என்னைத் தந்தேன் வேரோடு 9 (6)

உள்ள அவ பெருசா எதையும் செய்யலை நைட் என்ன டிரஸ் போடுறதுன்னுதான் ஆராய்ச்சியே.

ன்று இரவு இவளது புதிய உலக சாதனையை கொண்டாடுவதற்காக பார்டி ஏற்பாடு செய்திருப்பதாக கூறி அழைப்பு விடுத்தது ஒரு பிரபல விளையாட்டு உபகரணங்கள் நிறுவனம்.

மிர்னாவிற்கு ஸ்பான்சர் செய்ய விரும்பினார்கள் அவர்கள். அதற்கான பேச்சு வார்த்தையையும் அங்கு தொடங்க விரும்புவதாக அவர்கள் குறிப்பிட, அம்மச்சி தவிர மிர்னா & கோ அதற்கு செல்லவது என முடிவாகி இருந்தது. அதற்கான உடை ஆராய்ச்சிதான்.

அரை மணிநேரம் சென்றபின் அவள் அறை கதவு தட்டப்பட, .

அந்த முழு நீள மை நிற ஈவ்னிங் கவுனை கொண்டு வந்து மிர்னாவிடம் நீட்டினான் வியன்.

“இது இந்த ஃபங்க்ஷனுக்கு சரியா இருக்கும் மிர்னா”

அதைப் பார்த்தவுடன் அவள் கண்கள் விரிந்த விதத்தை வியன் கவனித்து இருந்தாலே அவளுக்கு அந்த உடை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது வியனுக்கு புரிந்திருக்கும். உடையோடு இருந்த க்ளீட்ச் வேறு வா வா என்றது.

ஆனாலும் ‘உன் பேச்சு கா’வை காப்பாத்தியாகனுமே, வார்த்தை தவறிவிட்டாள் எம் எம்னு நாளைக்கு சரித்திரம் குறை சொல்லாது இவள?

அவசரமாக தன்னிடமிருந்த ஒரு சிவப்பு நிற லேஸ் கவுனை எடுத்துக் காண்பித்தவள்

அலட்சிய பார்வை பார்த்துவிட்டு திரும்பி நின்று மௌனமாக சிரித்தாள்.

அவள் திரும்பி பார்க்கும்பொழுது அங்கு வியன் இல்லை. அந்த உடை மட்டும் அவளது படுக்கை மீது இருந்தது.

தன் சிவப்பு நிற உடையிலேயே தயாராகி வரவேற்பறைக்கு வந்தாள் மிர்னா.

எப்பொழுதும் அவன் இவளை தாங்கி தடுக்கு போடுவதும், இவள் பூம் பூம் என்று தலையாட்டுவதும், பிடிச்ச பிரியாணியாவே இருந்தாலும் தினமும் சாப்பிட்டா போரடிக்குல்ல,

தேனை கண்டால் மிதமாய் சாப்பிடுன்னு தெய்வமே சொல்லி வச்சிருக்கார்ல, இன்னைக்கு கொஞ்சம் காரம் சேர்த்துடனும், முடிவு செய்திருந்தாள் எம்எம்.

அதோடு பிகேட்ட விளையாண்டு எவ்ளவு நாளாச்சு??

ஆனாலும் அவன் வாங்கி கொடுத்த உடையை அணியாமல் பார்ட்டிக்கு போகவா? நோ சான்ஸ்.

அதனால் முட்டுக்கு சற்று கீழ்வரை நீண்டிருந்த தன் சிவப்பு கவுனிற்கு வெண்ணிற ஸ்டாக்கின்ஸ் அணிந்து வந்து நின்றாள்!!!!.

உங்கள மாதிரியே  அவளுடன் பார்ட்டிக்கு வர தயாராகி நின்ற அனைவரும் ஒரு ‘ஆ’ லுக் அதிர்ந்து போய் விட,

யாராவது கேவலமா இருக்குன்னு கமெண்ட் விடுவாங்க, உனக்காக எல்லாம் உனக்காகன்னு அந்த கமெண்ட் பார்ட்டிட்ட சீனைப்போட்டு, சீக்கிரமா போய் கைல கிடைக்கிற ட்ரஸை போட்டுட்டு வரமாதிரி வியன் கொடுத்த கவுனை  போட்டுகிடனும் என்ற ரகசிய திட்டத்துடன் அவள் ஆவலாய் காதை தீட்டி கொண்டு நிற்க

மன்னி மின்மினி மக்கு மின்மினியாகி இவளது மகா திட்டத்துக்கு நச்சுன்னு ஆப்படிச்சா,

“வாவ் மிர்னு, சூப்பரா இருக்குது இந்த டிரஸ், ஸ்டாக்கின்ஸ் மட்டும் ஸ்கின் கலர்ல மாத்திக்கோ”

இப்படி சொன்னா இவ எப்படி மன்னிக்காக டிரஸ் மாத்துறதாம்,?

“அ…து” வியனைப் பார்த்தாள். அவன் நடக்கும் எதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் நின்றிருந்தான்.

உண்மையில் கோபத்தில் இருக்கிறானோ? இதுவரை விளையாட்டாய் தெரிந்த எல்லாம் நொடியில் வர்ணமிழந்து நெஞ்சில் வலி.

அம்மாவை விட்டு பிரியும்போது கூட வராத வலி, இவனது சிறு கோப பிரிவில்,  ஊடலாவது உப்புகடலையாவது, ஓடிப் போய் அந்த உடையை மாற்றி வர வேண்டும் இவள் நினைத்து முடிக்கும் முன்,

அப்பொழுதுதான் அவளைப்பார்த்த மிஹிர் “என்ன மிர் இது, பார்க்க ப்ரெஃபஷனலா தெரியுற மாதிரி ட்ரெஸ் பண்ணு, ரெட் வேண்டாம், ப்ளூ இல்லனா ப்ளாக் அதுமாதிரி கலர்ல டிரஸ் செய்துட்டு வா, டைம் ஆகுது பாரு” என துரித படுத்தினான்.

போங்க மிஹிர், தயிர், குளிர், மக்கு மன்னிக்கு ஏத்த மட்டி அண்ணா, இப்ப நான் அந்த டிரஸ் போட்டுகிட்டா நீங்க சொன்னதுக்காக செய்ற மாதிரில்ல இருக்கும்,

.மிஹிர் சொன்னதற்காக இவள் உடை மாற்றியதாக வியனுக்கு  தோன்றுமே என்ற தவிப்பு இருந்தாலும், வேகமா சென்று அந்த மை நிற உடைக்குள் இடம் பெயர்ந்தாள். வியனிடம் பேசினால் புரிந்து கொள்வான்.

காரிலும் ஆண்கள் இருவரும் முன்னால பெண்கள் இருவரும் பின்னால். வியனின் ஏற்பாடுதானோ??

பால்கொழுக்கட்ட படுத்தனும்னு நீ முடிவு செய்தா வலிக்க வலிக்க அடிப்பியோ,

அடுத்த பக்கம்