என்னைத் தந்தேன் வேரோடு 6 (3)

“உன் கால் அழகாதான் இருக்குது, அதை நீ பார்க்கிற விதம்தான் ரொம்ப அசிங்கமா இருக்குது”

குறை சொல்லும் குத்தல் தொனி இல்லாமல் வெகு இயல்பாய் அவன் சொல்ல திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“நூறு வருஷம் முன்னால, அயர்லாந்துல இருந்து கடவுள் நம்பிக்கையை மட்டும் கைல வச்சுகிட்டு இங்க, இதே திருநெல்வேலிக்கு வந்த ஆமி கார்மைக்கேல் அம்மா, தேவதாசியா நேர்ந்துவிடபட்ட எத்தனை பெண்குழந்தைகள காப்பாத்தி இருக்காங்க தெரியுமா?

அந்த முறையை தடுக்க எத்தனை செய்து இருக்காங்க தெரியுமா?

இத்தனைக்கும் அவங்களோட கடைசி இருபது வருஷம் அவங்களுக்கு இரண்டு காலும் வேலை செய்யாது.

அவங்க ஆரம்பிச்ச ஹாஸ்பிட்டல், கேர்ள்ஸ் ஸ்கூல், ஹோம், இப்படி எத்தனையோ? அதெல்லாம்  எத்தனை தலை முறைக்கு ப்ரயோஜனமா இருக்குது, இத்தனைக்கும் அந்த காலத்தைவிட இப்போ எத்தனை வசதி,வாய்ப்பு?”

சரி அதவிடு, நீ அவ்ளவு பெருசால்லாம் எதையும் யோசிக்க வேண்டாம், உன் அளவில திருப்தியா இருக்கலாமே,

காற்றை கவனிக்கிறவன் விதைக்க மாட்டான், மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டான்னு ஒரு வசனம் உண்டு, நாம எதை மனசால பார்கிறோமோ அதுதான் நமக்கு  பெருசா தெரியும்”

அவன் நிதானமாய் பேசினாலும் வார்த்தையில் இருந்த ஒரு அழுத்தம் அவன் முகத்திலும் சற்றே படர்ந்திருந்தது.

ஆனால் இப்பொழுது அவன் பார்வை மாறியது. முகமும் அதன் உணர்வும் கூடத்தான்!

“எனிவே நான் உன் காலை மட்டுமாக பார்க்கலை மொத்த குல்ஸையும்” என்றவன் குரல் அவள் உணர்வை கிளறியது என்றால், மேலிருந்து கீழாக அவளை வருடிய அவன் பார்வை பெண்மைக்குள் ப்ரளயம் செய்தது.

அவன் பார்வை தாளாமல் அவள் கண்கள் மூட, அவன் இன்னுமாய் நெருங்கி வருவதை உணர்ந்த இதயம் தாம் தூம்.

“ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொன்னதை நம்பி முதல் தடவையா பக்கத்துல வந்திருக்க, அந்த நம்பிக்கையை காப்பாதிக்கனும்” அவன் மெல்லமாய் சொல்லிக் கொள்ள,

“அப்படில்லாம் இல்ல” என்று மறுக்க நினைத்தவளுக்கு அதன் முழு பொருள் உறைக்க மௌனமானாள்.

இவளே ஏற்று வரும் போது இவன் ஏன் விலக்கி நிறுத்துகிறான்?

“ஆனால் அதுக்காக குல்ஸுக்கு ஒன்னும் தராமலும் அனுப்ப முடியாது” .என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். அவ்விடம் தொடங்கி உடலெங்கும் சிலிர் வளையங்கள் சலனம் செய்தன பெண்ணுள்.

“நான் இன்னும் கொஞ்சம் தூங்கனும், நீயும் ரெஸ்ட் எடுக்கனும்னா எடுத்துக்கோ” என்றுவிட்டு எதிர் திசையில் திரும்பி படுத்தான் அவன்.

இரவெல்லாம் தூங்காதவனுக்கு தூக்கம் வந்தது. அருகில் இருந்த அவளுக்குள் பல கேள்விகள் அலை செய்தது.

வியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவன் முகத்தில் வேதனையின் சுவடு கூட எதுவும் இல்லை.

“டாக்ஸி டிரைவர் பயந்துபோய் கிளம்பிட்டார் போல, இப்ப வேற டாக்ஸி புக் பண்ணாலும் இங்க வர யோசிப்பாங்க, கொஞ்ச தூரம் நடந்தோம்னா மெயின் ரோடு போய்டலாம், அங்க டாக்ஸி வர சொல்லலாம்” அவன் சொல்ல,

”சாரி, என்னால உங்களுக்கு” என தவிப்பாய் இவள்.

அவள் ஆரம்பிக்கவுமே மறுத்தான் அவன்.

“இப்படி சாரி சொல்லனும்னா, நானும் சொல்லலாம், நான் தான இங்க கூட்டிட்டு வந்தேன்”

மென் வெயிலில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

என்ன எம்.எம்.எடுத்த உடனே டங்கு டிங்காம், உள்ளதெல்லாம் போங்காம்னு ஒரே போங்காட்டமா போய்ட்டு,

நாம ஃபைவ் இயர் ப்ளான்லாம் பக்காவபோட்டு அட்டாக் செய்யலாம்னு பார்த்தா இந்த அட்டாக் பாண்டீஸ்லாம் ஆப்ப்பு, இல்ல ஆல்ப்ஸ்ஸு மலையவே எடுத்து அடிச்சு, இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜையும் டேமேஜ் செய்துட்டாங்களே,

சும்மாவே மாமியார்ஸ்லாம் மருமகள்ஸ்ட்ட கடுபஸ் கல்பனாவாத்தான் இருப்பாங்க, உன் வகையில ஒன்னுக்கு இரண்டு மகன்ஸ் மானத்தை ஷிப் இல்ல, இல்ல, சேட்டிலைட்டே ஏத்தியாச்சு, இதுல என்ன செஞ்சு எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க?

மைன்ட் வாய்ஸ் மைக் பிடிக்க,

மனதிற்குள் அழுத்தம்.

மிக எதிரான நினைவுகளை அவள் வழக்கமாக  பாட்டுப் பாடிதான் சமாளிப்பது.

நான் ஆணையிட்டால் டடடட்டடண்டடன்டடன் ஞாபகம் வர அதோடு சேர்ந்து, வியன் காது வலிக்குதுங்க என்று சொன்னதும் மனகண்ணில் தெரிய,

இப்ப பாடுனா பயபுள்ள தாங்குவானான்னு திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.

அடுத்த பக்கம்