என்னைத் தந்தேன் வேரோடு 9

ருகிக் கொண்டிருந்தாள் வேரி தன்னவனின் இறுகிய அணைப்பில். அவள் உச்சந்தலையில் விழுந்த அவன் முத்தத்தின் மொத்த பொருள் நேசம்.

உன் வலி என்னுடையது என்ற பாச பதிவாய், வாழ் நாளுக்கும் நீ என்னுடையவள் என்ற உரிமை பிரகடனமாய்,

உன் யுத்தத்தில் உன்னோடு நான் ஓர் அணியாய் என்ற செய்தியின் சுருக்கமாய், என்னை தாண்டியே தொட வேண்டும் தீங்கெதுவும் உன்னை என்ற வாக்குறுதியாய் அதன் உட்பொருள் விரிய,

கனிந்து கனிரசமாய் கசிந்தது காதல்.

பால்வண்ண பருவமும், பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒருமையும், பத்தினி பதி என்ற உறவும், நேர்ந்திருக்கும் நெருக்கமும், திரை அகன்ற நெஞ்சமும், திரை கடலாய் ஆடும் திவ்ய மனமும்,

அன்று இரவு கவினைப்போல் தானும் குளித்துவிட்டு வந்து நின்ற வேரிக்கு வழக்கம் போல் அவர்களது அறையின் படுக்கையில் போய் படுக்க தடுமாற்றம்.

முன்பொரு நாள் எதுவாயினும் சம்மதம் என்று அவன் அருகில் முதல் தடைவையாக படுத்த பொழுதின் எஃகுறுதி இன்று வர மறுக்கிறது. அன்று கடமையில் இறுகி இருந்த மனம் இன்று காதலில் குழைந்திருப்பதாலா? தெரியவில்லை.

பெண்மை புதிர்.

வாசலில் தயங்கி நின்றவளை அபொழுதுதான் பார்த்த கவின் இவள் நோக்கி  வர படபடப்பு. அவன் முகம் பார்க்க ஒரு ஆர்வம், தோள் சேர ஓர் தேடல், தடையாக வெட்க தயக்கம்.

பெண்மை போர்.

கதவை தாளிட்டு, அவள் கரம் பற்றி அவன் அழைத்து சென்ற விதத்திலேயே ஒருவித ஏமாற்றத்தை உணர்ந்தாள் வேரி.

பாசமாய் மட்டுமே பற்றி படர்ந்திருந்தது அவனது விரல்கள்.

இன்னுமாய் அவன் இவளை முழுதாக ஏற்கவில்லை, அவளிடம் இன்னுமாய் ரகசியம் இருக்கிறதென்று நினைக்கிறானா? எதோ ஒருவகையில் அவன் இவளை, இவள் வார்த்தைகளை நம்பவில்லை ,அல்லது இவளை முழுதாய் ஏற்க அவனால் முடியவில்லை,

மனதிற்குள் கொந்தளித்த ஏமாற்றம் கண்ணில் வராமல் இருக்க படாத பாடுபட்டாள் வேரி.

“இனிமேலாவது நைட் முழுக்கவே என் கூட இருப்பதான?”

“ம், நீங்க தூங்கினதும் இங்கயே தரையில் படுத்துகிறேன்”

அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவளை தன்னோடு மெத்தையில் சரித்தவன்,  அவள் பின்புறமிருந்து அணைத்த படி தூங்கிப்போனான்.

வேரிக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை. அவன் தூங்கிவிட்டான் என அறியவும் அதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த அத்தனை கண்ணீரும் வெளிநடப்பு.

எழுந்து சென்று தரையில் தன் வழக்கபடி புடவை விரித்து சுருண்டாள். அவள் எதிர்பாரா வண்ணம் அவள் பின்னாக வந்து அவனும் முன்போல் அவள் பின்னிருந்து அணைத்தபடி படுத்தான்.

“இல்…” இவள் மறுப்பு தெரிவிக்கும் முன்

“மரணம் பிரிக்கும் வரையும் நீ எங்கேயோ நானும் அங்கேதான்னு கடவுள் முன்னால ப்ராமிஸ் செய்துதான் கல்யாணம் செய்தோம்”

இன்னுமாய் இறுக்கி அணைத்தவன் அவள் கண்ணீர் உணர்ந்து “ஹேய்”என்று தன் புறமாக திருப்பினான்.

“என்னாச்சுடா?”

“நீங்க என்ன நம்பல, நான் எல்லாம் சொல்லிட்டேன்” அடக்கப்பட்ட அழுகையோடு காயம்பட்ட அவள் உரிமை வெடிக்காமல் வெடித்து வர,

அவள் சொல்ல வந்ததின் அர்த்தம் அவனுக்கும் புரிய,

“நீ நினைக்கிற மாதிரி உன்னை நம்பாம  இல்லடா, இன்னைக்கு ஹோம் இன்சிடன்டை வச்சு ஒரு உணர்ச்சி வேகத்துல என்னை நம்பிட்டு, நாளைக்கு நாம எடுத்த முடிவு சரியான்னு நீ குழம்ப கூடாது,

இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், நமக்குள்ள அன்டர்ஸ்டண்டிங் ஸ்ட்ராங் ஆகட்டும்னு நினச்சேன்” தன் பக்கத்தை தெரிவித்தான் அவன்.

“தினம் தினம் நம்பிக்கை முந்தின நாளவிட கூடிட்டே போகும், அப்ப எந்த நாள பெர்பக்ட்டானா நாள்னு சொல்வீங்களாம்?” கேட்டபடி அவன் மார்பிற்குள் தாய் கோழியின் இறக்கைக்குள் புதையும் சிறு குஞ்சாய் சுருண்டாள் வேரி.

அவள் மனதில் நிம்மதி வந்திருந்தது.

எத்தனை சொன்னாலும் இவன் இடம் பெயர மாட்டான் என வேரிக்குத் தெரியும். அவன் பிடிவாதமும் அதை அவன் சாதிக்கும் விதமும், அவர்கள் கல்யாணம் நடந்த முறையே சொல்லவில்லையா?

அவன் தூங்கவும் அடுத்த இடத்திற்கு மாறிக்கொள்வது என மனதிற்குள் நினைத்திருந்தவள் மீண்டும் விழிப்பு வரும் போதுதான், தான் தூங்கி விட்டதை உணர்ந்து,

பதறியபடி வழக்கமான துயில் கலையும் நேர ஈர உணர்வை, அணைத்திருந்த கணவனின் அருகாமையின் நிமித்தம் குமுறும் குற்ற மனப்பான்மையும், அவமானமுமாகத் தேட, அங்கு அவள் தேடிய  எதுவுமில்லை.

அடுத்த பக்கம்