என்னைத் தந்தேன் வேரோடு 9(5)

ங்கு ஏதென்ஸில் அன்று இரவு,

“அவன் வர்றான், வர்றான், நீ ஓடு, ஓடூஊ.ஊ,அப்டிதான், ஹ ஹ ஹா, ஆங், அத எடு, அப்படித்தான், ஜோரா நாலு போடு, சே ஜஸ்ட் மிஸ், பிரவாயில்ல, ட்ரை அகெய்ன்”

இரண்டு உள்ளங் கைகளையும் மறைத்து பெரிதாக பேண்டேஜ் போடபட்டிருக்க, அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குவாட்டர்ஸின் வரவேற்பு அறையின் சோஃபாவில் அமர்ந்து துள்ளியபடி தொலைகாட்சியில் ஓடிய டாமுக்கு ஜெர்ரிரிக்கு எதிராக சப்போர்ட் செய்துகொண்டிருந்தாள் மிர்னா.

அப்பொழுது அங்கு வந்த வியன் அவளுக்கான இரவு உணவை ஊட்டுவதற்கு ஏதுவாக தயார் செய்ய தொடங்கினான்.

“அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுகிடுவேன் வியன், சொன்னா கேளுங்க, மிஹிருக்கும் கையில கட்டுதான, அவர் சாப்பிடலையா?” ஒரு வித கூச்சம் மற்றும் தயக்கத்தில் மறுத்தாள் இவள்.

“அவரை பார்த்துக்க அவரோட ஆள் வந்தாச்சே” தன் வேலையை தொடர்ந்து கொண்டு உற்சாகமாய் அவன் சொல்ல,

ஆச்சரியமாய் பார்த்தாள் மிர்னா.

“மின்னிக்கு எக்ஸாம், இங்க மீட் ஆரம்பிச்ச பிறகுதான் வருவான்னு மிஹிர் சொன்னாங்களே” தனக்குத் தெரிந்ததை சொல்லி விசாரித்தாள்.

“இந்த ஆக்சிடென்ட் நியூஸ் கேட்டதும் மின்மினி அவங்க அப்பாவ கூட்டிட்டு இன்னைக்கே வந்துட்டாங்க”

“அப்ப எக்ஸாம்?” எனக்காக எத்தனை பேர் எதையெல்லாம் சக்ரிஃபைஸ் பண்ண வேண்டி இருக்குது?“ குற்றமனப்பான்மை வந்துவிட்டது மிர்னாவுக்கு.

பார்த்திருந்த வியன் முகத்தில் கனிவும் ஒரு கண்டிப்பும் இடம் பிடிக்கின்றன.

“எந்த ஒரு அச்சீவ்மென்டும் டீம் வொர்க்தான் மிர்னு, அதோட எல்லோரும் அடுத்தவங்க நல்லதுக்காகன்னு செய்றதும் இல்ல, தனக்காக செய்றதுதான், மிஹிர்க்கு ஒரு கோச்சா தான் ஜெயிக்கனும்னு ஆசை, இது அவர் ஃப்ரஃபஷன், மின்மினிக்கு மிஹிர் நல்லா இருக்கனும்னு ஆசை”

இவளுக்கு நிதர்சனத்தைச் சொல்லி ஆறுதல் செய்ய முயன்றான்.

“அப்படினா உங்களுக்கு?” அதை இப்படி ஒரு கோணத்தில் எடுத்து இப்படியாய் விழி உயர்த்தி அருகில் நின்றவனை யாசக பார்வைப் பார்த்தாள் அவள். இப்பவாவது ஐ லவ் யூ ன்னு சொல்லேண்டா,

அவளருகில் நின்றிருந்தவன் அவள் முகம் நோக்கி குனிந்து தன் கண்களால் அவள் கண்களை ஊடுருவினான்.

பெண் நெஞ்சோடு அவன் வாசமாய்,

மொத்த இவளும் அவன் வசமாய்

காற்றாகி கரைந்து அவனுக்குள் சுவாசமாய்

கண்மூடி அவன் உயிர் ஆழியில் ப்ரவேசமாய்

உருவமற்ற ஓர் அலையாய் அவனுள் இவள் ப்ராவகமாய்,

“இதுவும் அப்படிதான், I’m a  very selfish man you know” அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவில்லை அதற்குள்

“ம்கும்” தங்கள் வருகையை இங்கிதத்தோடு அறிவித்தபடி மிஹிரும் அவனை தொடர்ந்து மின்மினியும் வந்தனர், மின்மினி மிஹிருக்கு நிச்சயிக்கப் பட்டிருப்பவள்.

