என்னைத் தந்தேன் வேரோடு 8

வளுக்காக தரப்பட்டிருந்த அந்த அறை வசதியானதாக இருந்தாலும் மிர்னாவின் மனம் அதில் எதிலும் செல்லவில்லை.

குளித்து முடித்து இரவு உடை மாற்றி வந்து படுக்கையில் விழுந்தவளுக்கு தூக்கம் வரும் என்றும் தோன்றவில்லை.

பிங்கி பிங்கி பாங்கி, சாட் பூட் த்ர, டாஸ் எல்லாம் போட்டு பார்த்து, என்ன ஆனாலும் சரி என்று ஒரு முடிவோடு வியனை மொபைலில் அழைக்க இவள் முடிவு செய்தபோது அவள் மொபைல் சிணுங்கியது. வியன்தான்.

“என்ன கேட்கனும் மிர்னா? உன் முகமெல்லாம், கேள்வியா இருந்துச்சு”.

இதான்டா ப்ரச்சனை, ஃபஸ்ட் பால்லயே இப்படி சிக்ஸர் அடிச்சா, அடுத்து நான் எப்டி பவுல் பண்றதாம்??

“வீட்டு முன்னால உள்ள லான்ல வெயிட் பண்றேன், வாங்க”

அப்பப்ப ஆள க்ளோன் பண்றதே இவன் வேலையா போச்சு, ரெண்டு மிர்னாட்ட பேசுற மாதிரி, வாங்க போங்கன்ணுட்டு,

“ம்,வர்றேன்”

கிளம்பிப் போனாள்.

இருளோடு உறவாடும் மென் வெளிச்சம். கோபமின்றி காயும் பால் நிலா. இவைகளோடு அவன்.

இவளைப் பார்த்ததும் “வாங்க!!“ என்றான் வியன்.

“இது என்ன?”

தன் நான்கு விரல்களை காண்பித்தாள் மிர்னா.

“ஃபோர் ஃபிங்கர்ஸ் ஆஃப் மிர்னா” என்றான் வியன்.

“இதுலெல்லாம் ரொம்ப தெளிவா இருங்க, ஆனா அப்பப்ப நான் தான் ஒருத்தியா ரெண்டு பேரான்னு எனக்கே சந்தேகம் வார மாதிரி பேசுங்க,

ஏன் அப்பப்ப வாங்க போங்கன்றீங்க, அப்புறம் திடீர்னு மிர்னு எல்லாம் வருது”

ஒரு பாவத்தில் சிரித்தவன் “அதெல்லாம் நீ தான் கண்டு பிடிச்சிகிடணும்” என முடித்தான்.

எம்.எம், உன் நிலமை இப்படியாகிட்டே இந்த பால்கொழுக்கட்டைல்லாம் பசில் போடுறதும் அது புரியாம நீ பரக்க பரக்க முழிக்கிறதும்,

என்ன மிர்னா காலைல பாரை தாண்டினதோட சரி, அப்புறம் ஒரே விட்டு கொடுக்கிற விளையாட்ல இருக்கிற மாதிரியே தெரியுது?

சின்னதாக புன்னகை அவளிடம்,

“விளையாட ஆரம்பிக்கப்பவே ரியாவுக்கு  காக்ரோச்னா பயம்னு தெரிஞ்சிது. அதான் ஒரு சின்ன ட்ரிக்.

நான் காக்ரோச்சை  பார்த்து பயப்படுற மாதிரி நடுங்கினேனா, ரியா என்னை தோக்க வைக்க காக்ரோச்சை எடுத்து விளையாட ஆரம்பிசிட்டா, குழந்தைக்கு பயம் போகனுமில்லையா? அப்புறமா அவட்ட உண்மைய சொல்லிட்டனே”

“ஆக தோத்து ஜெயிக்கிற டெக்னிக்கா?? ஸ்மார்ட்”

மௌனப் புன்னகை.

“அதை அப்படியே நீங்க வேரி அண்ணிட்டயும் காமிக்கிற மாதிரி தெரியுது, அவங்களும் ரியா மாதிரி தானோ?” கேட்டான் வியன்.

மனதிற்குள் மாருதம்.

வாய் பேசும் வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் உள்மனதை கொள்ளையடிக்கும் இவன்!!!

“ம், அவ ரொம்பவே சென்சிடிவ் டைப், இன்னைக்கு அவ கவினைப் பத்தி பேச ஆரம்பிச்சபவே அவளுக்கு கவினை ரொம்ப பிடிச்சிருக்குன்னு புரிஞ்சிது,

எனக்கு மனசுக்கு ரொம்பவே சந்தோஷம், திருப்தி, ஆனா அவளுக்கு கவின் மேல இன்னும் இன்செக்யூரிட்டி இருக்குதுன்னு தெரிஞ்சிது.

அடுத்து  அவ ப்ராபர்ட்டிய பத்தி என்ட்ட பேசுனா, மனசுல எதோ ஒரு நெருடல், அவளுக்கு கவின் மேல இருக்கிற இன்செக்யூரிடியோட அளவு ரொம்பவும் அதிகமோன்னு பட்டுது,

அந்த நேரத்துல கவினும் நானும் நல்லா பேசி சிரிச்சு கிட்டோம்னா, அவ நேச்சர்க்கு இன்னும் அதிகமா கவினை விட்டு விலகுவா, ஏன்னா நான் வேண்டாம்னு சொன்னதாலதான் அவள கவின் மேரேஜ் செய்துருக்காங்கன்னு ஒரு தாட் இருக்கும் அவளுக்கு,

அதை இப்ப இருக்கிற இன்செக்யூரிட்டியும், நாங்க பழகிகிறதும் சேர்ந்து ஊதி பெரிசாக்கிரும், அதான் அவங்களுக்குள்ள எல்லாம் சரி ஆகட்டும், அப்புறமா அத்தான பந்தாடலாம்னு விட்டுட்டேன்,

நான் ஏன் அவங்கள அவாய்ட் பண்றேன்னு சொன்னா கவின் புரிஞ்சிப்பாங்கனு தோணிச்சு, அதான் பின்னால ஜாய்ன் பண்ணிக்கலாம்னு இப்போ பை சொல்லியாச்சு”

செல்லம்டா நீ, மனதிற்குள் மானசீகமாக கொஞ்சினான் வியன்.

அடுத்த பக்கம்