என்னைத் தந்தேன் வேரோடு 5 (2)

கொடைக்கானலில் வியனுக்கு  தெரிந்த ட்ராவல்ஸில் சொல்லி டாக்ஸி வரவழைத்து மதுரை நோக்கிப் பயணம்.

வழியில் இவளைக் காரிலேயே விட்டுவிட்டு அவளுக்காக சில உடைகள் வாங்கி வந்தான் அவன். மலையில் விழுந்து எழுந்ததில் இருவர் உடையும் காண சகிக்காத அளவு மண் நிறமும்  செடி கறையுமாய் இருந்ததே காரணம்.

“எங்க வீட்டில வந்து இதை மாத்திட்டு கிளம்பலாம்,  அவன் சொல்ல

“இல்ல வேண்டாம், உங்க வீட்டுக்கு கண்டிப்பா வேண்டாம்” ஆங்கிலத்தில் அவசர அவசரமாக மறுத்தாள் அவள் அம்மா அங்கு வந்து நின்றாள் என்னவாகும் என்ற நினைவுதான் காரணம். டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாதிருக்க வேண்டுமே,

“உங்க வீட்ல இருந்து வந்துடுவாங்கன்னு நினைக்கிறீங்களோ? அப்படியே அவங்க வந்தாலும் அவங்க கூட உங்கள அனுப்ப இங்க யாரும் தயாரா இல்ல, ஸ்பானிஷில் வந்தது பதில் வியனிடமிருந்து.

திரும்பி அவன் முகம் பார்த்தாள். ஆச்சர்யம். அடி வயிற்றில் இன்ப அமிலம். இவளுக்கு ஸ்பானிஷ் தெரியும் என அவன் அறிந்திருந்தது ஆச்சர்யம். அவள் தாயிடம் கூட அவளை தர மாட்டேன் என அவன் இவள் மீது எடுத்த  உரிமை இன்ப அமிலத்திற்கு காரணம்.

“உங்க மொபைல்ல ஸ்க்ரீன் சேவர் ஸ்பானிஷ்ல பார்த்தேன், மிதமான புன்னகை அவன் முகத்தில் பரவி இருந்தது.

“அது இல்ல வியன், அவங்க தப்பு தப்பா பேசுவாங்க, வேண்டாம், என்னால ஏற்கனவே உங்க வீட்ல பல குழப்பம்,

“பட் அ வெரி ஸ்வீட் கன்ப்யூஷன், எப்படியும் அண்ணி வர நீங்கதான ஒருவகையில காரணம்” இவளிடம் ஸ்பானிஷில் பேசியவன் டிரைவரிடம்

“ரைட்ல டர்ன் பண்ணுங்க” ஒரு கிளைச்சாலையை காண்பித்தான்.

“இங்க தான் எங்க நேட்டிவ், இப்படி ஒரு இடம் இருக்கிறதே நிறையபேருக்கு தெரியாது, எங்க வீட்ல எல்லாரும் வெளிய இருந்து வேலை பார்த்தாலும், பூர்வீகம்னா இதுதான்,

எங்களுக்கு இங்க ஒரு வீடு இருக்குது, வருஷம் ஒரு தடவை அம்மா அப்பா கூட வந்து தங்கிட்டு போவோம், வீட்ல இதுக்குன்னு ஆள் கிடையாது,

ஊர்காரங்களே யாராவது வந்து சுத்தம் செய்து வச்சிருப்பாங்க, அத்தனை பேரும் சொந்தகாரங்க, குடும்ப பாசம் ரொம்ப அதிகம் இங்க,

யார் வீட்ல பிரச்சனைனாலும் எல்லாரும் சேர்ந்தே தீர்த்து வைப்பாங்க, யாரும் ஊர் சட்டத்தை மீற மாட்டாங்க, மீறவும் முடியாது“ அவள் எதற்கும் வருந்த தேவையில்லை என்பது போல் விளக்கியவன்,

“இந்த ரைட்ல திரும்புங்க”  டிரைவரிடம் சொன்னவன் மீண்டுமாக இவளிடம் தொடர்ந்தான்.

“இங்க ஃப்ரெஷ் அப் செய்துட்டு, டிரஸ் மாத்திட்டு கிளம்பலாம், இந்த இடம் நிச்சயமா உங்க வீட்ல யாருக்கும் தெரியாது”

வீடு இதற்குள் இவள் பார்வைக்கு தெரிய ஆரம்பித்து இருந்தது. வீடா அது?  ப்ரமாண்டம்.

“இங்க தான் நிறுத்துங்க,”

டிரைவர் நிறுத்த கதவை திறந்து இறங்கினாள் மிர்னா.

எதிரில் வீடு படு கம்பீரமாக நின்றிருந்தது. அழகு.

முற்றம் தாண்டி உள்ளே சென்றவன் கதவின் மேல்புறத்தில் கைவைத்து தள்ள அது திறந்தது,

“பூட்டலையா?” இவள் ஆச்சர்யப்பட

“அதான் சொன்னேனே எல்லாரும் சொந்தம், அதோட ஊர் கட்டுபாடு,திருட்டே கிடையாது, ஆனா நான் இல்லாம நீங்க இந்த வீட்ல கால் வைக்க முடியாது, அந்நியர்களுக்கு தடை” சிரித்தபடி சொன்னவன்,

மென்மையாய் அவள் முகம் பார்க்க,

வார்த்தையற்ற அம் மென் வரவேற்பு அறிவை தாண்டி எதற்கோ புரிய, மெதுவாய் வாசல் தாண்டி நுழைந்தாள் அவள். மனதிற்குள் அவளை மீறிய இனம் புரியாத கிளர்வு.

அவளோடு இணையாக கால்வைத்து உள்ளே நுழைந்தான் அவன். இப்படி ஒரு வீட்டை அவள் கற்பனையில் கூட கண்டது கிடையாது.

வீடு பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையாய்,சொர்க்கம்.

இவ்வுணர்வு பரவசம் அவ் வீடாலா? அது அவனுடையது என்பதாலா?அவனோடு அவள் அங்கு என்பதாலா? அது அவள் இடம் என்ற உள்ளுணர்வாலா?

அடுத்த பக்கம்