என்னைத் தந்தேன் வேரோடு 3 (2)

“அப்புறம் வேற என்ன காரணம்?” புன்னகையுடன் அவன் கேட்ட விதத்தில் வெளிப்பட்டது நட்பு.

மிர்னா வளர்ந்த சூழலில் காணக் கிடைக்காதவைகளில் ஒன்று உறவுக்குள் நட்பு.

இதயத்தில் முளைவிட்டு முகம் காட்டியது ஒரு சிறு தளிர் .

சிறு புன்னகையுடன் இருகைகளால் தன் முட்டுகளை வளைத்து கட்டிக் கொண்டு,

“எனக்கு அப்போ மேரேஜ் மேல நல்ல ஒப்பினியன் கிடையாது. ஐ டிண்ட் வான்ட் டு கெட் மேரிட்.

ஒலிம்பிக்ஸ்,  தென் கரியர்,  என்னால முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கும் கடவுளுக்கும் பிரயோஜனமான ஒரு சர்விஸ்னு லைஃபை அழகா, மீ னிங்க் ஃபுல்லா வாழ்ந்து முடிக்கனும்னு ஒரு ப்ளான்”

தூரத்தில் தெரிந்த நட்சத்திரத்தைப் பார்த்தபடி இவள் பேச,

“அப்டின்னா இப்போ,?” அவன் கேள்வியில் அவன் முகம் நோக்கித் திரும்பினாள்.

அவன் புருவம் சுருக்கி ஆச்சர்யமும் அதோடு ஆவலும் கலந்த புன்னகையுமாய் கேட்க

“அது உங்கள பார்த்ததும் மாறிட்டு“

தன் வார்த்தைகளை தன் காதால் கேட்டபின்புதான் அதன் அபத்தம் புரிய அவசரமாக அதை சரி செய்ய நினைத்தவளின் வார்த்தை வாயைத் தொடும் முன் அவன்,

“தேங்க்ஸ்,  marriage is not a bad arrangement alwaysனு உங்களுக்கு தோண நான் காரணமா இருந்திருக்கேனே“

அவள் எதை சொல்ல வந்தாளோ அதை அவன் சரியாக உணர்ந்து சொல்ல,

இவளைப் புரிந்தவன் இவன் என்ற உணர்வு இவளுக்கு மேலோங்கியது.

முளைவிட்டிருந்த சிறு செடியின் வேர் தொடங்கி அலை அலையாய் அவளாகிய பாறையில் சுக அக்னி பரவி,

 பாறை முழுவதுமே மெழுகாய்,  பனி காற்றாய்,  பாவை அலையாய்!

இவள் மீதிருந்த பார்வையை அகற்றி தன் கோட் பாக்கெட்டுகளை எதையோ தேடுவது போல் தடவிவிட்டு

“ஓ, மொபைல் உங்கட்ட தான இருக்குது,  வீட்டுக்கு பேசுங்க”  என்று பேச்சை மாற்றினான் வியன்.

நறுக்கென்றது இவள் மனதிற்கு. அவன் இவளை தவிர்க்கிறானா?

அவனது ஒவ்வொரு செயலும் இவளைப் பாதிக்கும் அளவென்ன?

இவள் கையிலிருந்த ஃபோனை கை நீட்டி எடுத்துக் கொண்டவன், ஃபோன் புக்கில் தேடி அவள் தந்தை எண்ணை டயல் செய்து அவளிடமாக நீட்டினான்.

“பேசுங்க, உங்க அப்பா ”

டுத்தார் அவளது தந்தை சுகுமார். பேசுவது மிர்னா என உணர்ந்த நொடி அவரது மொபைலை பிடுங்கி இவளுடன் பேச தொடங்கியது மாலினி.

குசு குசு என்ற ரகசிய குரல்.

“ஏய்,  நீ இது வரைக்கும் செய்ததிலேயே உருப்படியான விஷயம் இப்படி காணாம போனதுதான், மிரட்டி உருட்டி அந்த கவின் கிறுக்கன் தலையில இந்த சின்ன லூசு வேரிய கட்டி இருக்கேன்,

இப்பதான் கல்யாணம் முடிஞ்சிது,  நீ புத்திசாலி,  சொன்னா புரிஞ்சிப்ப,  அதை இதை சொல்லி அந்த சின்னவன் வியனை கல்யாணம் செய்ய வழியப்பாரு,

உடனே கிளம்பி நேர அவன் அம்மா அப்பாட்டயே போ,  நாங்களும் வாறோம், பயப்படாம பேசு, அம்மா போடுற போடுல உடனே தாலி கட்டிருவான்”

மாலினி பேசிக்கொண்டிருக்கும் போதே இணைப்பை துண்டித்தாள் மிர்னா. அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவளுக்குத் தெளிவாக புரிந்தது.

புருவங்கள் உயர்த்தி ஒரு பெருமூச்சு விட்டவள்,

“மதுரை கூட்டிட்டு போய் என்னை சென்னைக்கு பஸ் ஏத்திவிட முடியுமா? அங்க இருந்து டெல்லி நானே போயிடுவேன். எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் ஏற்கனவே செய்துட்டேன்”

தன் திட்டத்தை அவள் விவரிக்க வியன் அதிர்ந்து போனான்.

அவன் முகத்தில் இமாலய அக்கறை குடி வந்தது.

சில நிமிடம் முன் அவன் காட்டிய பாரமுகம் கூட மறந்து அவள் மனதிற்குள் இசை அலை. இனிமை சாரல்.

“மிர்னா? என்னாச்சு மிர்னா?” அவன் பதற,  இதற்குள் ஃபார்முக்கு வந்திருந்தாள் எம்.எம்.

“டெல்லில யார் இருக்காங்க? நான் போறேன்னதும் டெல்லிக்காக இவ்ளவு பதறீங்க?”  முகம் குனிந்து போலியாய் முறைத்தவள்,  கண்சிமிட்டி சிரித்தாள்.

விழி அசைக்காமல் அவளை ஒரு பார்வை பார்த்தான் வியன்.

“டும், டும், டும், இதனால சகல ஜனங்களுக்கும் அறிவிக்கிற செய்தி என்னன்னா,  நம்ம சின்ன எஜமான்,  சிங்கார கோமான், கவின் சோமானுக்கும்,

சிரியா அழகி,  சிந்தனை செல்வி,  தொட்டாச்சிணுங்கி வேரிக்கும் நல்லவங்க நாலு பேரும்,  நாகரீக கோமாளிங்க ஆறு பேரும்,  சேர்ந்து போட்டுடாங்க காப்பு,  அடிச்சிட்டாங்கய்யா ஆப்பு,

தப்பிச்சிட்டா மிர்னீ, அவ ஒரு சூப்பர் டூப்பர் பாப்பு”

முரசறிவிப்பவன் அங்க அசைவுகளுடன் இவள் அறிவிக்க

“வாட்?” வியனிடத்தில் முழு அதிர்ச்சி.

அடுத்த பக்கம்