என்னைத் தந்தேன் வேரோடு 16(9)

‘ஐயோ, கவின் நீ என்னல்லாம் நினச்சு பயப்படுறியோ? நான் இப்ப உன்னை தப்பா நினைக்கவே இல்ல, எப்பவும் என்னை சரியா புரிஞ்சிப்பியே, இப்பவும் புரிஞ்சிப்பியா?’ இவள் மனம் மல்லாடியது.

முந்திய நாள் மாலை மனதில் வந்தது.

மிஹிர் வாக்கிங் சென்றிருந்தான். வியன் மிர்னா அண்ட் கோ ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, வேரி தன் அறையில் மானசீகமாக கடவுளிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“பொறுத்துப் போகணும்னு தெரியுது யேசப்பா, ஆனால் இதுக்கு எப்பதான் முடிவு? எனக்கு அணு அணுவா வலிக்குதே, அவங்க இதைதான் விரும்புறாங்கன்னா, அவங்களாவது சந்தோஷமா  இருக்கணுமே,

அவங்க சந்தோஷத்துக்காகன்னு நான் கஷ்டபட்டுட்டு போய்டுவனே, ஆனா அவங்களும் இங்க மனவேதனைலதான இருக்காங்க, தயவு செய்து நீங்க ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க,

கவின் நான் இனி சந்தேகப் படமாட்டேன்னு புரிஞ்சிகிடுற மாதிரி எதாவது ஒரு வழி தாங்க, நான் உதவி தேவைப்படுற குழந்தைகளுக்கு ப்ரயோஜனமா எதாவது செய்றேன், இது என் பொருத்தனை, ப்ளீஸ்”

அந்நேரம் கவின் வேரியிடம் அவளது அறைக்கு வந்தான்.

ஆவலாய் எழுந்து நின்றாள் வேரி.

அவனுடன் கிடைக்கும் தனிமை.

ஆசை அலை.

“அந்த மெயில் பத்தி பேசணும்” சொன்ன அவன் குரல் மரத்திருந்தது.

அலை அடங்கிப்போய் கசப்பு தலை தூக்குகிறது இவளில்.

அடுத்து என்ன தலைவலியை இது கொண்டுவரப் போகுது?

“சொல்லுங்க கவிப்பா”

“யார் இதையெல்லாம் செய்றதுன்னு எதுவும் க்ளூ கிடைக்கலை, பட்”

“…..“

“அந்த மெயில்ல சொல்லியிருக்கிறபடி பக்கத்து லேண்ட்ல நம்ம ஃபாக்டரிய மாத்தி கட்டிடாங்கன்னு உனக்கு ஏற்கனவே தெரியும், பட் இப்பதான் அந்த பக்கத்து லேண்ட் உண்மையிலேயே உன் லேண்டுன்னு எனக்கு தெரியும்” உணர்ச்சி அற்று சொன்னான் கவின்.

வானம் திறந்து கடவுளின் மொத்த ஆசியும் தன் மேல் கொட்டப்படுவதாக உணர்ந்தாள் வேரி.

‘தேங்க்யூ ஜீசஸ், ஃபாக்டரியோட ப்ராப்ளம், கவினோட பிஸினஸ் டென்ஷன், எல்லாம் முடிஞ்சிட்டு, அதோட கடவுள் இவள் ஜெபத்திற்கு பதில் கொடுத்துட்டார், இப்ப இவள் இயல்பாய் சந்தேகப்படாமல் இருக்கப்போவதைப் பார்த்து, இவள் மன மாற்றத்தை கவின் புரிந்து கொள்வான்.

“உனக்கு தெரியுமான்னு தெரியல, அந்த மெயில்ல சொல்லி இருந்தபடி அந்த லேண்ட் இஷ்யூ சால்வ் ஆகலைனா ஃப்யூல் ஃபாக்டரி ஃபங்ஷனாக இன்னும் டிலே ஆகி இருக்கும்னா, நம்ம மத்த பிஸினஸில் இருந்து நிறைய இதுக்கு செலவாகிட்டு இருக்கிறதால .நாம பேங்கரப்ட்சி ஆகிற நிலை இருந்ததும் உண்மை” அவன் குரலில் இன்னும் மரம்.

“எது எப்டியோ, இப்ப எல்லாம் சால்வ் ஆகிட்டே, ஐம்,வெரி ஹாப்பி கவிப்பா”

சந்தோஷத்தை துள்ளி குதித்து வெளிக்காட்ட வேரிக்கு பயம். தான் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுப்பதாக நினைப்பனே!

அதே காரணத்திற்காக அவனை கட்டிக்கொள்ள வந்த ஆசையை அடிக்காமல் துரத்தினாள்.

“என் பெர்த் டே அப்ப உன் டாகுமெண்ட்ஸ் லாயர் வச்சு ப்ரிபேர் செய்திருந்ததுங்கிறதால  நான் அதை டீடெய்லா படிச்சுப் பார்த்தெல்லாம் சைன் பண்ணல, சோ எனக்கு அது இந்த லேண்ட்னு தெரியாது“

“படிச்சிருந்தீங்கன்னா கூட அந்த லேண்ட் நீங்க தேடுற லேண்டுன்னு சட்டுன்னு எப்படி புரியும்?”

“ம், எனிவே அது எனக்கு தெரியாததால அப்புறமும் அந்த லேண்ட் ஓனரைத் தேடிகிட்டுதான் இருந்தோம், ஓனர் பெயர் அன்புமரியத்தின் மகள் வெரோனிக்கானு எங்களுக்கு கிடச்சிருந்த ஈசில இருந்துச்சு,

அதோட கொடுத்ருந்த அட்ரஸும் திருநெல்வேலி பக்கம், சோ அது நீயா இருக்கமுடியும்னு நான் உட்பட எங்க டீம்ல யாராலையும் யோசிக்க முடியல, டிடெக்டிவ் வச்சுதான் லேண்ட் ஓனரை தேடினோம், அவங்களால கூட அந்த அட்ரஸை சால்வ் செய்ய முடியலை, இப்ப அந்த மெயில் டீடெய்ல்ஸை ஸ்டடி செய்றப்பதான் புரிஞ்சிது”

அடுத்த பக்கம்