என்னைத் தந்தேன் வேரோடு 7 (8)

குளித்துவிட்டு இரவு உடையில் பக்கத்தில் வந்து கவின் படுத்தபோது சில நொடி பதட்டமாக இருந்தது வேரிக்கு. பின் மீண்டுமாக அவள் சிந்தனைக்குள் நழுவினாள்.

இவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான் கவின். மீண்டும் கவனம் அவன் மீதே திரும்பியது.

பக்கத்தில் பார்த்தாலும் தூரத்தில் பார்த்தாலும் எப்பொழுதும் இவன் அழகு. மனதிற்குள் அவனை ரசித்துக்கொண்டாள்.

பகலில் இவளுக்கு தேவையானது என இவளை கூட்டி கொண்டுபோய் அவன் வாங்கி குவித்த விதம் ஞாபகம் வந்தது. இப்படி இவன் என்னை விரும்ப அப்படி என்ன என்ட்ட இருக்குது?

மனதிற்குள் மீண்டும் அமில ப்ராவகம்.

கூடவே மிர்னா வியன் திருமண திட்டம் ஞாபகம் வந்தது. இது மட்டும் நடந்துவிட்டால்? இந்த குடும்பத்தில் இவள் நிலை இன்னுமாய் உறுதிப்பட்டுவிடுமோ? ஒரு நொடி அப்படி நினைத்தவள் தன்னையே கடிந்து கொண்டாள்.

அவர்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் திரும்ணம் நடைபெற வேண்டும். இதென்ன இவளுக்காக அவர்கள் திருமணம் நடைபெற வேண்டும் என நினைப்பது?

எப்படியாவது கவின் தனக்கு நிரந்தரமாய் கிடைத்துவிட மாட்டானா என தன் மனம் அலைபாய்கிறது என அவளுக்கு தெளிவாக புரிந்தது அந்த நொடி .

அவள் முகத்தையே கவின் பார்த்துக்கொண்டிருக்கிறான் என புரிய “குட் நைட்” என்றுவிட்டு கண்மூடி படுத்துக் கொண்டாள்.

மனதிற்குள் கவின் பெற்றோரை எப்படி மிர்னாவை ஏற்க வைப்பது என்ற சிந்தனை ஓட தொடங்கியது அவளுக்கு.

சிறிது நேரம் அவளைப் பார்த்திருந்த கவின் ஒரு நிறைவுடனே தூங்கிப்போனான். காரணம் இன்று முழுவதுமே வேரி அவனிடம் மனம் வேறுபடவில்லை என்ற நினைவு.

ஆனால் எதோ தோன்ற இடையில் விழிப்பு வர அருகில் வேரி  இல்லை.

எழுந்து வெளியே சென்று முதல் தளத்திலிருந்த அவனது அறை சாவி துவாரத்தின் வழியாக பார்த்தால்,  அன்று போல் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் வேரி.

கையில் மொபைலை பிடித்திருந்தாள்.

யாரிடமாவது பேசிக்கொண்டே தூங்கிவிட்டாளா? இவன் முன் பேசாமல் இப்படி ரகசியமாக வந்து பேசவேண்டுமென்றால் அந்த நபர் யார்???

தொடரும்…

2 comments

Leave a Reply