என்னைத் தந்தேன் வேரோடு 4 (4)

பாறையில் இருந்து அவன் இறங்க, இவளுக்கு அவன் முன் உட்கார கூட முட்டிக் கொண்டு வர, எழுந்து நின்றாள்.

கைது செய்து காதலை கழுவிலேற்றாவிட்டால் இவள் கதை அழுகாச்சி காவியம்.

இரும்பையும் எறும்பையும் கூட கைது செய்து விடலாம் போலும் இடி மின்னலை எப்படி கைது செய்வதாம்? காதலை கைது செய்ய வழி எங்கிருக்கிறதாம்?

“தூங்க முடியலைனா உங்க ஒலிம்பிக் ட்ரீம் பத்தி சொல்லுங்களேன், இன்னும் நீங்க என்ன கேம் விளையாடுவீங்கன்னு கூட எனக்கு தெரியாது” அவன் ஆர்வமாக கேட்க

“ஹை ஜம்ப்”

ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல இவள் ஓலிம்பிக் கனவு மீண்டுமாய் பீனிக்ஸாகி எழுந்தது.

இவளை விட குறையாத ஆர்வத்துடன் அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இன்னும் ஒன் வீக்கில் டெல்லியில் ஒரு நேஷனல் மீட் இருக்குது. நிறைய நேஷனல் லெவல் காம்படிஷன்ல வின் செய்திருக்கேன். ஆனாலும் இது நான் இண்டியன் ஒலிம்பிக் டீமில் செலக்ட் ஆக ஸ்க்ரீனிங் மாதிரி. இதில ஃபர்ஸ்ட் 2 ப்லேஸ்ல வரனும்.

இந்த மேரேஜ் டிராமால லாஸ்ட் மூனு வாரமா ப்ரக்டீஸ் போக முடியலை. அதனால நாளை டெல்லிக்கு சென்னையிலிருந்து ஃப்ளைட் பிடிச்சிடனும்னு நினைச்சிருக்கேன்”

“நிஜமாவே இப்படியே கிளம்ப போறீங்களா மிர்னா?” சற்று வருதத்துடன் கேட்டான். எதுனாலும் உங்க வீட்டுக்கு போய்ட்டு போகலாமே”

“அவ்ளவுதான் அவங்க ப்ளான் எதுவும் பலிக்கலைனா ரூம்ல வச்சு பூட்டி வச்சுடுவாங்க, ஆனா கண்டிப்பா டில்லி போக விட மாட்டாங்க”

“அப்படித்தான் இப்போ இந்த கல்யாணதுக்காக வச்சிருந்தாங்களா?” குற்ற உணர்ச்சி அவனை கூறு போட கேட்டான் வியன்.

அவன் குடும்பத்தினர் அத்தனை பேரையும் அந்த நொடியில் மன்னித்தது பெண் மனது.

“கிட்டதட்ட அப்படித்தான், அதான் இதுக்கு மேல நான் என்ன செய்தாலும் எங்க வீட்டில் இருக்க முடியாதுன்னு தெரிஞ்சிட்டு. பாட்டி அவங்க கடைசி கிஃப்டா எனக்குன்னு ஒரு அமௌன்ட் குடுத்திருந்தாங்க, அதை பேங்கில் போட்டு வச்சிருக்கேன், எனக்கு தேவையான டாகுமெண்ட்ஸ் இப்போ என்ட்ட இருக்குது”

“பேக் எதுவுமே இல்லையே, கார்ல போய்ட்டா?” அவன் அதிர்ந்து போய் கேட்க,

“என் ஸேரியில் வச்சிருக்கேன், பத்திரமா இருக்குது” சற்று கூச்சமாக அவள் சொல்ல ஆச்சிரியத்தில் விழி விரித்தான்.

“ஸ்மார்ட்”

உற்சாகம் பீரிட்டது அவளுக்கு.

“எங்க வீட்டை பத்தி தப்பா நினைக்காதீங்க மிர்னா, எங்களுக்கு சம்மதம்னு உங்க பேரண்ட்ஸ் சொல்றப்ப அதுக்கு பின்னால இவ்ளவு நடந்திருக்கும்னு எங்களுக்கு தோண வாய்ப்பே இல்லயில்லையா?

பொண்ணு பார்கிறதுக்குனு ரொம்ப ஃபார்மலா வந்தா உங்களால இயல்பா பழக முடியாதுன்னு தான் கேஷுவலா என் பேரண்ட்ஸ் வந்தாங்க,

அவங்களுக்கு நீங்க பேசி பழகின விதம் பிடிச்சிட்டு, கவினுக்கு என் பேரண்ட்ஸ் சாய்ஸில் நம்பிக்கை,

அதே நேரம் ஜஸ்ட் த்ரீ வீக்ஸில் மேரஜ்,  ஏற்கனவே மேரேஜுக்கு முன்னால எங்க வீட்டில் பழக விட போறதும் கிடையாது, அது என் பேரண்ட்ஸ் நம்பிக்கை,

அதான் அவன் மேரேஜுக்கு அப்புறம் பழகிக்கிடலாம்னு இருந்துட்டான்.

அவன் ஃபாக்டரி ஒர்க் ஒன்னு ரொம்ப இம்பார்டன்ட் ஸ்டேஜில் இருக்குது, அதை தாண்டி அவன் எதையும் நினைக்கிறது ரொம்பவும் கஷ்டம்,

உங்க சிட்ஷுவேஷன் இப்படி இருந்திருக்கும்னு யாருக்கும் தெரியாது, எது எப்படியோ எங்களால நீங்க கஷ்டபட்டுடீங்க, வெரி சாரி” அவன் வெகுவாக உணர்ந்து மன்னிப்பு கேட்க,

“இட்ஸ் ஓகே, எங்க வீட்டில் பண்ணதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க” எளிதாய் சொல்லி வைத்தாள் இவள்.

ஹப்பப்பா, இருந்தாலும் இப்படி அந்தர் பல்டி அடிக்க கூடாது எம்.எம், பார்த்து கழுத்து சுளுக்கிட போகுது. கொஞ்சம் முன்னால மனசுக்குள்ள நீ கொம்பு சீவின அழகு என்ன? இப்ப பல்டி அடிக்கிற பாவம் என்ன?

பொழுது புலரும் வரை தொடர்ந்தது அவர்களது உரையாடல்.

அங்கே கவினுடன் கல்யாணம் கண்டவள் மனம் கதற மௌனமாய் அழுதிருக்க, இங்கே கடத்தப்பட்டவள் கண்ணியமாய், கனவாய், கனிவாய், கழித்தாள் இரவை.

அடுத்த பக்கம்