என்னைத் தந்தேன் வேரோடு 7 (4)

இந்த கையை பிடிச்சுக்கிறத தாண்டி மனசை எல்லை கடக்காம வச்சுக்க முடியாதா என்ன? என்று அவன் நினைத்த தருணம்

“சிட் செய்ய சீட் கொடுத்தா ஸ்லீப் செய்ய மேட் கேட்குமாம், எம் ஓ என் கே இ ஒய் பிரைன்”

மிர்னா வென்யாவிடம் எதோ சொல்லிக்கொண்டு இருப்பது இவன் காதில் விழுந்தது.

பல்ப்பு வாங்கினான் வியன்.

ஒரு நொடி திகைத்தவனுக்கு சிரிப்பு வந்தது. எதோ தோன்ற ரியர்வியூ மிரரைப் பார்த்தால் இவனைப் பார்த்து மௌனமாக குலுங்கிக் கொண்டிருந்தான் ரஜத்.

இவன் பார்க்கவும் ஒற்றை விரலால் பத்திரம் காட்டினான் ரஜத்.

என் தங்கச்சி, கோடு தாண்டுனா?! உதட்டசைவில் ஒலியின்றி அவன் மிரட்ட, கன்னத்தில் போட்டுக்கொண்டான் வியன்.

இன்னும் ஒருவருஷமா? இன்னைக்கு முடிந்தது ஒலிம்பிக்காக இருக்கக் கூடாதா என்று தோன்ற தொடங்கியது அவனுக்கு.

வினிடம் மிர்னா பேச நிராகரித்தது அவன் சொல்லாமலே வேரிக்கு தெரிந்தது.

அவனது ஹாய் மிர்னாவிற்கு பின் அவன் பேசியது அவனது தம்பியிடம் அல்லவா? மனம் வலித்தது வேரிக்கு. ஏமாற்றமாயும் இருந்தது.

திரும்பி மிர்னாவை அழைத்து அவளுக்கு புரியும் வகையில் கவினை பற்றிச் சொல்ல வேண்டும் என்று ஒரு உந்துதல்.

ஆனால் அவளிடம் பேச இவள் முயற்சிப்பது கவினுக்கு இன்னும் வருத்தமாய் ஏன் கோபமாய் இராதா?

என்ன செய்வதென்று புரியாமல் கவினின் முகத்தைப் பார்த்தாள்.

ஒரு வினாடி திகைத்த அவன் முகம் தன் தம்பியிடம் உரையாடும் போதே இயல்புக்கு திரும்பி இருந்தது. இப்பொழுதும் இயல்பாய்தான் இருக்கிறது.

இவள் முகம்தான் வாடி இருந்தது.

தன் இருக்கையில் இருந்து எழுந்து எதிர் புறத்தில் நின்றிருந்த இவளிடமாக வந்தான் கவின்.

சோகமாக பார்த்தாலும் கூடவே அவன் அருகாமை தரும் படபடப்பையும்  பார்வையில் ஏந்தி இருந்தாள் அவள்.

அவள் பின்புறமாக வந்தவன் அவள் தோள்களை ஆறுதலாக பிடிக்க அமைதியும் புயலும் அவளுக்குள்.

அசையாமல் நின்றாள். விழி மூடிக் கொண்டாள். இதய ஒலி உணர்ந்தாள்.

“வியனுக்கும் மிர்னாவுக்கும் மேரேஜ் ஆகிறப்ப இதெல்லாம் சால்வ் ஆகி இருக்கும்”

ஆறுதல் சொல்லும் தொனியில் ஒரு துள்ளலான குரலில் கவின் சொன்ன இந்த வார்த்தைகள் காதில் விழ, .

சட்டென அவன் புறமாக திரும்பி பார்த்தாள் வேரி.

அப்படி ஒரு ஆச்சர்யம் அவள் உடல் மொழியில்.

“ஹப்பா, என்ன பெரிய முட்டகண்ணு”

அவன் பார்வை மட்டுமல்ல அவன் ஒற்றை விரலும் அவள் கண்ணை தொட்டு சுற்றியது.

அவன் அருகாமை மற்றும் தொடுகை தடுமாறச் செய்ததைவிட அவன் சொன்ன செய்தியின் தாக்கம் அவளிடம் அதிகமாய் அலையடிக்க,

அவள் முகம் தொட்ட அந்த ஒற்றை விரலை தன் வலகை பிடிக்குள் சிறை செய்தவள்,

“நிஜமாவா?“ என முழு விழி விரித்து கேட்க,

கேள்வியின் முடிவில் மூடாமல் சற்றே திறந்திருந்த அவள் இதழ்களில் நின்றது அவன் பார்வை.

“ஹனின்னு உனக்கு ரொம்ப கரெக்டா பேர் வச்சிருக்காங்க குல்ஸ்”

அவனின் இந்த வார்த்தைகள் அவள் மனம் தொடவில்லை.

முந்தைய செய்தியின் தாக்கம் அப்படி.

அவள் உதடுகளை நோக்கி நீண்டது அவனது மறு கையின் ஆட்காட்டி விரல்.

பேச்சு வேகத்தில் குறுக்காக வந்த அவனது இந்த விரலையும் தன் இடக்கைக்குள் பிடித்து வைத்துக் கொண்டாள்.

“நிஜமாவா சொல்றீங்க?  மிர்னா?? அவ சம்மதிக்கனுமே! அவளுக்கு கல்யாணமே பிடிக்காதே” பட படத்துக் கொண்டிருந்தாள் வேரி.

உள் மனதில் ஓர் பேராவல்.

“அதெல்லாம் மிர்னாவுக்கு இஷ்டம்தான், பட் இப்ப ஒலிம்பிக்  வரை எதுவும் வேணாம்னு வியன் நினைக்கிறான். நீயா இதைப் பத்தி மிர்னாட்ட சொல்லிடாத, தேவை இல்லாம அவ மனசை கலைக்க வேண்டாம்” கவின் விஷயத்தை புரிய வைக்க,

இறக்கையில்லாமல் பறப்பது போல் இருந்தது ஒரு கணம் வேரிக்கு.

பின் மீண்டும் முகம் வாடிவிட்டது.

அடுத்த பக்கம்