என்னைத் தந்தேன் வேரோடு 6

தற்கு மேலும் கண்மூடி இருப்பது சரியில்லை என தோன்ற கண்திறந்த  கவின் தானும் தன் மனைவியை நோக்கி திரும்பிப் படுத்தான்.

அவள் இன்னும் கண்களை மூடி இருந்தாள். தூங்கும் போது இயல்பாக மூடி இருப்பதற்கும் விழித்திரூக்கும்போது நாமாக மூடி கொள்வதற்க்கும் வித்யாசங்கள் உண்டு. மூடிய அவள் இமைகள் துடித்துக்கொண்டிருந்தன.

மூடிய இமைகள் அவளுக்குள் இருக்கும் அமைதியையும், துடிக்கும் இமைகள் அதோடு சேர்ந்து இருக்கும் தவிப்பையும் உணர்த்தியது கவினுக்கு.

ஆனால் இந்த உணர்வுகளை வெளியரங்கமாக காண்பிக்காதபடி முகமெங்கும் படர்ந்திருந்தது ஒரு இளம் பயம்?? அதற்குள் ஒளிந்திருந்தது வெட்க மென் சிவப்பு.

திருமணத்தின் மீது கவினுக்கு எப்போதும் நல் எண்ணம் உண்டு. காரணம் அவன் பெற்றோர்.

திருமணம் ஒரு வெறுமை இன்மை, சலனமின்மை, தாகமின்மை, அமைதி, நிர்மலம், நிறைவு, பரிபூரணம். இப்படியாக அவனுக்கு  அதன் அடி குணங்கள் மீது ஒரு புரிதல் உண்டு.

ஆனாலும் அனுபவமாய் அதை உணரும் போது அதன் வல்லமை வரையறைக்கு உட்படாதது என்பது புரிகிறது.

அவள் பேச விரும்புவதை பேச தூண்டும் விதமாக

“என்னடா?” என்றான்.

அத்தனை வித உணர்வுகள் தோன்றி இன்னும் வண்ணமயமானது அவள் முகம்.

ஆனாலும் வாய் திறக்கவில்லை பெண்.

“என்ன சொல்லனும்?”

“அது… வந்து”

“ம்?”

“நான் காலைல ப்ரேயர் பண்ணிட்டு இருந்தேன்”

“ம்?”

“அப்போ சிலவிஷயம்லாம் ஞாபகம் வந்துச்சு”

“என்னை பத்தி கடவுள்ட்ட கம்ப்ளயின் பண்ணிணியா?” சிறு சிரிப்புடன் அவன் கேட்க

“ம்ம்” ஆமோதித்த அவள் இறங்கிய குரலும் பரிதாபமான முகபாவமும், தன் வீட்டின் முதல் குழந்தை யார் என்பதை கவினுக்கு அடையாளம் காட்டியது.

“சாரி”

“இது எதுக்கு?”

“அது வந்து, நீங்க ரூமை மேல இருந்து கீழ மாத்திட்டீங்க, மதுரைல இருந்து வர்றப்பவும், கார்ல பின்னால, நாம… நான் வெட்டிங்கப்ப ரொம்ப நின்னுட்டேன்னுதான்… நான் படுக்கனும்னு நீங்க… அதோட இங்க ஃபக்டரிலயும், அந்த கம்பி ஏணி மேல நான் ஏற முடியாதுன்னு நீங்க சொன்னீங்க” திக்கி திக்கி வார்த்தை தேடி அவள் சொல்லி முடிக்க,

அவனிடம் இன்னும் சொல்லு என்பது போன்ற ஒரு மௌனம்.

“அப்படின்னா உங்களுக்கு, என் கால் விஷயம்… என் கால்… நான் ஹ… ஹேண்டிகப்டுனு தெரிஞ்சிருக்குது,

அம்மா டெலிவரி அப்ப முதல் குழந்தை பிறந்ததும் ரொம்ப டயர்டாகி, அதனால நான் பிறக்க ரொம்ப லேட்டாகிட்டாம், அதுல என் ஒரு கால் அஃபெக்ட் ஆயிட்டு,

அதுக்கான ஷூ இல்லாம என்னால ப்ராப்பரா நிக்கவோ நடக்கவோ முடியாது, என் கால் விஷயம் உங்களுக்கு தெரிஞ்சி இருக்குது”

வெகு வேதனையும் சுயபட்சாதபமும் கூடவே ஒரு இதமான ஆறுதலின் எதிர்பார்ப்புமாய் அவள் சொல்லி முடிக்க,

“ம், அப்புறம் வேற என்னலாம் கண்டுபிடிச்சிதாம் எங்க குட்டி பாப்பா?” என விசாரித்தான் அவள் கணவன்.

அவள் எதிர்பார்த்த இரக்க தொனி கவினின் குரலில் சுத்தமாக இல்லாது போக அவசரமாக கண் திறந்து பார்த்தாள் அவள்.

“அப்புறம்?” அவள் கண்களில் தன் பார்வையை கலந்தவன் கேட்க,

பார்வை தாழ்த்தியது பெண்மை. காரணம் தொட்டு தாக்கிய  மாலையிட்டவனின் காதல் பார்வை.

சில நொடிகள் மௌனம்.

அவன் எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லை எனும்போது அடுத்து என்ன என்பதாய் அவன் முகத்தை பார்த்தாள் இவள்.

அவன் புருவம் உயர்த்தி வார்த்தையின்றி கேட்டான் “அப்புறம்?”

மீண்டும் தாழ்ந்தது அவள் பார்வை.

அடுத்த பக்கம்