வந்து சென்ற டாக்ஸிகளில் பயணிகள். நிற்காமல் சென்றன அவை.
குத்து மதிப்பாக வரும்போது வந்த வழி என ஒரு திசையை நோக்கி நடந்தாள். அங்கு சென்றால் டாக்ஸி கிடைக்கலாம்,
யேசப்பா ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ்
ஆகஸ்ட் மாதம் பிரேசிலுக்கு மழைக்காலம் இல்லை என்றாலும், மழை வரா காலமும் இல்லை. திடுமென மழை தூரத் துவங்கி கடுகு வெடிக்கும் நேரத்திற்குள் காற்றுடன் கை கோர்த்து கடுமழையானது.
மாலைதான் ஆனால் இரவாய் இருண்டது சூழல்.
இரண்டு நொடிக்குள் முழுக்க நனைந்து விட்டவளை தூக்கி தூர வீசிவிடுவேன் என மிரட்டியது காற்று.
கண்ணுக்கு தெரிந்த மழை மறைப்பை தேடினாள். வெறும் உயர் கான்க்ரீட் சுவர்கள் கொண்ட சாலை. போர்டிகோ இல்லாத கட்டிடவரிசைகள்.
தொலைவில் ஒரு சிறு போர்டிகோ தெரிய, அங்கு சென்று ஒதுங்கினாள்.
தெருவில் ஆள் நடமாட்டாம் இல்லை என்ற நிலை. நழுவியது நேரம். சூழ்ந்தது இருள். மழைதான் வானத்தின் தூதை தரைக்கு தந்து முடித்தபாடில்லை.
வீட்டில் விழித்தெழுந்த கவின் மனதில் மனைவியை குறித்து ஒரு தவிப்பு. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன் மெல்ல வேரியின் அறையை நோக்கிப் போனான்.
தூங்குகிறவளைப் பார்த்துவிட்டாவது வரலாம்.
கதவை தட்ட நினைத்தால் அது உள்ளே பூட்டி இருக்கவில்லை என்று புரிகிறது,
இருந்தாலும் மெல்ல தட்டினான்.
பதில் இல்லை.
பாவம் அசதியில் தூங்கும் சகோதரிகளை ஏன் எழுப்ப வேண்டும்.
திரும்பி வர நினைத்தான். மனம் கேட்காமல் அறைக்குள் எட்டிப் பார்த்தான். கட்டிலில் மிர்னா. இவன் மனைவி எங்கே??
வீடு முழுவதும் தேடியும் அவள் இல்லை என்றானதும் அவசரமாக அவளுக்கு ஃபோன் செய்தான்.
யாரும் அதை ஏற்கத்தான் இல்லை.
வெளியில் கொட்டும் மழை. இவனுடையவள் மொழி தெரியாத இங்கு!!!! நடந்து வரும் கொலை முயற்சிகளும், அந்த மெயில்களும் ஞாபகம் வந்து இவனை மிரட்டுகிறது.
எங்கடா போய்ட்ட குல்ஸ்??
“யேசப்பா எனக்கு அவளை எப்படியாவது திருப்பி கொடுத்துடுங்க, அவ குழந்தை தனத்துக்காக இன்னொரு தடவை இப்படி கோபப்படவேமாட்டேன்”
அவசர அவசரமாக தேவை என எண்ணியவைகளை எடுத்துக் கொண்டு காருக்கு ஓடினான்.
இந்த கொடும் மழை காரை அனுமதிக்குமா???
இதில் அவள் எப்படி சமாளிக்கிறாளோ?
அவ்ளவுதான் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
ஆனால் எங்கு போய் தேட??!!!!
“தெய்வமே, அவங்கட்ட சொல்லாம வந்தது தப்புதான், தயவு செய்து என்னை கவின்ட்ட கொண்டு போய் சேர்த்துடுங்க”
வாய்விட்டு இவள் வேண்ட, “நீங்க தமிழா?” இவள் அருகில் கேட்டது ஒரு பெண்குரல்.
உயிர் வரை ஆனந்திக்க, அந்த குரல் திசை நோக்கினாள் வேரி.
பெண் என புரியும் அளவு ஒரு உருவம். இருட்டில் வேறு ஒன்றும் தெரியவில்லை.
“ஆமாம், ஒலிம்பிக் பார்க்க வந்தோம், உங்களுக்கு ரியோ நல்லா தெரியுமா? எனக்கு ஒரு டாக்ஸி புக் செய்து தாங்களேன், ப்ளீஸ், ப்ளீஸ் ஹெல்ப் மீ, என் மொபைல் மிஸ் ஆகிட்டு” இவள் ஆவலும் கெஞ்சலுமாய் கேட்க,
“ஒரு நிமிஷம்”
என தன் மொபைலை குடைந்த அந்தப் பெண்
“இப்ப இங்க டாக்ஸி கிடைக்கிறது கஷ்டம் போல, உங்களுக்கு எங்க போகணும்னு சொல்லுங்க, என்ன செய்யலாம்னு பார்க்கலாம்” என்க
“காவ்யா, காவ்யா ஒலிம்பிக் குவார்ட்டஸ் போகணும்” இவள் விடை சொன்னாள்.
இன்னும் சில நிமிடங்களை தன் மொபைலில் செலவழித்தாள் அப்பெண்.
“அதுக்கு மெட்ரோ தான் சரியாவரும் போல, பக்கத்திலதான் ஸ்டேஷன்“
“தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க, இந்த ,இருட்டுல இங்க இடம் தேடிப் போய் போறது… அது எனக்கு போர்ச்சுகீசும் தெரியாது, தயவு செய்து என்னை ஸ்டேஷன் கூட்டிபோய் விட முடியுமா, ப்ளீஸ்” வேரி திரும்பவுமாய் உதவி கோரினாள்.
“ஷ்யூர், வாங்க போகலாம்”
மழையில் நனைந்தபடி நடக்க தொடங்கினாள் வேரி அந்த பெண்ணை பின்பற்றியபடி. அவள் மனம் முழுவதும் கவினிடம் போய் சேர்வதில் தான் இருந்ததே தவிர, முன் சென்ற பெண்ணை கவனிக்கவில்லை.