என்னைத் தந்தேன் வேரோடு 6(2)

“அ… அது வந்து,  நீ… நீங்க ப… பயந்தோ, கோபத்துலயோ என்னை கல்யாணம் பண்ணலன்னு புரிஞ்சிது”

“ம், தென்?” அவன் கேட்ட விதத்தின் மென்மை அவன் கேள்வியை விட அதிகமாக அவளை பந்தாடியது நிஜம்.

எதோ பெரிய காரியத்திற்கு ஆயத்தமாவது போல், இப்பொழுது அவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.

“எப்படி யோசிச்சு பார்த்தாலும், எந்த காரணத்துக்காகவோ, நானும் சம்மதிச்சுதான் கல்யாணம் நடந்திருக்குது, நடந்து முடிஞ்ச கல்யாணத்தை மதிக்கணும்னுதான் கடவுள் எதிர் பார்ப்பார், அதனால” அதற்கு மேல் சொல்ல வந்ததை சொல்ல விடாது தடுத்தன ஏராளமான உணர்ச்சி கலவை.

“அதனால?” அவன் எடுத்துக் கொடுத்தான்.

இவள் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனாலும் விடுகிறானா பார்?

“அதனால,  அ… அதனால ஐ அ… அக்ரி வித் திஸ் மேரஜ்”

அவனிடமிருந்து எந்த பதிலும் வராது போக, சில நொடிகள் செலவுக்கு பின் சற்று சமனபட்ட இதய துடிப்புடன் அவள் நிமிர்ந்து பார்க்க, அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அப்பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை எனினும் அவள் எதிர்பார்த்தது போல் தன் நோக்கம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

“கல்யாணத்தை ஏத்துகிற ஓகே, சந்தோஷம், ஆனால் உன் மனசுல இன்னும் எதோ இருக்குதே?” துருவும் தொனி இன்றிதான் கேட்டான்.

“… “

“இவ்ளவு நேரம் மனசுவிட்டு பேசுன மாதிரி அதையும் பேசிடு குல்ஸ்” அவன் இன்னுமே உந்த,

“அக்கா மாதிரியோ, உங்கள மாதிரியோ, நான் அழகு கிடையாது.

அதோட நீங்க மிர்னாவ கல்யாணம் செய்ய இருந்தவங்க, உணர்ச்சி வேகத்துல என்னை கல்யாணம் செய்துகிட்ட உங்களால, என்கூட எப்படி சந்தோஷமா இருக்க முடியும்னு எனக்கு தெரியலை.

அதோட நான் நினச்சத விட நீங்க ரொம்பவும் ஷார்ப், எனக்கு ரொம்ப இன்செக்யூர்டா இருக்குது, யாராவது ஏமாந்தவங்க கிடச்சாதான் உனக்கு கல்யாணம்னு வீட்ல சொல்லிகிட்டே இருப்பாங்க,

உங்கள மாதிரி ஷார்ப் பெர்சன்க்கு நான் எப்படி சரியா வருவேன்னு தெரியலை, அதோட ஒரு நாள் எ… என்னை எதுக்காகவாவது பிரிஞ்சிட்டீங்கன்னா, எப்படி தாங்கன்னு தெரியலை” இருந்த பயம் அனைத்தையும் வெளிப்படையாகவே சொல்லி வைத்தாள் இவள்.

லூசு அறிவிருக்கா? அப்படில்லாம் ஒன்னும் நடக்காது அப்படி இப்படின்னு அவன் உணர்ச்சி வசப்படவில்லை. மாறாக,

“ம், ஒரு நாள் என்னை கவனிச்சதுல உன்னால என்னை இவ்ளவு புரிஞ்சிக்க முடியுதுங்கிறப்ப, இன்னும் வர்ற காலம் உன் மனசுல உள்ள எல்லா குழப்பத்துக்கும் தீர்வு கொண்டு வரும்னு நம்புறேன்,

எனக்கு ஐ லவ் யூன்னு சொல்லிக்கிறது காதல வெளிப்படுத்துற விதமா படலை, ஆக்க்ஷன் ஸ்பீக்ஸ் லவ்டர் தன் வேர்ட்ஸ், சீக்கிரமா என்னை புரிஞ்சிப்ப” என்றான்.

அவனது அந்த பதில் அவளே எதிர்பாராத வகையில் அவளுக்கு ஏதோ ஒருவகையில் திருப்தியாக இருந்தது.

அதே நேரம் “ஆனா இந்த அழகு விஷயம்” என்றபடி பார்வையை அவள் முகத்தில் நிறுத்தினான் அவன். அவனின் பார்வை வேறுபாடு வேரிக்கு புரியாமல் இல்லை.

கணவன் வகைப் பார்வை அது.

எதற்கும் தயார், இதற்கும்தான் என்றபடி இருதயத்தை தேற்றிக் கொண்டு வந்தவள்தான், ஆனால் இப்பொழுது, மனம் பந்தய குதிரையை விஞ்சியது.

அவன்தான் கணவன் என்று மனம் ஏற்றுவிட்டதால் நிச்சயமாக வெறுப்பு  இல்லை.

உணர்ந்த அவன் மென் அன்பும், அதோடு சார்ந்த உரிமையான அவன் கோபங்களும் மனதில் மல்லிகை வாசம், மங்கல மத்தளம் செய்கின்றனதான்.

ஆனால் அந்த விஷயம்?? அது தெரிய வரும்போது?? அதோடு பெண்மைக்கே உரிய பயம். அதகளம்.

அவனோ தன் வலக்கை ஆட்காட்டி விரலால் அவள் புருவங்கள் மீது பயணித்தான்.

“ரெண்டு அழகான புருவம், அதுக்குமேல ரோஜா மொட்டு மாதிரி ஒரு நெத்தி” இப்பொழுது அவன் விரல் அவள் நெத்தியை இட வலமாக அளந்தது.

“செய்து வச்ச மாதிரி இந்த சின்ன மூக்கு, அதுக்கு கீழ இருக்கிற இந்த ஆரஞ்” சொல்லியவனின் விரல் வாத்தைகளை பின்பற்றி அவள் இதழ் மீது பயணிக்க, கண்களை மூடிக் கொண்டாள் பெண்.

இதெல்லாம் தினம் கண்ணாடில பார்த்துக்கிட்டுதான இருக்க, அப்புறம் அழகில்லன்னு உன்னால எப்படி நம்ப முடியுது?” அவனோ கேட்டுக் கொண்டிருந்தான்.

“அது வந்து, என் கால்” அவள் பார்வை இயல்பாய் குனிந்து கொண்டன காலை நோக்கி. கண்களில் நீரேற்றம்.

அடுத்த பக்கம்