“சீக்கிரமா வந்து இவட்ட இருந்து காப்பாத்துங்கன்னு சொன்னேன், ரொம்ப லேட் பண்ணிட்டீங்க பாஸ்” மிஹிர் தொடங்க அடுத்து பெண்கள் ஒரு குழுவாக ஆண்கள் எதிரணியாக ஒரே ஜாலி கேலிதான்.

ரவில் தூங்கிக்கொண்டிருந்த மிர்னாவுக்கு கைவலி காரணமாக விழிப்பு வந்தது.

பெயின் கில்லர் எஃப்ஃபெக்ட் முடிந்துவிட்டது போலும். வலி அதிகமாக இருந்ததால் மீண்டும் தூங்க முடியும் என தோன்றவில்லை அவளுக்கு.

அடுத்த படுக்கையில் அம்மச்சி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

மிர்னாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது அந்த இரண்டு படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மென்ட். அதன் ஒரு அறையை மிஹிரும் வியனும் பகிர்ந்து கொள்ள, அடுத்த அறை இவளுக்கும் அம்மச்சிக்கும். இடையில் வரவேற்பறை.

அங்கிருந்து தொலைகாட்சி பார்க்கலாம் என இவள் தன் அறை கதவை திறந்தால் இவள் அறை வாசலில் பச்சை நிற குல்ட் விரித்து அதில் தூங்கிக் கொண்டிருந்தான் வியன்.

அந்நொடி அவளுக்கு தோன்றிய உணர்ச்சிக் கலவைக்குப் பெயரில்லை.

ஆக நடந்ததை கொலை முயற்சி என வியனும் நம்புகிறான். அதனால் பாதுகாப்புக்கென இங்கிருக்கிறான் போலும்.

எத்தனை வசதிக்குப் பழக்கப் பட்டவன், இளவரசன், இவளுக்காக தரை மீது மெத்தை கூட இல்லாமல் வெறும் துணி மீது.

றுநாள் நடந்த முதல் சுற்றில் மிர்னாவை எடுத்த உடன் உலக சாதனை எதற்கும் முயற்சி செய்ய அனுமதிக்கவில்லை மிஹிர்.

மேலும் உலக தரவரிசையில் முன்னனியில் இருப்பவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததால் போட்டியும் நெக் டு நெக்.

ஆனால் மிஹிரின் திட்டத்தை பின்பற்றிய மிர்னா முதலில் இருந்து அந்த சுற்றின் இறுதிவரை முதலிடத்தில் இருந்தாள்.

முதலிடத்தோடு அவள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற பிறகே, மிர்னாவை அனுமதி பெற்று அடுத்த வேர்ல்ட் ரெக்கார்ட் உயரத்தை முயற்சி செய்ய சொன்னான் மிஹிர்.

தனது உலக சாதனையை தானே முறியடித்து புதிய உலக சாதனை செய்தாள் மிர்னா.

போட்டி முடிந்து குவாட்டர்ஸுக்கு வரும் வழியில் அவள் புலம்பினாள் “இந்த லாஸ்ட் ஜம்பை முதல்லயே செய்திருப்பேன்ல, இதுக்குள்ள வீட்டுக்கு போயிருப்போம்”

“அப்படி நீ கோமாளித்தனம் செய்ய கூடாதுன்னு தான் உனக்கு கோச் ஏற்பாடு செய்ததே” வியன் சொல்ல

ஆங், நான் கோமாளியா? எம் எம் கோமாளியாமா?? யாரங்கே, கோமாளி என்றால் யார் என்று அறியாத இந்த கோமானின் குற்றத்திற்கு நம் ராஜ்ய ராஜ தண்டனையை அறிவியுங்கள், ஓ ராயல் க்ரைம், நான் தான ஜட்ஜ்மென்ட் குடுக்கனும், ம், என்ன குடுக்கலாம்,?

“போ, நான் உன் பேச்சு கா” தண்டனையை அறிவித்தாள் மிர்னா.

அதன்பின் தனது குவார்டஸிலும் தன் அறைக்குள் சென்று கதவை லாக் லாக்.

அடுத்த பக்கம்