸை தவிர்த்தாள்.

அடுத்த பக்கம்