அருகில் வந்து அமர்ந்த வியனை கேள்வியாய் பார்த்தாள் மிர்னா.
“சின்ன ஆக்சிடெண்ட் இப்போ ஸேஃபா இருக்கோம்னு சொல்லிட்டேன் போதுமா?”
“உண்மையை உண்மையான்னு உண்மைக்கே சந்தேகம் வர்ற மாதிரி பேசுகின்ற உம்மை உண்மையாய் பாராட்டுகிறேன்”
மேடைப் பேச்சாளர் தொனியில் அவள் அதை அங்கீகரிப்பது போல் சந்தேகிக்க,
“எப்படிங்க இப்படி ஒரு குழந்தைக்கு உங்க வீட்ல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணாங்க?”
எம் எம்மின் சிக்செர் ஷாட்டை காட்ச் பிடித்தான் வியன்.
இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி முறைத்தாள் பெண்.
கிரேட் இன்ஸல்ட் கெக்கேபிக்கே, இதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் நிச்சயம் உண்டு, அவள் யோசிக்க,
“என்ன பனிஷ்மென்ட் கொடுக்கிறதுன்னு மேடம் முடிவு செய்தாச்சா?” இரு புருவங்களையும் உயர்த்தி அவன் கேட்டவிதத்தில்
‘மைன்ட் வாய்ஸ்தான கொடுத்தோம், மாத்தி மௌத் வாய்ஸ் கொட்டுத்துட்டமோ, ஏன் இவன்ட்ட இப்படி அடிக்கடி பல்ப் வாங்குறோம்னு மிர்னா மெரிஸ்லானாள்.
இருந்தாலும் மீசை இல்லாதவ நீ மிர்னு, நீ எல்லாம் மண்ணை பத்தி எதுக்கு கவலைப்படனும்? ன்னு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு,
“அதை எல்லாம் அவை கூடி முடிவு செய்றதுதான் எங்க பக்க வழக்கம், உரிய நேரத்தில் பனிஷ்மென்ட் நிறைவேற்ற படும்” என நீ கண்டு பிடிச்சுட்டா என்ன எப்படியும் போட்டு தாக்குவேன் நான் என்ற வகையில் இவள் பதில் சொல்ல,
வலக்கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டி அதை வரவேற்றான் வியன்.
“மிர்னாவுக்கே வயசு 21தான்னா எங்க அண்ணிக்கு என்ன வயசு?” என பேச்சை தொடரவும் செய்தான்.
அவனது எங்க அண்ணியில் ஒரு உரிமை பிடிப்பு அதிகமாக தெரிந்தது மிர்னாவுக்கு. மனம் கொஞ்சம் முனுக்கென்றது.
அவதான் சொந்தமா, நான் அந்நியமா? போடா கெக்கே பிகே!
“அவ என் ட்வின் சிஸ்டர், என்னை விட 27 நிமிஷம் பின்னால பிறந்தவ”
“தென் ஓகே, மேரேஜ் ஏஜ் தான்” அவன் எளிதாய் சமாதானமாகிவிட்டான்.
“என்ன ஓகே? 21 வயசு ஒரு கல்யாண வயசா? இப்படி…”
அவள் கோபமாக ஆரம்பிக்க,
“அவங்களுக்கு தான சொன்னேன் உங்களை சொல்லலையே?” என திருப்பினான் அவன்.
அதாவது வேரி வயதுக்கேத்த மெச்சுரிட்டியில் இருப்பாள், நீதான் இல்லையாக இருக்கும் என்கிறான்.
கையால் தன் மூக்கை பிடித்தேவிட்டாள் எம் எம். என்ன ஒரு நோஸ்கட்
இது பௌலிங்க் எரரா? இல்லனா ஃபீல்டிங் ப்ராப்ளமா?
“என்ன பார்க்க லூசு மாதிரி, ஐ மீன் கொஞ்சம் மென்டலி இம்பலன்ஸ்ங்கிற மாதிரி தெரியுதோ?” அவள் சீரியஸாக கேட்க,
“ஹேய், என்ன நீ? நீங்க செம போல்ட் அன்ட் ஜாலி டைப்னு நினச்சேன், இவ்ளவு சென்சிடிவா எடுத்தா எப்படி?”
அவன் வாக்கியத்தை முடிக்க விடவில்லை அவள்.
“நீங்க என்ன சொன்னாலும் தாறுமாறா டிஸ்டர்ப் ஆகுது, ஐ வாஸ் நெவர் திஸ் வே” அவள் புரியாது பார்க்க,
அவன் கண்களில் வந்த மின்னலின் பெயர் என்ன?
ஆனால் அடுத்த நொடி “கவின் அண்ணி கூட ஹப்பியா ஹனிமூன் கிளம்பிடுவான்” என பேச்சை மாற்றினான்.
அவளுக்கு எதோ மறைமுக செய்தி சொன்னது அவன் குரலும் அதன் தொனியும். அதை சரியாகவே புரிந்தவள்,
“அப்ப இது அம்மா கம்பல்ஷனுக்காக நடக்கலையா?” ஆச்சரியமாகிப் போக,
இல்லை எனும் விதமாக தலை அசைத்தான் வியன் மனோவசீகர புன்னகையுடன்.
“அப்போ??!!” நம்பவே முடியவில்லை மிர்னாவால்.
“அதான் தீர்கதரிசினி மிர்னா அம்மையார் அப்பவே சொன்னீங்களே, கண்டோம் காதல் கொண்டோம், கைதலம்“
அவனை முடிக்கவிடவில்லை அவள்.
“வாவ், சூப்பர், அவ்ளவு ஷார்ட் பீரியடில் லவ் பண்ண முடியுமா?”
ஆரவாரமாய் ஆரம்பித்தவள் மனதில் எதோ நறுக் என்றது. அது வலி என்பதை விட பய உணர்வோ இல்லை எதுவோ அதைப் போல்.
இமைகள் உயர்த்தி எதிரில் இருந்தவனைப் பார்த்தாள்.