என்னைத் தந்தேன் வேரோடு 5 (8)

ன்று இரவும் தரை தள அறையில் இரவு விளக்கு வெளிச்சத்தில் அவள் விறைப்பாய் அமர்ந்திருக்க,

அருகிலிருந்த படுக்கையில் படுத்திருந்த கவினுக்கு பலநாள் தொடர் வேலை காரணமாக களைப்பும் தூக்கமும் கண் அயர்த்தினாலும் மனம் எங்கும் இளக்கம் தவிப்பு, அவளுக்காக

குட்டிமா கொஞ்சமாவது புரிஞ்சிக்கோயேன், நான் பக்கத்தில இருக்கிறதுல அப்படி என்ன இடஞ்சல் உனக்கு, உன்னை இப்படி படுத்தவா கல்யாணம் செய்தேன்?

மனதிற்குள் மன்றாடியவனை தூக்கம் கொள்ளை கொண்டது.

திடும் என மீண்டுமாக விழிப்பு வந்தபோது மனைவிக்கான தவிப்பு அப்படியே இருந்தது அவனுள்.

அவசரமாக அவளை தலை உயர்த்தி தேடினான். அவள் அமர்ந்திருந்த இடம் வெறுமையாய் இருந்தது.

அவசரமாக எழுந்தவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

எங்கு போயிருப்பாள்? எதோ தோன்ற அவசரமாக மாடியிலிருந்த அவனது அறைக்கு சென்றான். அவன் நினைத்தது சரி தான். அறை உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

அவனை அறியாமல் சிறு புன்னகை இதழில். வாலுள்ள வளர்ந்த குழந்தை !!!

மெல்ல திரும்பி நடந்தவனுக்கு ஜன்னலில் ஆடிய திரைசீலையின் சிறிய இடைவெளியில் அவ்வறை கட்டில் தெரிய அங்கு அவள் இல்லை,

எங்கே இவள்? என்ன செய்கிறாள்? அவசரமாக சாவி துவாரத்தின் வழியாக பார்த்தான்.

அறையின் அட்டாச்ட் பாத்ரூமிற்கு முன்னால் தரையில் அவள்.

பகீரென்றது அவனுக்கு. விழுந்து கிடக்கிறாளா?

கூர்ந்து பார்த்தால் அவள் அவளுடைய ஒரு புடவையை விரித்து அதோடு சுருண்டு படுத்திருப்பது புரிந்தது.

என்னதிது??

இவனுடையது எதையும் பயன்படுத்தக்கூடாது என நினைக்கிறாளா?

இல்லையே அவள் அணிந்திருக்கும் உடை முதல் எல்லாம் இவன் வாங்கியது அல்லவா? பின் இது என்ன? ஏன்?

ஆனாலும் தூங்கும் அவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் போக, மீண்டுமாக தன் அறையில் வந்து படுத்தவனுக்குதான் தூக்கம் இல்லை.

காலை ஒரு ஐந்தரை மணி அளவில் மென்மையாக கதவை திறந்து கொண்டு வந்த வேரி  கண்மூடி இருந்த இவன் முகத்தை ஒரு நிமிடத்திற்கு  மேலாக நின்று பார்த்தாள்.

பின் அருகிலிருந்த ஸோஃபாவில் சென்று அமர்ந்தாள். ஆனால் அவள் விழி முழுவதும் இவன் மீதே,

பின்  இவனே எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தாள்.

எழுந்து வந்து படுக்கையில் இவன் அருகில் வந்து படுத்தாள். கண்மூடிக் கொண்டாள்.

ஜிவ்வென்று இருந்தது கவினுக்கு.

ஈர கூந்தலின் மணமும் அப்பொழுதுதான் குளித்திருக்கிறாள் என்பதற்கான அடையாளமாக அவள் மீதிருந்து வீசிய அந்த குளியல் சோப்பு வாசமும் கணவனை கட்டியவளை இழுத்து தன்னோடு அணை என்றது.

கஷ்டபட்டு தன்னை அடக்கிக் கொண்டவன் அவள் அருகாமையை ரசித்தான்.

மெல்ல அவன் புறமாக திரும்பிப் படுத்தாள் வேரி.

தொடரும்…

sorry மக்களே இனி தினமுமாய் தொடரும் என்னைத் தந்தேன் வேரோடு.

Leave a Reply