என்னைத் தந்தேன் வேரோடு 7 (7)

“ஒரு தடவை கூட நீ ஜெயிக்கலையா?” வியன் கேட்க இல்லை என்பதுபோல் தலையை இடவலமாக ஆட்டினாள் மிர்னா பரிதாபமாக .

“அதெப்படி? அந்த வாட்டர் ஸ்பிட் பண்ற கேம்ல கூடவா நீ ஜெயிக்கல?”

“ஆங், அது காக்ளிங் கிங், 3 சான்ஸ், ஃபர்ஸ்ட் சான்ஸப்ப லாஸ்ட் மினிட்ல ரியா என்னை டிக்கிள் செய்துட்டா, வாட்டரை விழுங்கிட்டேன், சொதப்பிட்டு,

நெக்ஸ்ட் டைம் டச் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டுதான் செய்தேன் அவ வேற ட்ரிக் செய்துட்டா”

சட்டென முகம்  சுருக்கி தன் இரு கண்களையும் இறுக்கி மூடி, தன் காதுகளை தன் கைகளால் பொத்திக் கொண்டாள் மிர்னா.

ரியா ஒரு ப்ளக்கரில் கரப்பான் பூச்சி ஒன்றை பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள்.

வாய்விட்டு சிரித்தான் வியன்.

“தூ சான்ஸ் தொதர்ந்து ஸ்பித் பண்ணலன்னா அவங்களுக்கு தெர்த் சான்ஸ் கிதையாதுன்னு ரூல்“ இவனுக்கு விளக்கிய ரியா,

“இதுக்கெல்லாம் பயப்பதலாம மிர்னி,பாரு நான் இல்ல” என்றபடி மிர்னாவின் பயத்தை போக்க முற்பட்டது,

அதே நேரம்

“hi sweet heart I was just longing for you”  என்றபடி ஒரு முழங்கால் மடக்கி தரையில் அமர்ந்தான் மிர்னா முன்பாக மிஹிர்.

திருமணத்திற்கு ப்ரோபோஸ் செய்வதுபோல்.

அப்பொழுதுதான் முதல் தடவையாக மிஹிரைப் பார்த்த மிர்னாவிற்கு மனதிற்குள் சுள்ளென்றது.

வேர்ல்ட் கப் வென்யூல விறகு விக்க வந்தானாம் வெங்கி, வெறும் கிணத்துல விரால் வளப்பேனான்னாம் அவன் தம்பி, எவன்டா இவன் சம்பந்தம் இல்லாம சைக்கிள் கேப்ல சடுகுடு ஆடுறது,

மாத்திபோட்டு மத்தளம் வாசித்தேன்னா மாங்காயும் தேங்காயுமா டெவலபாகிடும் உன் மங்கி முகம்,

நிமிர்ந்து வியன் முகத்தைப் பார்த்தால் அவன் புன்னகையோடு நின்றிருந்தான். பொங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு. ஓ அவ்ளவு தூரம் ஆகிபோச்சா?

“நச்சு பிச்சுன்னு நல்லதா இன்னும் நாலு மூஞ்சிய காமிங்க அப்புறமா என் ரேஞ்சுக்கு ஏத்தாப்ல எதாவது ஒரு ப்ரின்ஸை பிக்கப் செய்றேன்” வியன் முகத்தைப் பார்த்தபடி கடித்து துப்பினாள் மிர்னா.

ஒரு கணம் அதிர்ந்த வியன் பின்பு அவள் குழப்பத்தை புரிந்தவனாக “ஏய் வாலு” என்று செல்லமாக அதட்டினான்.

இதற்குள் பேந்த விழித்த மிஹிரும் வெடித்துக் சிரித்தான்.

அப்பொழுதுதான் புரிந்தது அவளுக்கு மிஹிர் முழங்காலிட்டது ரியாவிற்காக என்று.

“நீ இவ்ளவு ஜாலி டைப்னு எனக்கு தெரியாது மிர்னி” என்றபடி ரியாவை அள்ளிக்கொண்டு எழுந்தான் மிஹிர்.

அவனுக்கு மிர்னா தப்பாக புரிந்து கொண்டு பேசுகிறாள் எனத் தெரியவில்லை.

விளையாட்டாய் தன்னை கிண்டல் செய்கிறாள் என்றே எண்ணிக்கொண்டான். அவள் கோமாளி வேசமும் அதற்குக் காரணம்.

அதனால் ஆரம்பம் முதலே அவளிடம் தயக்கமின்றி பழகத்தொடங்கினான் மிஹிர்..

ரவு உணவு வரை எல்லாம் இலகுவாக செல்வதுபோல்தான் இருந்தது மிர்னாவிற்கு. அடுத்து வியன் விடை பெறுவான். இவள்???

என்னதான் பழக இனியவர்களாக ரஜத் குடும்பம்  இருந்தாலும் அவளுக்கு அது அடுத்த வீடல்லவா?

அத்தனை சண்டை போட்டிருந்தாலும் அவர்களின் செயல் எதுவும் இவளுக்கு பிடிக்கவில்லை என்றானாலும் பெற்றோர் வீடும் அவர்களது அருகாமையும், அதன் பாதுகாப்பு உணர்வும் அடுத்த வீட்டில் வருவதில்லைதானே!

கடும் தனிமையை உணர்ந்தாள்.

அந்த எண்ணமே அவளை சரியாக சாப்பிடக் கூட அனுமதிக்கவில்லை.

ரஜத் குடும்பம் கேரளத்தை பூர்விகமாக கொண்டவர்கள். அதனால் இரவு உணவு சாதமும் மீனும்.

ரஜத்துக்கு அருகில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த வியன் சிறிதுநேரம் இவள் உணவை அளைவதை பார்த்திருந்தவன் எழுந்து வந்து இவளுக்கு அடுத்து இருந்த காலி இருக்கையில் இயல்பாய் அமர்ந்தான்.

இவள் தட்டில் பரிமாறி இருந்த மீனை, முள்நீக்கி பக்குவமாக சாப்பிடும் படி சிறு துண்டுகளாக எடுத்து  வைக்க தொடங்கினான்.

“மீன் சாப்பிட கஷ்டபடுவியோ? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, நாளைல இருந்து நான் பார்த்துகிறேன், இன்னைக்கு நீ ஒழுங்காவே சாப்பிடலை, இப்பவாவது கொஞ்சம் சாப்பிடு“

மீன் பிய்க்கும் வேலையில் கவனமாக தட்டை பார்த்துக்கொண்டே வியன் சொல்ல அழுகை பொங்கியது அவளுக்கு,

“நீங்க ஊருக்கு போகலையா?“

“உன்னை விட்டுட்டா? ரஜத் வீடும் டெல்லியும் என்ன ஆறது, நோ  வே, எனக்கு என் தாய் நாடும் தலை நகரமும் நண்பனும் ரொம்ப முக்கியம்”

அவள் பேசும் பாவனையில் சொல்லிய வியன் அவள் கண்களைப் பார்த்து ஆறுதலாய் தலை அசைத்தான்.

அழுகையும் சிரிப்புமாய் அவனை பார்த்தவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

உணவிற்கு பின் அனைவரும் தூங்கக் கிளம்ப, வியனிடம் அவள் கேட்க நினைத்த எதையும் கேட்கும் வாய்ப்பு வரவே இல்லை.

அவனை பரிதாபமாக திரும்பி பார்த்துக்கொண்டே பிரிஸில்லாவுடன் அவள் இவளுக்காக காட்டிய அறையை நோக்கிச் சென்றாள்.

அடுத்த பக்கம்