என்னைத் தந்தேன் வேரோடு 3 (3)

ஆனால் மிர்னாவோ மிக சந்தோஷமாக தொடர்ந்தாள்.

“ஆமா எங்கம்மா மிரட்டலுக்கு பயந்து போய் உங்கண்ணா என் தங்கைய…”

அவளை முடிக்க விடவில்லை வியன்,

”ஷட் அப், கவினை அப்படில்லாம் யாரும் ப்ளாக்மெயில் செய்ய முடியாது”

கோபத்தில் அவன் முகம் சிவப்பது அவளுக்கு அந்த சிறு வெளிச்சத்திலும் தெரிந்தது.

ஆனால் அவள் முகம் வாடவில்லை. மாறாக குறும்பு கூடி வந்தது.

“ஒருவேளை இப்படி இருக்குமோ,  இவ்ளவு நேரத்துகுள்ள உங்க அண்ணா என் தங்கச்சிய லவ் பண்ணி கல்யாணம் செய்துருப்பாரோ?

இந்த ஆங்கிள் நினைச்சு பார்க்க ஜாலியாத்தான் இருக்குது. கண்டோம், காதல் கொண்டோம், கைதலம் பற்றினோம், அப்படிங்கிற மாதிரி!

எனக்கு வேரிய பத்தியும் ஒன்னும் தெரியாது,  உங்க அண்ணா பத்தியும் நிஜமாவே ஒன்னும் தெரியாது,  ஸோ எப்படி இந்த காதல் வந்திருக்கும்னு கற்பனைல காண முடியலை”

அவளிடம் சிறு வருத்தமோ ஏமாற்றமோ எதுவுமே இல்லை.

அதன் பின் அவளிடம் கோபப்பட வியனுக்குத் தெரியவில்லை.

அவளிடமிருந்து அந்த மொபைலை வாங்கி தன் அண்ணன் எண்ணை அழுத்த ஆரம்பித்தான் வியன்.

“ப்ளீஸ் இப்போ நாம இருக்கிற இடத்தை யார்ட்டயும் சொல்லாதீங்க, எங்க வீட்ல…” இவள் சொல்லிக்கொண்டு போக அவனோ,

“கவினால நமக்கு ஹெல்ப் வருமே தவிர கஷ்ட்டம் வராது” என முடித்தான்.

இவள் ஒரு பார்வை பார்த்தாள்.

இதே கவினால் எத்தனை நாள் என்னமாய் தவித்துவிட்டாள்.

அவள் பார்வை அந்த நிலவொளியில் எவ்வளவு தூரம் புரிந்ததோ? வியன்  வாக்கு கொடுத்தான்.

“சொல்லல போதுமா, கவினை நம்பாம இல்ல,  உன்ன அழ வைக்க வேண்டாமேன்னுதான்”

என்னடி எம்.எம் உன்ன அழுவினின்னுட்டான், நீ இன்னும் எகிறாம, போடி, நீ வர வர சரியில்ல!

அடுத்து அவன் கவினை அழைத்தான்.

முதல் ரிங்கிலேயே எடுத்தான் கவின்

“ஸேஃபா இருக்கிறீங்களாடா? எங்கே இருக்கீங்க,  என்ன ஆச்சு?” என அவன் தொடங்க மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்து போனான் வியன்.

தொடர்ந்தது உரையாடல் சில நிமிடம்,  சற்று தொலைவில் இருந்த மிர்னா மீதே தன் கண்களை நிறுத்தியபடி தன் அண்ணனுடன் பேசி முடித்தான் வியன்.

முடிவில் அவன் அகத்திலும் முகத்திலும் குடிவந்திருந்தது ஆனந்தம்.

“ஐ லவ் யூடா கவின், ஐ’ம் ரியல்லி ப்ரவ்ட் ஆஃப் யூ, டேக் கேர்,  நான் இந்த எம்ஹெச்ச  கவனிக்க போறேன், பை”

“……”

“அதுவா இங்க மேடம் டபுள் ஸ்ட்ராங், ,  என் பாஷையில எம்ஹெச்,  அதுக்கு மேல நீ மீனிங் கேட்க கூடாது”

“எதுவும் சொந்தமா உன்னோடதுன்னு ஆகுற வரைக்கும் ஆசைப் படாம இருக்கிறது நல்லதுடா” கவின் தொடர இன்னுமாய் சில நிமிடம் தொடர்ந்தது பேச்சு வார்த்தை.

“போடா, போய் அண்ணிய பார்க்க வழியப் பாரு, நாங்க பார்த்துபோம், பை” பேச்சை முடித்தான் வியன்.

மௌனமாய் அழுது கொண்டு இருந்தாள் வேரி. அவளால் முடிந்தது அதுதான். அர்ச்சனையாய் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் அவளது அம்மா மாலினி, என்னவோ தப்பெல்லாம் இவள் மீதுதான் என்பது போல்.

இவர்கள் அவனை முட்டாளாக்க பார்க்க அவன் இவர்களை முட்டாளடித்துவிட்டான்.

அர்ச்சனை அதன் நீள ஆழ அகலங்களைத் தொட்டுக்கொண்டிருக்க பார்வையாளராக பார்த்தபடி சும்மா நின்றார் அப்பா. அவர் வழக்கம் அதுதான்.

அடுத்து என்ன?

வேரிக்கு தன் பாட்டி மடி தேடியது.

சுய பட்சாபத்தில் அவளுக்குள்  இன்னுமாய் கண்களில் அருவி பெருக்கெடுத்தது.

அடுத்த பக்கம்