என்னைத் தந்தேன் வேரோடு 5 (7)

வேரிக்குமே இந்த அப்ரோச் பிடித்தது. தப்புக்கு தண்டனை.

அதே நேரம் கஷ்டத்திற்கு உதவி, அதுவும் ஓசியாக கொடுக்காமல் கடனாக.

அப்பொழுதுதான் பொறுப்பு இருக்கும் வாங்கியவருக்கு.

கடைசியாக அந்த கிஃப்ட், அது இவளை நான் கவினின் மனைவி என சொல்ல வைத்ததற்காகவா?.

இவன் நிஜமாவே புத்திசாலியா? முட்டாளா? இவளை உண்மையாகவே விரும்புகிறானா?

அந்த இட்டலி நிறுவன ஃபைல் ஞாபகம் வந்தது. மனம் மீண்டும் முருங்கை மரம்.

இவள் முகம் பார்த்தவனுக்கு என்ன புரிந்ததோ?

“இன்னும் ஒரு மீட்டிங், அதுக்கு நீயும் வா, அது முடிஞ்சதும் கிளம்பிடலாம்” என்றுவிட்டு அவன் முன் இருந்த சில ஃபைல்களை குடைந்துவிட்டு, அந்த மீட்டிங் ஹாலுக்கு கூட்டிச்சென்றான்.

முதலில் சற்றும் இயல்பாய் பொருந்த முடியவில்லை வேரியால் எனினும், வரவர சுவாரஸ்யமாகவே இருந்தது அந்த கலந்தாய்வு,

அந்த இட்டலி நிறுவனம் பற்றியும் பேச்சு வந்தது.

ஆர்டர்களை காரணத்தோடு இரு மாதம் கழித்துதான் உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கின்றனர் இவர்கள். ஏனெனில்,ஃபெப்ரவரிக்கு முன் டெலிவரி செய்ய கூடாது என்ற மறைமுக காரணம்.

ஃபெப்ரவரி மார்ச் மிக குறைந்த மார்ஜினில் கொடுத்து இருந்தனர்.

ஏப்ரல் முதல் புது வரி, புது விலை.

அப்பொழுதுதான் அது அவளுக்கு புரிந்தது.

அக்டோபர் நவம்பரிலேயே கொடுத்து இருந்தால் மார்ச் வரை அவர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டி இருந்திருக்கும், ஆக குறைந்த விலையில் விற்கும் பொருளின் குவான்டிடி குறைவாக இருக்க கால தாமதம்.

குறைந்த விலை என இவர்கள் டெண்டரை ஏற்றுக்கொண்டிருந்த அந்த இட்டலி நிறுவனம் மார்ச்சுக்கு பின் மற்ற நிறுவன அளவே இவர்களது விலையும் உயர்ந்தாலும்,

ஏற்கனவே சப்ளை செய்யும் நிறுவனம், பொருளின் தரத்திலும் எந்த குறையும் இல்லை என்று இவர்களிடமே தொடர்ந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது,

அதன் மொத்த லாபம் மிகவும் திருப்தி அளிக்கும் அளவு.

வீட்டுக்கு திரும்பும் வழியில் கேட்டாள்

“ஒரு வகையில் இது ஏமாத்து வேலை இல்லையா?”

சன்னமாய் புன்னகைத்தான்.

“அவங்க கூட முதல்ல அக்ரிமெண்ட் போட்டப்பவே டெலிவரி டைம் எங்க வசதிப்படின்னு தான் டெர்ம்ஸ் ஃபிக்ஸ் பண்ணி இருந்தேன். அவங்களும் அதுக்கு அக்ஸப்ட் செய்திருந்தாங்க, அப்புறம் இது எப்படி சீட்டிங் ஆகும்?

அதோட அவங்களுக்கும் இதுல லாபம் இல்லாமலா டீலை கன்டின்யூ செய்றாங்க? மத்தவங்கட்ட போயிருந்தா இந்த விலையை அவங்க வாங்கின எல்லா கூட்ஃஸுக்கும் கொடுத்துருப்பாங்களே, நம்மட்ட முதல் 2 மன்ந்ஸ் அவங்களுக்கு ரொம்பவே லாபம் தானே”

“அப்ப ஃபர்ஸ்ட் டூ மந்த்ஸ் நாம ஏமாந்துட்டோம்னு அர்த்தமா?”  மீண்டும் அந்த முட்டாள் பதம் ஞாபகம் வந்தது. ஆனாலும் அது மிகவும் வலுவிழந்திருந்தது.

“அப்படி இல்ல, அது இந்த டீல் நமக்கு கிடைக்க நாம செய்த சின்ன ஃபேவர், அவ்வளவுதான், ஓவரால் இது நமக்கு நல்ல ப்ராஃபிட் டீல்தான்”

எதோ ஒன்று திருப்தியாய் இருந்தாலும், இன்னொரு புறம் எதோ எச்சரித்தது அவளுக்குள். இவன் பக்கா பிஸினஸ் மேன். கவனம் தேவை என்றது அந்த எதோ ஒன்று.

“இப்போ ஷாப்ஸ் க்ளோஸ் ஆகிற டைம், ஒரு 30 மினிட்ஸ் கிடைக்கும் ஷாப்பிங் செய்ய,போலாமா? இல்லனா நாளைக்கு ஈவ்னிங் வரலாமா?” அவனோ இப்படி விசாரித்துக் கொண்டிருந்தான்.

அவன் முகம் பார்த்த வேரி,

“நாளைக்கு” என முடித்துவிட்டாள்.

அவனுக்கு வேலை அதிகம் டயர்டா இருப்பவனை ஏன் தொந்தரவு செய்யனும்? நினைத்துக் கொண்டாள்.

வீட்டில் இருவருமாக இரவு உணவு உண்டனர். உணவு முடிய அறையை நோக்கி நடந்தாள்

“க்ரவுண்ட் ஃப்லோர்ல ரூம் அரேஞ்ச் செய்ய சொல்லி இருக்கேன், வா காட்றேன்“ கவின் சொல்ல இவளுக்கு ஆச்சர்யம் மற்றும் இதம் சுகம்

இன்ப பதம் எல்லாம்.

அவனோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். இவள் கொண்டு வந்திருந்த சிறு பேக் தவிர இன்னுமாய் எதேதோ, அறை விஸ்தாரமாய் மாடி அறை போலவே அதே அளவில்.

“என்னால முடிஞ்ச ஷாப்பிங் மார்னிங் செய்துருக்கேன், நாளைக்கு நீயும் என்கூட வா, உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கலாம்” அவன் இயல்பாய் சொல்ல,

“இந்த ரூம் தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” அவளுக்கு நன்றி உணர்வில் அழுகை கட்டிக்கொண்டு வந்தது.

“ஹேய்” என்றவன்,

“சாரிமா, உன்னை தனியாவிட என்னால முடியவே முடியாது, நைட் நானும் இங்க தான் இருப்பேன், மத்தபடி உனக்கு மாடி ஏற கஷ்டமா இருக்குதோன்னு தான் இங்க ரூம் அரேஞ்ச் செய்ய சொன்னேன்”  அவன் தன்பக்கத்தை தெரிவிக்க,

அவ்வளவுதான் காற்று போன பலூனாகியது அவள் முகம்.

“என்னை உயிரோட கொல்லதான் கல்யாணம் செய்தீங்களோ?” வெடித்தவள்,

விடுவிடுவென வெளிபுறம் நோக்கி நடந்தாள். அழுகையும் வெடிப்பும் இயலாமையும் போட்டி இட்டன அவளுள்.

அடுத்த பக்கம்