என்னைத் தந்தேன் வேரோடு 10 (2)

ம்மச்சி, மின்மினி அவளது தந்தை அனைவருக்கும் விடை கொடுத்துவிட்டு வியன் மற்றும் மிஹிருடன் ஜெர்மனியின் கலோன் நகரம் சென்றடைந்த போது, மிர்னாவிற்குள் ஒரு சிறு வெறுமை.

காரணம் அம்மச்சி நாடு திரும்பியது. உறவுகள் சுகம் என முதன் முதலில் உணர வைத்தவர்.

அதனால் வியனின் தோழி ஒஃபிலியா வீட்டில் இவள் தங்கும்படி ஏற்பாடு செய்திருப்பதாக வியன் சொன்னபோது மகிழ்ச்சியாக உணர்ந்தாள் மிர்னா. வியனும் மிஹிரும் இன்னொரு வீட்டில்.

ஒஃபிலியா என்ற பெயரின் நிமித்தமும், அவளுடன் தொலைபேசியில் பேசும் போதெல்லாம்  வியன் போர்சுகீசில் பேசியதன் நிமித்தமும் வெளிறிய வெள்ளையில் ஒரு போர்சுகல் ப்ரஜையை எதிர்பார்த்தாள் மிர்னா.

ஆனால் விமான நிலையத்தில் இவர்களை வரவேற்க வந்த ஒஃபிலியா உருவத்தில் தென்னிந்தியாவின் மொத்த அடையாளமாக இருந்தாள். மாநிறம் தாண்டிய வெண்மையும் அந்த சுருண்ட கறுப்பு முடியும், அழகு.

வியனைப் பார்த்ததும் ஓடி வந்து அவனது இருகைகளையும், முதல் உலக சாதனை டெல்லியில் இவள் நிகழ்த்திய போது எப்படி வியன் இவளது இரு கைகளையும் பற்றிக்கொண்டானோ அப்படி பற்றிக்கொண்டு போர்ச்சுகீசில் பொறிந்து தள்ளியவள்,

‘பே’ என பார்த்துக்கொண்டு நின்ற மிர்னாவை தோளோடு அணைத்துக்கொண்டாள் “வாங்க, வாங்க” என்றபடி.

வெள்ளகார சீமாட்டி வருவான்னு நினச்சா, இது என்ன ஒரு சிவப்பு தோல் சின்ன வெங்காயம் சீட்டி அடிச்சுகிட்டு வருது,

காரிலும் ஒஃபிலியா ஓட்டுனர் இருக்கையில், அவளுடன் முன்னால் வியன். பின் இருக்கையில் மிஹிரும் இவளும்.

ஒருவேளை மிர்னா நினைத்தது போல் ஒஃபிலியா ஒரு ஐரோப்பியராக இருந்திருந்தால்  இயல்பாய் இருந்திருக்குமோ என்னவோ, ஏதோ ஒருவகையில் இயல்பிழந்தது போல், ஒரு வகை வெறுமையை உணர்ந்தாள் மிர்னா.

சற்று சத்தமாக ஒஃபிலியா எதையோ வழக்கம் போல் பொறிய, பூம் பூம் மாடு போல் வியன்.

மெடல்லு வாங்க போனேன், ஒரு மாடு பார்த்து நின்னேன்,

வாய்விட்டு பாடுனா பின்விளைவு எப்படி இருக்கும்னு யாருக்கு தெரியும். அதனால் மனதுக்குள் பாடிக்கொண்டாள் எம் எம்.

சில நிமிடம் அமைதியாக அந்த புரியாத பாஷையை கேட்டு பார்த்த மிஹிரும் காதில் ஹெட்ஃபோனை சொருகிக்கொண்டு கண்கள் மூட, இவளுக்குத்தான் என்ன செய்யவென்று தெரியவில்லை.

