என்னைத் தந்தேன் வேரோடு 7

மிர்னா தன் முதல் ஜம்பிற்கே 6.அடி 11” பார் செட் செய்ய சொன்னவுடன் வியன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனான். 2.1082 மீட்டர்!!!

அதுவரை உலக சாதனை 2.09 மீட்டர் என்பதை அப்பொழுதுதான் அவன் அறிந்திருந்தான். உபயம் கூகிள்.

மிர்னா எதிலும் அதிரடி பார்ட்டிதான் என்பதை அவன் அறிந்தவன் என்தால்,

2 மீட்டர் உயரம் வரை பார் செட் செய்ய பட்டபோதெல்லாம் அவள் குதிக்கும் வாய்ப்பை பயன்படுத்தாமல் காத்திருப்பதை கண்டு அவன் குழம்பினான் என சொல்ல முடியாது.

அவளது முந்தைய பெஸ்ட் 2 மீட்டர் என்பதால் அமைதியாகவே இருந்தான்.

ஆனால் ஆல் ஆர் நத்திங் என்பதாக அடுத்து அவள்  6.11” ஐ முயற்சித்த போது அவனுக்கு முதலில் வந்த உணர்வு கோபம்.

அவள் ட்ராக்கில் ஓடிவர தொடங்கவும் அவனுக்கு மூச்சடைக்க ஆரம்பித்தது.

அவள் ஜெ போல் வளைந்து ஓடி தரையிலிருந்து டேக் ஆஃப் செய்யும் போது அவன் உணர்ந்த அழுத்தத்தின் அளவு, அவள் முதுகும் நுனிக் காலும் பாரை தட்டி விடாமல் அவள் தரை தொட்டபின்புதான் அவனுக்கு புரிந்தது.

அடைத்த நெஞ்சு தான் அதுவரை மூச்சு விடவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது. பார்க்கவே தான் இத்தனை பாடு படுகிறோமே செய்யும் போது அவளுக்குள் எத்தனை மன அழுத்தம் இருக்கும்??

தவறின்றி தாண்டிவிட்டாள் என உணர்ந்த நொடி  தாங்க முடியாமல் இவன் அவளைப் பார்த்து ஓடினான்,

ஆனால் அவள் எதையும் வெளிக் காட்டாமல் ஒரு சின்ன குதியல் கொண்டாட்டம் கூட இல்லாமல் அமைதியாக இவனிடமாக வந்தாள்.

மிர்னா கை நீட்டும் முன்பாகவே அவள் கையை தானே பற்றி குலுக்கினான் வியன்.

“கங்ராட்ஸ் மிர்னு, கலக்கிட்ட போ”

இப்பொழுது இவன் கண்களைப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்தது என்ன?? வலியா  கெஞ்சலா?

அவளுக்கோ தாண்டி தரை தொடும் வரை கவனம் வதனம் கரம் சிரம் முழு சரீரம் ஏக நிலை.

ஆனால் ஜெயத்தை உணர்ந்த நொடி மனம் வெடித்து சிதறுவது போல் ஓர் உயிர் சுகம். ஓடிச் சென்று தன்னவனை தழுவி தைய தக்க என்று ஆடச்சொன்னது ஒரு குணம்.

அப்பொழுதுதான் அவள் அதிர்ந்தாள்.

எவ்வளவு எளிதாய் மனம் ஆண் பெண் எல்லையை காதல் பாலம் கொண்டு தாண்டி போகிறது?? இதுவரை காதலின் இந்த பக்கத்தை உணராதவள் பயந்தாள்.

மற்ற எந்த ஆணுடனாவது இப்படி இவளுக்கு  தோன்றுமா??

இனி ஒவ்வொரு நொடியும் இவள் தன் மனதிற்கு கடிவாளமிட வேண்டி இருக்குமோ?

இந்த வெறும் நட்பு நிலை தைய தக்காவிற்கே மனம் பதற, நொடிக்கு நொடி அதிகரிக்கும் மன அன்யோன்யம் பிரிய நேர்ந்தால் என்ற அடுத்த பயங்கரத்தை ஞாபகப்படுத்த இவன் இவளை விரும்புகிறானா இல்லையா? என்ற பரிதவிப்பு,

என்னவனாவானா? இல்லை என் பெரும் இழப்பு இவன் என்றாகுமோ? மாவலி மனதில். பதில் சொல்லிவிடேன் என்ற ஒரு கெஞ்சல் கண்களில்.

அதே நேரம் இவள் அருகில் வந்த வியன் இவள் கை பற்றி குலுக்க, அவனது மிர்னு அவளுக்கு வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் ஆறுதலைப் பாய்ச்சியது.

அவள் முக பாவத்தை பார்த்த அவனுக்குமே ஆரவாரிக்க முடியவில்லை. ஆனால் அவளை இயல்புக்கு கொண்டுவர முயன்றான்.

“முதல்ல 6ஃபீட் 11 ட்ரை பண்றீங்கன்ன உடனே ரெண்டு உதை கொடுக்கனும்னு தான் தோணிச்சு, இப்போ பாவம் பிழச்சு போங்கன்னு விட்டுட்டேன்” இலகுவாகவே அவன் சொல்ல,

“இல்ல, இந்த ஒரே அட்டெம்ப்ட்ல தெரிஞ்சிடுமில்லையா, அடுத்து என்னன்னு? தேவையில்லாம எதுக்கு உங்களை ரொம்ப வெயிட் செய்ய வச்சுகிட்டு, சீக்கிரம் உங்க அம்மாப்பாட்ட போங்க வியன்” என தன் பக்கத்தை இவள் வெளியிட்டாள்.

அதிர்ந்து போனான் அவன். எந்த விஷயத்தில் அவனுக்காக யோசித்திருக்கிறாள்?

இப்பொழுது அவள் உணர்வு முழுவதுமாக அவனுக்கு புரிவதுபோல் பட்டது.

அவன் இழப்பு அவளை எத்தனையாய் தாக்குகிறது?

இந்த சிந்தனை அவள் இலக்கை அடையவிடாமல், கவனத்தை சிதறி, மனதை பலவீனமாக்கி, தோல்விக்கு வழி வகுக்குமோ?

இதை சரி செய்ய வேண்டும். நினைத்துக் கொண்டான் வியன்.

“எல்லாத்தையும் முடிச்சுட்டு வா, அப்புறமா பேசுவோம்” அவளிடம் சொன்னான்.

அடுத்த பக்கம்