மனதில் மிர்னாவை பார்க்கவேண்டுமென்று ஒரு ஏக்கம். பிறந்த வீட்டில் இருக்கும்போது புரியாத பாசம் இப்பொழுது புரிகிறதே!!
மனதிற்குள் மிர்னாவிற்காக ஜெபித்தாள்.
இவள் கண் திறக்கவும் ஆமென் என்றான் கவின்.
“ஜெபம் பண்றதுக்கு கூட என்ன சேர்த்துக்க மாட்டியா?” அவன் கிண்டலாகத்தான் கேட்டான். இவளுக்குள் டென்ஷன்.
“அது…வந்து, அப்படி இல்ல, நான்…உங்கள…எல்லாத்துக்கும்” அவள் தந்தி அடிக்க, அவன் சிரித்தான்.
“உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு அப்பப்ப இப்டி அழகா காமிச்சிகொடுக்ற குட்டி பாப்பா”
முழு கண்ணையும் திறந்து புரியாமல் விழித்தாள்.
“கோபம் வர்றப்ப என்னமா பொரிஞ்சி தள்ளுவ? இப்ப ஏன் இப்படி?”
அவளுக்கே அது அப்போதுதான் உறைக்க மெல்ல தலையை குனிந்து கொண்டாள்.
அவள் கன்ன கதுப்பில் ஏறிய செம்மையை கண்டவன், வல கை ஆள் காட்டி விரல் அங்கு ஒற்றைப் பயணம்.
“அழகுடா நீ”
மகிழ்ச்சியின் உச்சத்தை ஒரு நொடி உணர்ந்தவள் மறு நொடி பயந்தாள். இது நிலைக்குமா???
முதன் முறையாக தன் பிரச்சனையை யாரிடமாவது மனம் விட்டு பேசவேண்டும் என்று வேரிக்கு தோன்றிற்று,
உண்மையாய் இவளை நேசிப்பவர்கள், சூழலை புரிந்து கொள்ள கூடியவர்கள் புத்திசாலித்தனமாக தீர்வு சொல்லகூடியவர்கள் யாராவது வேண்டும்.
மனதில் மிர்னாவின் முகம் நிழலாடியது.
“எனக்கு மிர்னாவ பார்க்கனும்” கெஞ்சலுக்கும் அழுகைக்கும் இடையிலான ஒரு வேண்டுதல் இது
எங்கு மறுத்து விடுவான் என கெஞ்சுகிறாளோ என புரிந்த கவின், நான் ஏன் மறுக்கப் போறேன் எனும் விதமாக “ஹேய்” என தொடங்கிய கவின்,
”கண்டிப்பா ட்ரை பண்றேன், சீக்கிரம் கூட்டிட்டு போறேன்” என அவளுக்கு தேவையான வாக்குறுதியை கொடுத்தான்.
ஆனால் வேரிக்கோ அதுவே, இவனோடா? வெளியூர் போனல் இப்படி தப்பி போய் படுக்க அடுத்த அறைக்கு எங்கு போக? என்ற கேள்வியை எழுப்ப,
நிதர்சனம் புரிய அழுகையும் எரிச்சலும் வந்தது வேரிக்கு.
“இல்ல வேண்டாம்” திரும்பி நடக்க ஆரம்பித்தாள் அவள்.
அவளாக சொல்லாதவரை, அவள் ஷூ காலை பார்க்காத வரை அவள் காலில் குறை என யாரும் உணரக்கூட முடியாது.
ஆனால் இவள் ஏன் தன்னுள் இப்படி ஒழிந்து கொள்கிறாள்? கவின் அவள் செல்வதை பார்த்துக்கொண்டு நின்றான்.
அடுத்த 27ம் நிமிடம் 43 வது நொடியில் தன் முதல் ஜம்பில் உலக சாதனையை முறியடித்தாள் மிர்னா இந்தியமண்ணில்.
தங்கள் முதல் ஜம்பில் உலகசாதனைக்கு முயற்சிப்பது அபூர்வம். ஆனால் அதுதான் மிர்னா.
தொடரும்..
Wow super super very interesting…..plz daily updated i ak waiting sis