எவ்வளவுதான் வெளியே வேடிக்கை பார்த்தாலும் அந்த ஒஃபிலியாவின் கிர் குரல் காதில் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.  மனம் மீண்டும் மீண்டும் காருக்குள்ளேயே வட்டமிட்டது.

சோதனை மேல் சோதனை, கிர்ர்ர்ர்ர்ர் குரலால் வேதனை,

கண்கள் வியன் முகத்தை தேடியது.

அவனோ இப்பொழுது ஒஃபிலியாவிடம் கர்ம சிரத்தையாக கதை அளந்து கொண்டு இருந்தான்.

வாராய், நீ வாராய், வர்றப்ப இதுக்கு கணக்கு தாராய், நீ தாராய்,

முதலில்  வியனும் மிஹிரும் தங்க இருக்கும் அப்பார்ட்மென்டை அடைந்தவர்கள் மிஹிரையும், இவளது உடைமைகள் தவிர அனைத்து உடைமைகளையும் அங்கு இறக்கிவிட்டு மூவருமாக ஒஃபிலியாவின் வீட்டை அடைந்தனர்.

இவள் தங்க இருக்கும் அறையை இவளுக்கு காண்பித்துவிட்டு, இவளது உடைமைகளை அங்கே வைத்துவிட்டு, இவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு,  மீண்டுமாக வியனும் அந்த சி.வெ அதாங்க அந்த சின்ன வெங்காயமும்  வரவேற்பறையில் சென்று அமர்ந்து அரட்டையை தொடர்ந்தார்கள்.

சற்று நேரத்தில் இவளுக்கு படு போரடிப்பது போல் உணர்வு.

வியனை தேடி சென்றாள் மிர்னா. இவள் அறை வாசலிலிருந்து அவனைப் பார்க்க, அவன் இவளை கண்டுகொள்ளவே இல்லை. படு சீரியஸாக எதையோ பேசிக்கொண்டிருந்தான்.

ஒரே ஒரு நாள் இவர்கள் சந்தித்த அந்த முதல் நாள் இவளிடம் வியன் அதிக நேரம் தொடர்ந்து பேசியதுண்டு என்பது ஞாபகம் வந்தது மிர்னாவிற்கு.

அதன் பின் என்றும் அளவு சாப்பாடு கதைதான் அவன் பேச்சு, இங்கானால் சின்னவெங்காயத்துடன் ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்கு மொக்கை?!!

பி.கே என் கையால வெங்காய பாயாசம் ரிசர்வ்ட் உனக்கு,

மூன்று படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மென்ட் அது.

மெல்ல மொத்த வீட்டையும் சுற்றிப்பார்த்த மிர்னா எரிச்சல் நீங்க குளித்துப் பார்த்தாள். மீண்டுமாக வரவேற்பறைக்கு வரும்போது ஓரத்திலிருந்த டைனிங் டேபிளில் உணவு தாயாராக இருந்தது.

இவளை அந்த சி.வெ சாப்பிட அழைக்க வியன் சுற்றுபுறம் எதுவும் கருத்தில் பதியாத அளவு  லாப்டாப்பில் தலையை நுழைத்திருந்தான்.  அதுவும் இவளுக்கு முன்னதாக சாப்பிட அமர்ந்திருந்தவன் இவள் தன் உலகத்தில் இருப்பதாக காட்டிகொள்ளவே இல்லை.

சி.வெ மூவருக்குமாக உணவு பரிமாறியவள் இவளை சாப்பிட சொல்லிவிட்டு வியன் தலையை நுழைத்திருந்த லாப்டாப்பில் சிலவற்றை காட்டியபடி கிர்ர்ர் குரலில் மீண்டும் ஸ்பீச்,

சி.வெ பேச்சே இப்படி இருக்கே, இவ பாடினா?!!

மிர்னா நினைத்த அதே நேரம் ‘ஸ்ஸ்ஸ்ர்க்” தடுமாறி சருக்கி விழுந்தாள் ஒஃபிலியா.

அடுத்த பக்கம்

Advertisements