என்னைத் தந்தேன் வேரோடு 10 (3)

வியனின் வல புறமாக நின்று அவனை தாண்டி இட புறமிருந்த உணவு பாத்திரத்தை கையாள முயன்றவள் அந்த பளபள தரையில் ஸ்லிப்பாகி விழுந்திருந்தாள்.

மிர்னாவிற்கோ சிரிப்பு அள்ளிக்கொண்டு வந்தது. நாம படுனா தான் ஜெகமே ஸ்லிப்பாகும், இவ பாடுனான்னு நினச்சா அவளே ஆடிபோயிடுறாளே!

எதோ சொல்லியபடி விழுந்திருந்த ஒஃபிலியா எழும்ப உதவிய வியன் இவளைப் பார்த்து முறைத்தான். அவள் விழுந்ததிற்கு இவள் சிரித்தால்?

ஆனால் விழுந்திருந்த ஒஃபிலியாவே சிரித்து கொண்டே எழுந்ததால் நிலமை மீண்டும் சுமுகமாகிவிட, மீண்டும் சாப்பிட அமர்ந்தனர் மூவரும்.

தன் முன்னால் தட்டில் இருந்த அந்த சிவப்பும் கருப்புமான கோனல்மாணலான உருண்டைகள் என்னவென்றே புரியவில்லை மிர்னாவிற்கு. அதை எப்படி சாப்பிட வேண்டும்?

நிமிர்ந்து வியனைப் பார்த்தாள்.

அவன் காரியமே கண்ணாக கம்ப்யூட்டரே கடமையாக,

இவள் பார்வையின் பொருள் உணர்ந்து “இப்படி உதுத்துகோங்க மிர்னா “ என்றபடி தன் தட்டிலிருந்த உருண்டைகளை உதிர்த்து காண்பித்தாள் ஒஃபிலியா.

இவள் அப்படியே உடைக்க தொடங்க, எழுந்து வந்து இவளுக்கு உதிர்த்து கொடுத்துவிட்டு போனாள் அவள்.

இவள் ஒஃபிலியா வை ‘பே’ என பார்க்க,

வியனோ  தட்டையும் கவனிக்காமல், ஒஃபிலியாவையும் கவனிக்காமல் கண்களால் லாப்டாப்பை பார்த்தபடி ஒரு கையால் எதை சாப்பிடுகிறோம் என கண்டுகொள்ளாமல் சாப்பிட்டான்.

மிர்னாவுக்கு அன்று டில்லியில் வியன் இவளுக்கு மீன் பிட்டு கொடுத்த விதம் ஞாபகம் வந்தது.

ஒஃபிலியா இவளிடம் பழகுவது நட்பானால் அதுவும், நட்பு தானோ?

மெல்ல எழுந்து தன் தட்டை கழுவி வைத்துவிட்டு தன் அறைக்கு கிளம்பினாள் மிர்னா.

“குட்நைட் வியன், குட் நைட் ஒஃபிலியா”

கலோன் நகரம் சென்ற பின்பு, முதன் முறையாக இவளை நிமிர்ந்து பார்த்தான் வியன்.

“சீக்கிரம் தூங்க போறீங்க மிர்னா? ஜெட் லாக்கா?”

மௌனமாக அவனைப் பார்த்தவள் பதில் எதுவும் சொல்லாமல் கிளம்பி தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

 

ங்கு அவளுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை.  இப்படி ஒரு உணர்வு இதற்கு முன் இவளுக்கு வந்ததே இல்லை. இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை.

தாய் மடி தேடியது அவளுக்கு.

அம்மாவை அழைக்கலாமா என்று கூட நினைத்தாள் முதலில். அதைவிட மோசமான முடிவு எதுவும் இருக்காது என்று தோன்ற, வேரியை அழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். பார்த்தால் மிர்னாவின் மொபைலில் சார்ஜ் இல்லை.

இனி சார்ஜ் போட்டு, அது சார்ஜாகி, எப்பொழுது பேச? அதற்கு பதில் வியனிடம் அவன் மொபைலை வாங்கி வந்தால் என்ன?

உண்மையில் அவளுக்கு வேரியிடம் பேச வேண்டும் என்பதைவிட மீண்டுமாக வியனைப் பார்க்க ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது, குட் நைட் சொன்ன பின்பு காரணமின்றி எப்படி அவன் முன் சென்று நிற்க?

மீண்டுமாக அவன் இருந்த வரவேற்பறைக்கு சென்றாள். இன்னுமாய் வியனும் சி.வெவும் லாப்டாப் கதை. அந்த சி.வெ சாப்பாடை தொட கூட இல்லை. இவன் தட்டு காலி.

போடா,

“வியன்”

நிமிர்ந்து பார்த்தான் “ஹேய், நீ இன்னும் தூங்கலையா?”

“அது, என் மொபைல்ல சார்ஜ் இல்ல, உங்க மொபைல தாங்க பேசிட்டு தந்துடுறேன்”

தன் மொபைலை எடுத்து நீட்டினான்.

“தேங்க்ஸ்”

தன் அறைக்கு வந்தாள் மிர்னா. வேரி எண்ணை அவன் மொபைலில் தேடி அழைத்தாள். இரண்டு மூன்று முறை அழைத்தும் அவள் எடுக்கவில்லை.

அன்று இவள் கவினுடன் பேசவில்லை என்பதால் இன்று இவளை தவிர்க்கிறாளோ? சென்ற முறை இவள் ஜெயித்த பொழுது வேரி ஒரு வாழ்த்து செய்தி கூட அனுப்பவில்லையே,

ப்ச், எல்லாருக்கும் நான் வேண்டாதவளா ஆகிட்டேன்,

அஸ் யூஸ்வல் என்றது உள்மனம்.

உண்மைதானே முன்பும் யாரும் இவளை கண்டுகொண்டது இல்லை, ஆனால் மனம் இப்படியா வெறுமை கீதம் வாசித்தது?

இப்பொழுது என்ன புதிய கதை?

பிறவியிலேயே பார்வை இல்லாதவனை விட அதை அனுபவித்துவிட்டு பாதியில் இழப்பவனுக்குதான் தவிப்பு அதிகமாக இருக்குமாம், அப்படி ஆகிவிட்டதோ இவள் நிலை??

சோகப்பட என்னால முடியாது சொக்கி, சொடக்கு போட்டு துள்ளலோட நீ மாத்தி யோசி,

அடுத்த பக்கம்

Advertisements