என்னைத் தந்தேன் வேரொடு 2 (6)

ந்த இடமும் அவளுக்கு பாதுகாப்பாய் படவில்லை.

பின்னே செங்குத்தாய் இல்லாமல் சற்றே சரிவாய் இருந்ததை தவிர அந்த செங்குத்து பாறைக்கும் இச்சரிவிற்கும் ஒரு வித்யாசமும் இல்லை.

இங்கும் எதையும் பிடிக்காமல் நிற்கவே முடியாது. இச்சரிவும் பாதாளத்தை நோக்கித்தான் பாயச்சொல்கிறது பாதங்களை.

“மர வேர் எவ்வளவு இருக்குது பாருங்க, அதை பிடிச்சுகிட்டே ஈசியா மேலே ஏறிடலாம்”

அவன் சொல்ல அப்பொழுதுதான் அதை கவனித்தாள். கல் மண் கால் தொட முடியாதபடி சரிவு முழுவதும் அடர்ந்து படர்ந்திருந்தன வித வித வேர்கள்.

அவனுக்கு பாரம் இறக்கும் விதமாக அச்சரிவில் இறங்கி குனிந்து வேர்களை பற்றி நின்றாள்.

நான் ஆணையிட்டால் டடடட்டடண்டடன்டடன்

அது நடந்துவிட்டால் டடடட்டடண்டடன்டடன்

ஏங்க என்னாச்சு? பதறிப் போனான் வியன்.

“பாடுனாத்தான் தெம்பா இருக்கும்”

ம்க்கும் கும் ,தொண்டயை சரி செய்து கொண்டாள். பாட எம். எம் இப்போ ரெடி,

“சரிங்க, ஆனா எதை செய்தாலும் சொல்லிட்டு செய்ங்க” கடித்திருந்த அவன் உதடையும்  தாண்டி  வெளிப்பட்டது அவனது புன்னகை.

திரும்பி முறைத்தவள் தலையை சிலுப்பிவிட்டு பாட ஆரம்பித்தாள்.

நான் ஆணையிட்டால் டடடட்டடண்டடன்டடன்

அது நடந்துவிட்டால் டடடட்டடண்டடன்டடன்

டோரி மானை எலிவேட்டர் டோரை தர சொல்லுவேன்,

அல்லது அலாவதீனின் பறக்கும் கம்பளம் வர சொல்வேன்,

குறைந்த பட்சம்/

தொங்கும் கயிறோடு/

ஒரு சாப்பர்தனை/

இங்கு வர வைப்பேன்,

“என்னங்க” அழைத்தான் வியன்.

திரும்பிப் பார்த்தாள்.

“கையவிட காது ரொம்ப வலிக்குதுங்க” அவன் பரிதாபமாகச் சொல்ல மிர்னாவுக்கே சிரிப்பு வந்தது.

சிரிக்காதடி மிர்னி எம்.எம் இமேஜ் என்னாவறது?

மெல்ல மேல் நோக்கி ஏறத்தொடங்கினர் இருவரும். ஆறுதல் தரும் விதமாக அடுத்த பத்தாம் நிமிடம், நாலுகால் நடையின்றி இரு கால்களால்  நடக்கும் படியான மென் சரிவிற்கு வந்து சேர்ந்தனர்.

“இ.. இங்க கொ…கொஞ்சம் ரெஸ்ட் எ…எடுக்கலாம் வியன், ப்…ப்ளீஸ்” அவளுக்கு மூச்சிரைத்தது.

“ஷ்யூர், ஷ்யூர்” ஏற்கனவே அமர்ந்திருந்த இவளருகில் வந்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு அமர்ந்தான்.

குளிர் பிடித்தாட்டியது இருவரையும். இதுவரை அவளுக்கு இவ்வளவு உறைக்கவில்லை குளிர். உடல் உழைப்பு காரணமாக இருக்கலாம்.

தன் புடவையை வைத்து தோள் மறைத்தாள்.

அவனோ தன் கோட் பாக்கட்டிலிருந்து அவளது வெள்ளை நிற மொபைலை எடுத்தான்.

“வாவ், இத எப்போ எடுத்தீங்க?”

“காரை விட்டு வெளியே வர்றப்பதான், இப்போதைக்கு இதுதான் லைஃப் லைன், கேர் ஃபுல்” இவளிடமாக நீட்டினான்.

ஏனோ அக்கணம் அவன் மேல் அபரிதமான நம்பிக்கை வந்தது. அவனை இன்னுமாய் பிடித்தது, பின்னே லைஃப்லனை தன் கட்டுபாட்டில் வைத்து கொள்ளாமல் இவளை நம்பி தருவது என்றால்?

அதை வாங்கி ஸ்விட்ச் ஆன் செய்தாள் மிர்னா. எழுந்து அங்கும் இங்குமாக சிறிது நடந்தாள். சிக்னல் தேடித்தான். ஒரு இடத்தில் ஒரே ஒரு கோடு சிக்னல் வருவதும் போவதுமாக இருந்தது.

“வியன், டவர் இருக்குது” இவள் ஆர்ப்பரிக்க அவளது ஆச்சர்ய வார்த்தைகள் 3 முறை எதிரொலித்தது.

“வியன், டவர் இருக்குது

“வியன், டவர் இருக்குது”

“வியன், டவர் இருக்குது”

அவ்வளவுதான் தனக்குப் பிடித்ததை சொல்லிப் பார்த்து விளையாடத் தொடங்கினாள் மிர்னா.

ஒலிம்பிக்ஸ்,

ஒலிம்பிக்ஸ்,

ஒலிம்பிக்ஸ்,

 

ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்,

ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்,

ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்,

 

கோல்ட் மெடல்,

கோல்ட் மெடல்,

கோல்ட் மெடல்,

 

ஃபார் இண்டியா,

ஃபார் இண்டியா,

ஃபார் இண்டியா,

தொடரும்…

 

Advertisements

2 comments

  1. MM naan unnoda big fan …. iruthalum nee pattu paadi Viyan kathukku mattum illa en kaadhum vali 😂😂🤣….
    Awesome awesome ….

Leave a Reply