என்னைத் தந்தேன் வேரோடு 6 (4)

“என்னாச்சு மிர்னா? எதாவது வேணுமா?” அவள் பார்வை உணர்ந்து அவன் கேட்டான்.

“கடலோட இரச்சல் எரிச்சலாத்தான் இருக்கும், ஆனா அதால சத்தமில்லாம அலையடிக்க முடியாது, ஆன், ட்ரைன், பஸ் ஏன் ஏர்க்ராஃப்ட் இப்டி எல்லாமே சவுண்ட் ஃபர்ஸ்ட் ஒர்க் நெக்ஸ்ட் கேட்டகிரிதான்” அவள் சொல்லிக்கொண்டு போக

“பாடனும்னா பாடிக்கோங்க” என்றான் வியன் அவள் சொல்ல வருவதை புரிந்து.

பாடி கொல்றதுக்கு முன்னாடி இப்படி பேசி அறுக்க வேற செய்யனுமா அப்படின்னு சொல்லுதோ அவன் முழி?

ஆராய்தலாய் பார்த்துவிட்டு பாடத் தொடங்கினாள் மிர்னா.

தர்மம் உலகிலே டன் டன் டன் டன் டன்

இருக்கும் வரையிலே டன் டன்,

க்ர்க்,க்ர்ர்ர்க்,நட்,டம்ம்ம்ம்ம்ம்ம்

இடபுறம் உயர்ந்திருந்த மலை பகுதியிலிருந்து உருண்டு வந்து இவர்களுக்கு சற்று முன்னால் சாலையில் படு சத்தத்துடன் விழுந்து வலபுறமிருந்த மலைச் சரிவை நோக்கி ஓடியது ஒரு பெரும் பாறை.

ஒரு நொடி நடப்பது புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்ற மிர்னாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. பாட்டை கேட்டு மலையே மிரண்டுட்டே!

மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான் அவன்.

“என் பாட்டு ரொம்பவும் சுமார்தான்னு எனக்கும் தெரியும், சிரிச்சுகோங்க, தப்பா நினைக்க மாட்டேன்” விட்டுக் கொடுத்தாள்.

வாய்விட்டு சிரித்தான் வியன்.

“ஆன், சிரிச்சு முடிச்சுட்டீங்களா, இப்போ நீங்க பாடனும்” இவள் கட்டளை சொல்ல,

“இந்த டெர்ம்ஸை நீங்க முன்னமே சொல்லலியே” அவன் கேட்க,

“அதெல்லாம் அப்படித்தான், நான் பாடுனா மலையே நடுங்குது, இப்போ நீங்க பாடுனா என்ன நடக்குன்னு பார்க்கனும்” அவள் பிடிவாதம் செய்ய,

“அது” அவன் மறுப்பாக எதோ தொடங்கியவன்,

“ப்ளீஸ் வியன்” என்ற அவளின் இரு வார்த்தைகளில் சம்மதித்தான்.

“எனக்கு மூவி சாங்ஸ் எதுவும் தெரியாது பிரவாயில்லையா?”

“எனக்கும் தான் தெரியாது, முதல் ரெண்டு வரிக்கு அப்புறம் நாங்களே சொந்தமா பாடிக்கிறதுதான்” வெகு கேஷுவலாக அவள் சொல்லிக் கொள்ள

சிரித்தபடியே கேட்டான் வியன் “ஏன் மிர்னா உங்களுக்கு மியூசிக் மேல இப்படி ஒரு இன்ட்ரெஸ்ட்?”

அவளுக்குமே சிரிப்பை அடக்குவது கஷ்டமாகத்தான் இருந்தது.

“அது ரொம்ப ப்ரஷரா ஃபீல் பண்ணேண்ணா இப்படி பாடிப்பேன், ச்சும்மா,  சின்ன வயசில நிறைய நேரம் வீட்ல பேச கூட யாரும் இல்லாம ரொம்ப அமைதியா இருக்கிற மாதிரி இருக்கும், அப்ப வந்த பழக்கம். ஒரு டைவர்ஷனுக்காகத்தான்”

உண்மையில் வியனுக்கு இரக்கப் படத்தான் தோணியது. ஆனால் அவளோ கவலையின் சாயல் கூட எதுவுமின்றி சிரிக்க சிரிக்கத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவன் பாடத் தொடங்கினான்.

You are my Strength when I am weak,

You are the Treasure that I seek;

You are my All in All;

அவன் பாடி முடிக்கும்போது பெண் மனதில் அமைதியின் பொன்நதி. அவன் குரலில் கரைந்திருந்தாள் பெண்.

“வாவ், வாவ், வாவ், உங்களுக்கு ஏன் காது வலிச்சுதுன்னு இப்போ புரியுது பைதிவே, இனி எனக்கு ப்ரஷரானா உங்களையே பாட சொல்லிடுறேன்”

“ஏங்க உங்க ஃபேன்ஸெல்லாம் இத்தனைக்கும் காரணம் இவன்தான்னு என்னை அடிக்கவா?”

உங்க சமூக சேவையை நீங்க தொடருங்கங்க”

பேசியபடியே மெயின் ரோட்டை அடைந்திருந்தனர் இருவரும். அங்கு நின்றிருந்தார் அவர்கள் வந்த டாக்ஸி டிரைவர் தன் டாக்ஸியோடு.

“அடிச்சு நொருக்கிருவாங்களோன்னு பயமா இருந்துது சார் அதான் இங்க வந்தேன், சவாரி எதாவது கிடைக்குமான்னு காத்துகிட்டு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க” என்று வரவேற்ற டாக்ஸி டிரைவரிடம்

“மதுரை ஏர்போர்ட் போகனும் என்றான் வியன்”

ஃப்ளைட் டிக்கெட் செலவு அதிகமாகுமே என எண்ணியது மிர்னாவின் மனம்.

முடிஞ்சவரை செலவை குறைக்கனும், இப்ப இருக்கிற பணத்தை வைத்து சமாளிக்கனுமே, ஆனால் இப்ப ஃப்ளைட் வேண்டாம்னு வியன்ட்ட சொல்ல முடியாதே,

இவள் யோசனை இப்படியாய் இருக்க, அடுத்த நிமிடம் என்ன என்ற தவிப்பில் பிரிவு வலிகூட பின் சீட்டிற்கு போக,

வியன் தனக்காக வாங்கி இருந்த புது மொபைலில் யாரிடமோ காதை கொடுத்திருந்தான்.

அடுத்த பக்கம்