என்னைத் தந்தேன் வேரோடு 16(7)

“இதுல எனக்கு என்ன ப்ராஃபிட்? ஐம் அ பிஸினஸ் வுமன் யு நோ” இவள் கிசிகிசுப்பிலே மொத்த உரையாடலும் தொடர்ந்தது.

“உங்கள அழகா அறுபது வயசு ராஜகுமாரியா காமிக்றமாதிரி ஒரு ட்ரஸ் கிடைக்கும்” அவன் சீரியஃஸாக சொல்ல,

“அப்ப எனக்கு அறுபது வயசாகிறப்ப இந்த ஹெல்ப்ப செஞ்சுதாரேன்” இவள் அலட்டாமல் பதிக் கொடுக்க,

“என்ட தெய்வமே, ஒன்னுக்கு ரெண்டா படைச்சுருக்கியே, உன் வல்லமையே வல்லமை” வானத்தைப் பார்த்துக் கொண்டான் வியன்.

“ரெண்டையும் உங்க வீட்டுக்கே அனுப்பியிருக்காரே, அந்த குறிப்ப கவனிக்காம  விட்டுடீங்களே, உங்க ரெண்டுபேரையும் சமாளிக்க இப்படி இருந்தால் தான் முடியும்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு”

“அண்ணியாரே அடியேன் சரண்டர், உங்க டிப்ஸ் என்னனு சொல்லுங்க, நோட் திஸ் பாய்ண்ட், டிப்ஸ் ஒன்லி”

“அது, அது வந்து”

“பெருசா பள்ளம் பறிக்க போறீங்கன்னு தெரியுது”

“இங்க பக்கத்துல அவ்டிங் போய்ட்டு வர ஹெல்ப் பண்ணணும்”

“முதல்லயே சொன்னேன் டிப்ஸ்தான்னு, இப்ப இங்க இப்படிலாம் வெளிய போறது சரி வராது, அதுவும் கவினுக்கு தெரியாம போறதுன்னா இது க்ரைம்”

பாதுகாப்பு காரணமாக முடிந்தவரை அனைவரும் வெளியே செல்வதை தடை செய்து வைத்திருந்தனர் முக்கிய தலைகள்.

“அதான,  இப்படில்லாம் சொல்லலைனா நீங்க அவர் தம்பி கிடையாதே, சரி போங்க, மிர்னுட்ட இன்னைக்கு நைட் வெட்டிங் டிரஸ் பத்தி கேட்டு வைக்கிறேன்”

ஏமாற்றத்தை அவள் மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிய,

“சாரி அண்ணி, நம்ம ஊருக்கு போனதும் எங்கனாலும் கூட்டிட்டு போறேன், பட் இங்க… இப்ப வேண்டாம் ப்ளீஸ்”

“…..“

“தயவு செய்து சிரிங்க அண்ணி, நீங்க சிரிக்கலைனா நைட் எனக்கு தூக்கமே வராது”

இன்னும் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

“பிறகு, இப்படி ஒரு பயங்கர முகத்தைப் பார்த்துட்டு படுத்தா கெட்ட கெட்ட கனவா வருமே”

“சே, இதுக்குதானா? வரட்டும் வரட்டும், நல்லா வரட்டும்”

“நான் தூங்கலைனா உங்க ஆளும் தூங்க முடியாது, ஒரே ரூம்ல இருக்கோம் ஞாபகம் இருக்கட்டும்”

வேரியின் முகம் மாறிவிட்டது.

“அவங்க நைட் நல்லா தூங்குறாங்களா?”

“ம்ம், உங்க ரெண்டு பேர்ட்டயும் மாட்டிகிட்டு காதல் படுற பாடு இருக்கே, எனக்கு தெரிஞ்சி உங்கள பத்தி அவன் ஜாலியா கனவு காண்றான், ஆனா கொஞ்சமே கொஞ்சம் கோபமாவும் இருக்கான், இந்த லாஜிக்லாம் கல்யாணம் ஆனாதான் புரியும் போல” வியன் தொடங்க

“என்னது இங்க ரகசிய கூட்டணி, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அது சதியாலோசனையா இருக்குமே?” கேட்டபடி மிர்னா வர

அதன் பின் இந்த பேச்சு வேறு திசையில் பயணித்தது.

ன்று இரண்டாம் சுற்று மிர்னாவிற்கு. போட்டி கடுமையாக இருந்தாலும் முதல் இடத்தில் மிர்னா அடுத்த சுற்றுக்கு தேர்வாகி இருந்தாள்.

வீட்டிற்கு வரவும் உற்சாக வார்த்தைகள் முடிய அனைவரும் அதிகாலையே எழுந்து கிளம்பி இருந்ததால் ஓய்வு அவசியம் என உணர்ந்து அவரவர் படுக்கையில் துயில,

இதுதான் தன் திட்டத்தை நிறைவேற்ற சரியான தருணம் என உணர்ந்து வேரி வெளியே கிளம்பிவிட்டாள்.

வியனே மறுக்கும் போது கவின் சம்மதிக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அதற்காக இதை தள்ளிப் போட முடியாது.

டாக்ஸியில் போய்விட்டு டக்ஸியில் வரபோகிறாள். இவர்கள் விழித்தெழும் முன் வந்து விடலாம். வந்த பின் சொல்லிக்கொள்ளலாம்.

இன்டெர் நெட்டில் கண்டு பிடித்திருந்த டாக்ஸி புக்கிங் எண்ணை கொண்டு டாக்ஸி வரவைத்து கிளம்பிவிட்டாள்.

இடத்தைச் சொன்ன உடன் டாக்ஸி டிரைவரும் குழப்பம் இன்றி அந்த இடத்தில் கொண்டு இறக்கிவிட்டார். அதுவரை எல்லாம் சுமுகமாகவே சென்றது.

மொழி ப்ரச்சனையாய் இருந்தாலும் வந்த வேலையை முடித்துக் கொண்டு இவள் வெளிவந்து டாக்ஸி புக் செய்ய மொபைலை தேடும் போதுதான் தன் மொபலை டாக்ஸியிலேயே விட்டிருப்பதை உணர்ந்தாள்.

மொழி தெரியாத இடத்தில் இவள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

இவள் இடத்தில் கவின் இருந்தால் என்ன செய்வான்?

பயப்பட கூடாது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

அடுத்த பக்கம்