என்னைத் தந்தேன் வேரோடு 2 (2)

அதற்கு அடுத்த அறை எண்ணை பார்த்துவிட்டு ரிஷப்ஷனில் அந்த அறைக்கான சாவி வாங்கி அடுத்த அறைக்குள் நுழைந்தான். அந்த அறையின் பால்கனி வழியாக மிர்னாவிற்கென ஒதுக்கிய அறையின் பால்கனிக்குள் தாவினான்.

உள்ளிருந்து ஒரு பெண்ணின் பேச்சுக் குரல் கேட்டது.

கவனித்தான்.

ஜெபித்துக் கொண்டிருந்தாள் வேரி.

“எனக்கு ரொம்ப பயமா இருக்குது யேசப்பா”

கவினின் இதயத்தில் இடி இறங்கியது.

ஜீசஸ்  என் தம்பிக்கு என்னவாயிற்று????

வியனுக்கு விழிப்பு வந்த போது முதலில் ஒன்றும் புரியவில்லை. மெல்ல சூழ்நிலை புரிய உள்ளம் தறிகெட்டோட, ஆமை வேகத்தில் உடலசைத்து பின் இருக்கையில் இருந்தவளை விழிகளால் தேடினான்.

பௌர்ணமி இரவு. பால் நிலா ஒளி, சாய்ந்திருந்த வாகனத்தின் சாளரம் வழியாக பாவை முகம் பட்டு அவள் பட்டுடை மேல் சிதறிக்கொண்டிருந்தது.

அவள் காதிலிருந்து ஒரு கோடாய் வழிந்திருந்தது ரத்தம். காதிலிருந்து வரும் ரத்தம் மரண அறிவிப்பல்லவா?

“ஹேய்,மிர்னா!!!!!!” அவன் அலறலில் பதற்றத்தில் க்ர்க், என சத்தமெழுப்பி இன்னுமாய் சரிந்தது அந்த ஜாகுவார்.

மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி உருண்டிருந்த அது இடையில் ஏதோ பெரும் பாறை தட்டி, அதிசயமாக, ஆபத்தாக, தற்காலிகமாக நின்றுகொண்டிருந்தது ஆறாயிரம் அடி உயர பள்ளத்தாக்கில் ஏதோ ஒரு இடத்தில்.

எந்நொடியும் மரணம் மடி தொடும்.

இவன் அலறலிலேயோ அல்லது அசைவிலோ மெல்ல விழித்துப் பார்த்தாள் மிர்னா.

“என்னங்க நீங்க, உங்க முகத்தை பக்கத்தில பார்த்தாலே பிரவாயில்லாமதான்  இருக்கும், இதுல இப்படி பயந்துகிட்டு வேற பார்த்தா, பாவம்ல நான்”

சொல்லியபடி மெல்ல எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அசந்து போனான் வியன்.

“உங்க ரைட் ஹஅண்ட எடுத்து சின்ல வச்சுகோங்க”

அவள் சொல்ல இயல்பாய் தன் வாய்புறம் நீண்டது வியனின்  கை,

“சின்ன அப்படியே மேல பார்த்து தள்ளுங்க, மௌத் க்ளோஸ் ஆகிடும், வாய மூடிட்டு பார்த்தாலும் நான் இப்படியே தான் இருப்பேன்”

அவள் வாக்கியத்தின் முழு பொருள் புரிய சட்டென நின்றது அவன் கை. முறைக்க முயன்றான் ஆனால் சிரிப்பு வந்தது.

பேசியபடி தன் தலையிலிருந்த பின்களை நீக்கி எங்கேயோ சிக்கி இருந்த அந்த நீண்ட வெயிலிலிருந்து தன் தலைக்கு விடுதலை கொடுத்தவள் பார்வையால் சூழலைப் படித்தாள்.

அவளைப் பார்த்திருந்த வியனோ அவளது காதிலிருந்து வடிந்த ரத்தத்தை பற்றி கேள்வியால் விசாரித்தான். அது அவள் கை காயத்திலிருந்து பட்ட ரத்தம். கை காயமும் மிகச் சிறிய கீரலே என தெரிந்தது.

“யூ ஆர் ஜஸ்ட் அனதர் கவின். யூ போத் டோ நோ ஹவ் டு பஅனிக்” அவன் சிலாகிக்க,

“தொட நடுங்கி தாண்டவராயனுக்கு தொட்டதெல்லாம் பாம்பாம், தொடாததெல்லாம் பேயாம்” என்றபடி உடைந்திருந்த விண்டோ வழியாக மெல்ல வெளியே தலைநீட்டிப் பார்த்தாள் மிர்னா.

கலக்கிட்ட எம்.எம், கவித கவித, ஆன் த ஸ்பாட்ல அடிக்கிறியே’ வேற யாரு அவ மைன்ட் வாய்ஸ்தான்.

“கம் அகெய்ன்?” புரிந்த விஷயம் சரிதானான்னு புரியாமல் கேட்டான் வியன்.

“பயபடுறவங்களுக்கு எதப் பார்த்தாலும் எக்குதப்பாதான் தெரியும்கிறது அதுக்கு அர்த்தம், உங்கள மாதிரியே நானும் இருக்கனும்னு எதாவது அவசியமா? எனக்கு பயப்பட வராது”

“வாட் யு மீன்?”

“தொட நடுங்கி தாண்டவராயன்” மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டான் வியன். அவன் முகம் போன போக்கை நீங்களே கற்பனையில பார்த்துகோங்கோ.

“பாரட்டுனதுக்கு இப்படி ஒரு காம்ப்ளிமென்டாங்க?” பாவமாகப் பார்த்தான் பையன்.

“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோதுங்க, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரு வியன் ராஜ தொண்டைமான் அவர்களே பாதி பள்ளத்தில், பாறையில் ஆடும் இந்த விளையாட்டை முடித்துவிட்டு வெளியேறி வீடு போய் சேர வழி பார்க்கலாமா, இல்லை வாழ்த்துபாக்கள் பாடி பாதாளம் நோக்கி ஓடி வீடு பேறு அடையலாமா?”

அரச கால பணிபெண் போல பவ்யமாக தலை குனிந்து உரிய ஏற்ற இறக்கத்துடன் அவள் சொல்ல,

தப்பித்தால் போதும் என்  வியன் காரைவிட்டு வெளியே வர வழி பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்த பக்கம்