என்னைத் தந்தேன் வேரோடு 10 (5)

மிர்னாவுக்கு புரிந்துவிட்டது, அது வியனின் அம்மா, ஆனால் நம்பதான் முடியவில்லை,

“……”

“என்னமா லைன்ல இருக்கியா? இல்ல ஏன் மேலயும் எதாவது கோபமா?”

கவினிடம் இவள் பேசாதது இவருக்கும் தெரிந்திருக்கும் போலும். இதற்கு மேல் மௌனம் காக்க கூடாது. ஆனால் அத்தையா அம்மாவா எப்படி கூப்பிட?

அத்தைதான் ஸேஃபர் சைட்,

“அ…அத்த, அப்படி எதுவும் இல்

ல, நீங்க…,உங்கட்ட இருந்து இந்த காலை இப்ப எதிர் பார்க்கல”

அதான் கொஞ்சம் டென்ஷனாயிட்டுது, அவங்க, வியன் இங்க இல்ல அத்த,

அவங்க ஃபோன இங்க விட்டுட்டு போய்டாங்க, நான் இங்க சி… ஒஃபிலியா வீட்ல இருக்கேன்”

தனக்கு கூட பேசமுடியாமல் இப்படி வாய் தந்தி அடிக்கும் என்று அரை நிமிடம் முன்னால் வரை யாரும் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டாள் மிர்னா.

என்ன வகை தடுமாற்றம் இது?

“என்ன மிர்னு? சின்னவன் என்னை பத்தி எதையும் சொல்லாம பயங்காட்டி வச்சிருக்கான் போல, மிர்னு அப்படியே அம்மா மாதிரினு ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது மொட்ட ப்ளேடு போடுறான் வியுன்னு கவின் சொன்னான், எனக்கு பயமே வராதே”

உங்க மாமியார்ட்ட முதல் தடவ பேசுறப்ப கூடவா? பை த வே, வெட்டி பேச்சு வியு, இரு உன்ன கவனிச்சுகிறேன், என் பெருமைய என்ட்ட சொல்லாம,

“என்ன மாமியார்ட்ட பேசுறப்ப கூடவான்னு நினைக்கிறியா?”

புரையேறியது மிர்னாவுக்கு.

அப்படியானால்??!!!

“இல்ல என்ன தவிர எல்லார்ட்டயும் என் பெருமைய பத்தி சொல்றியேன்னு சின்னவனுக்கு திட்டு விழுதா?” 

இதற்குள் அடி முடியற்ற ஆனந்த ஆகாயத்தில் காற்றாய் கலந்திருந்தாள் மிர்னா.

ஏனோ அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.

“மிர்னு, மிர்னுமா,அழுறியாடா? அவன் முதல்ல சொல்றத விட்டுட்டு நான் முந்திரிகொட்ட மாதிரி முன்ன சொல்லிட்டனோ?”

“ஐயோ, அப்படில்லாம் இல்ல அத்த”

“பெரியவன் சின்னவன் ரெண்டு பேருக்கும் உன்ட்ட இந்த விஷயத்தை இப்ப சொல்றதுல இஷ்டம் இல்லமா, உன் மனச கலைக்க கூடாதாம், ஒலிம்பிக் லட்சியம் தடையில்லாம நிறைவேறனுமாம்”

“ஆனா எனக்குதான் உனக்கு வியன் மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு, எங்க எல்லாருக்கும் இஷ்டம் இருக்கிற விஷயத்தை சொல்லாம, உன்னை விழுந்து விழுந்து கவனிக்க மட்டும் செய்தா,  குழப்பமாவும் கஷ்டமாவும்தான் இருக்கும்னு தோணிச்சு,

அது மட்டும் உன் பெர்ஃபார்மன்ஸை பாதிக்காதா?

அதான் உன்ட்ட விஷயத்தை சொல்லிடணும்னே நினச்சுகிட்டு இருந்தேன், இப்ப கவின் உன்னை வியன் நம்பர்ல கான்டாக்ட் செய்ய சொன்னப்ப கூட அம்மா இந்த விஷயத்த சொல்லாதீங்கன்னு அட்வைஸ் மழை”

“கவி, பெரியத்தானா பேச சொன்னாங்க இப்ப?”

“ஆமா, இப்போ வேரி நம்பரை ட்ரை பண்ணியாமே, இப்போ இங்க இந்தியால ரொம்ப லேட் நைட் இல்லையா, அவ தூங்றாபோல, அதான் கவின் என்னை கூப்பிட்டான்,

என்ன ப்ரச்சனைனு தெரியலைமா வியன் நம்பர்ல இருந்து மிர்னு வேரிய கூப்டுறா, நீங்க பேசுங்கம்மா, எதுனாலும் வேரிய விட நீங்க பக்குவமா ஹேண்டில் பண்ணுவீங்கன்னு சொன்னான் அதான்”

அப்பொழுதுதான் உறைத்தது மிர்னாவிற்கு. எத்தனை மணிக்கு இவள் அழைத்திருக்கிறாள்? அதற்கு எப்படியான ஒரு பதில், மனதிற்குள் கவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை மிர்னாவால்.

வியன் நம்பரிலிருந்து வேரிக்கு இத்தனை மணிக்கு மீண்டும் மீண்டுமாக அழைப்பு என்றவுடன் அது இவள்தான் என்று யூகித்ததோடு,

இவளிடம் பேசாமலிருக்கும் வேரியைவிட இவள் ப்ரச்சனை எதுவாயினும் ஏற்ற தீர்வு சொல்ல அவன் தாய் தான் சரியான நபர் என உணர்ந்து இவளை அழைக்க சொல்லி இருக்கிறான். இவளுக்கு கடவுள் நியமித்திருக்கும் குடும்பம் எத்தகையது,

“பை த வே நீ அவனை கவின்னு கூப்பிட்டாலும் எனக்கு எதுவும் வித்தியாசமா தோணாது”

“தேங்க்ஸ்மா, எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்குது, எப்படி சொல்லனே தெரியல, உங்களுக்கு என் மேல கோபம் வருத்தம் எதுவும் இல்லையாமா?”

“சே,அப்படி எதுவும் இல்ல மிர்னு, ஒரு வார்த்தை நானோ, உங்க மாமாவோ, இல்ல பெரியவனோ உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்டிருந்தா நீ தேவையில்லாம இவ்வளவு கஷ்டபட்டிருக்க வேண்டாமே,

அதோட கஷ்டபட்டது நீ ஆனால் அதோட நற்பலன் கவினுக்கும் எங்களுக்கும்ங்கிற மாதிரி வேரி எங்களுக்கு கிடச்சிருக்கா, கவின் இந்த கல்யாணத்தால எவ்வளவு சந்தோஷமா இருக்கான் தெரியுமா?

அடுத்த பக்கம்

 

Advertisements