என்னைத் தந்தேன் வேரோடு 10 (6)

பிள்ளைங்க சந்தோஷமா வாழ்றத பார்க்கிறதவிட பேரண்ட்ஸுக்கு என்ன வேற சந்தோஷம் இருந்திரமுடியும்? இதுல உன மேல நாங்க என்ன காரணத்துக்காக கோபப்பட,

ஒரு வருத்தம் இருந்துச்சு, உன்னை முதல் தடவை பார்தப்பவே இது உன் மருமகன்னு மனசுக்குள்ள அப்படி ஒரு உணர்வு, அது நிறைவேறாம போய்ட்டேன்னு,

கவின் மிர்னுதான் வியனுக்குன்னு எங்கட்ட சொன்னப்பதான் எனக்கு அந்த உணர்வோட அர்த்தமே புரிஞ்சிது, பரம சந்தோஷம்”

“…..”

“மிர்னுமா, இனி இதெல்லாம் போட்டு குழப்பிட்டு இருக்காத, ஆனா எனக்கு உன்ட்ட இருந்து ஒரு ஹெல்ப் வேணும், முதல் தடவையா கேட்கிறேன், கண்டிப்பா செய்து தரணும்”

“சொல்லுங்கம்மா”

“இந்த விஷயத்தை நான் உன்ட்ட சொல்லிட்டேங்கிறதயோ, இது உனக்கு தெரியும்கிறதயோ வியனா உன்ட்ட வந்து  உங்க கல்யாண விஷயம் பேசுற வரைக்கும் நீ அவன்ட்டயோ இல்ல வேற யார்ட்டயுமோ சொல்லக் கூடாது”

தொடரும்…

Leave a Reply