என்னைத் தந்தேன் வேரோடு 6 (7)

தெருவிற்கு வந்தவர்களை காலியாக மெல்ல கடந்தது அந்த பெரிய ஆம்புலன்ஸ்.

அவ்வளவுதான் அதை நிறுத்திய வியன் டிரைவரிடம் ஏதோ பேசிவிட்டு இவளை பின்னால் ஏறச்சொன்னான்.

“வியர் யுவர் ஸ்போர்ட்ஸ் வேர்” அவ்வளவுதான் அவன் பேசினான். டிரைவரை விலகி அமரச் சொல்லிவிட்டு டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான் வியன்,

சைரன் அலறியது.

பறந்தது அந்த ஸ்வராஜ் மஸ்டா.

இருந்தாலும் இது போதாதே!!!

ஐந்து நிமிடம் சென்றிருக்கும் இவர்கள் நுழைய வேண்டிய சாலையை போலிஸ் பேரிகேட் வைத்து மறிக்க, அத்தனை வாகனங்களும் தேக்கம்.

திரும்பி வேறு சாலையில் செல்ல கூட வழி இல்லை.

கடவுள் விரும்புறது நடக்கட்டும். வண்டி நின்றிருப்பது புரிய மிர்னா இப்படி நினைத்துக் கொண்டே வேகமாக உடை மாற்றினாள்.

இதற்குள் ஒரு போலீஸ் இவர்களது வாகனத்தை நோக்கி ஓடி வந்தார். நோயாளி அவசர சிகிச்சைக்கு செல்கிறார் என நினைத்திருப்பார் போலும்,

அப்படி இல்லை என் தெரிந்ததும் சைரன் ஆன் செய்து வந்ததற்காக குரல் உயர்த்தினார்.

ஆனால் வியன் விஷயத்தை சொல்லி இவளது நேஷனல் ரிக்கார்டிற்கான சர்டிஃபிகேட்டை காண்பித்தான்.

என்ன நினைத்தாரோ அந்த அதிகாரி, தன் வாக்கி டாக்கியில் பேசியவர் இவர்களுக்கான வழியை இவர்களுக்கு திறக்க சைகை காட்டிவிட்டு இவர்களிடம் வழி சொன்னார்.

ப்ரைம் மினிஸ்டரின் வருகைக்காக போக்கு வரத்து தடை செய்யபட்ட காலி சாலையில் இவர்களுக்கு அனுமதி.

ஸ்டேடியத்திற்கு வெகு அருகில்தான் மீண்டும் இவர்கள் ட்ராஃபிக்கிற்குள் நுழையவேண்டி இருந்தது.

அடுத்து வாகனம் நிற்பதை மிர்னா உணர்ந்த நொடி

“இறங்கு மிர்னா” வியன் குரலில் ஏறத்தாழ குதித்தாள். ஸ்டேடியத்தின் உள்ளே நின்றிருந்தனர்.

இவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

இவள் சைன் செய்த நேரம் 10:30.00 என்றது கடிகாரம். ஓர் நொடி கூட முன்னோ பின்னோ இல்லாமல் குறித்த நேரத்தில் மிர்னா அங்கிருந்தாள்.

நன்றி தெய்வமே, இதுதான் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னா, எனக்கு டபுள் ஒகே,

நின்று உணர்ச்சி வசப்பட, வியனைப் பாராட்ட எதுவும் தோன்றவில்லை மிர்னாவிற்கு. காரணம் அவள் பார்வையில் தெரிந்தது ஆடுகளம். அதிலிருந்த அந்த ஹை ஜம்ப் பார்.

மையலறையை ஆராய்ந்து கொண்டிருந்தாள் வேரி. அவளுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று இந்த சமையல். பாட்டியிடம் கற்றது. லன்சுக்கு நாமளே சமைக்கலாமா?

லாவண்டர் வண்ண சேலை!  நீண்ட கூந்தலை நுனியில் சிறிதாக மடித்து பாண்ட் மாட்டி இருந்தாள்.

அவளிடமாக வந்து நின்றான் கவின். அவன் உள்ளே வருவதைப் பார்த்ததும் உள்ளே வேரியுடன் நின்றிருந்த சமையலாள் அன்பழகி அவசரமாக வெளியே போனாள்.

“குல்ஸ், உன் அக்கா காம்படிஷன்ல நின்னுட்டு இருக்கா, ப்ரேயர் பண்ணிக்கோ” கவினின் குரலில் திரும்பிப் பார்த்தவள் அவன் சொன்ன செய்தியில் விழித்தாள்.

“அது… அக்கா உங்கட்ட பேசுறாளா? அவ எப்படி இருக்கா, தனியா எப்படி சமாளிக்கிறாளாம்?”

“ம், பரவாயில்லையே இப்பவாவது இதெல்லாம் கேட்கனும்னு தோனிச்சே”

அவளது இரு தோள்களை பின் புறமிருந்து பற்றி அவளை தங்கள் அறையை பார்த்து நகர்த்திக் கொண்டு போனான் கவின்.

அவன் ஸ்பரிசத்தில் சிலிர்க்க தோள்களை சிறிது குறுக்கியவள் மனம் மிர்னாவிடம் சென்றிருந்தது.

அவளுக்கு கவினை பிடிக்காதே பின்னே எப்படி கவினிடம் பேசுகிறாள்?

இவள் கவினை மணந்திருப்பது அவளுக்குத் தெரியுமா?

அதுவும் இவளுக்கு அவனை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என தெரிந்தால் என்ன சொல்வாள்? முட்டாளுக்கு ஏத்த முட்டாள்னா?

சே, பாட்டி வீட்டில் இருந்தவரை மிர்னா என்றால் இவளுக்கு பயம்தான்.

ஆனால் அம்மா வீட்டோடு வந்த பிறகு இந்த சிறிது காலம்தான் இவளுக்கு மிர்னாவை உண்மையில் தெரியும் என்று சொல்லுமளவிற்கு பழக்கம்.

இவள் மனம் நோக, ஏன் யார் மனம் நோகவும் மிர்னா பேசமாட்டாள். தப்பு செய்தால் மட்டும்தான் அவளுக்கு பிடிக்காது. இவளை சிரிக்க வைக்கத்தான் எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டிருப்பாள்.

திடீரென இப்பொழுது தோன்றுகிறது அவளிடமாவது இவள் ப்ரச்சனையை சொல்லி இருக்கலாமோ? ஏதாவது உதவி செய்திருப்பாளோ?

இவள்தான் முட்டாள்தனமாக எல்லோரையும் பார்த்து பயந்து போய் இருந்திருக்கிறாளோ?

உண்மையில் இவளிடம் மிர்னா அன்பாகத்தான் இருந்திருக்கிறாள். தன் ரகசியங்களை நம்பி பகிர்ந்திருக்கிறாள்.

அடுத்த பக்கம்