என்னைத் தந்தேன் வேரோடு 16(6)

“அது” நடந்ததை சொல்லி முடித்தாள் வேரி.

“ஒன்னு மட்டும் சொல்லுவேன் உனக்கு அறிவே இல்லை”  கேட்டிருந்த மிர்னாவிடமிருந்து பதில் இப்படி வந்தது.

கடவுள் எகிப்த்ல அடிமையாய் இருந்த இஸ்ரேல் மக்களை காப்பாத்தி, செங்கடலைலாம் ரெண்டா பிளந்து கடல் நடுவுல வழி உண்டாக்கி கூட்டிட்டு வந்தாராம்,

ஆனா அவங்க வாழ்றதுக்கான நாடை கடவுள் காண்பிச்சப்ப, இங்க உள்ளவங்களாம் குண்டா ஹைட்டா பலமா இருக்காங்க, எங்களை கொன்னு போட்டுருவாங்கன்னு பயந்து போய், உள்ள போக மாட்டேன்னுடாங்களாம்,

அப்படி அடுத்தவங்கட்ட கொல்ல குடுக்கிறதுக்கு கடலை கடந்து  கூட்டிட்டு வரணுமா என்ன? அதை அவங்க யோசிக்கவே இல்ல,

அப்படித்தான் இருக்கு நீ செய்து வச்சிருக்க வேலை,

உன் நிலத்தை பிடுங்க ஆயிரம் வழி இருக்கு, அதுக்கு இவ்ளவு சீரியஸா திட்டம்போட்டு, மேடையில அவமானபட்டு, கல்யாணம் செய்து, உன் அத்தனை கஷ்டங்களையும் அனுசரிச்சு, இனி உன்னையும் என்னையும் கொன்னுட்டு…”

பேசிக்கொண்டு போனவள் வாயை மூடினாள் வேரி.

தான் செய்திருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது தெளிவாக  புரிகிறது வேரிக்கு. புரிந்தும் புரியாமலும் ஆட்டம் காட்டிய மற்றொன்றும் கூட புரிந்து விட்டது.

“எனக்கு புரிஞ்சிட்டு மிர்னு, அவங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்”

“ம், இனி” மிர்னாவை பேசவிடவில்லை வேரி.

“என் கஷ்டத்தை அவங்க அனுசரிச்சுன்னு ஏன் சொன்ன?”

“போன தடவை உங்க வீட்டுக்க்கு வந்தப்ப, வியன் என்னை தேடுறார்னு விளையாட்டாய் மாடில இருந்த  உன் ட்ரெஸிங் ரூம்ல ஒளிஞ்சேன், அப்ப அங்க நீ மறச்சு வச்சிருந்த ஷீ டயப்பர் எல்லாம் பாத்தேன்”

சொல்லும் போதே தங்கையை அணைத்துக் கொண்டாள் மிர்னா.

“விஷயம் புரிஞ்சப்ப ஷாக்கா, மனசெல்லாம் வலி, பட் கல்யாணத்துக்கு பிறகு நீ நல்லா இருக்கிறியேன்னு தோணவும் நிம்மதியாகிட்டு, ஆனா இப்ப அத்தானையும் உன்னையும் பார்க்கிறப்ப திரும்பவும் கஷ்டமா  இருக்குது” மிர்னா குரலில் தவிப்பு தெரிய,

“ஹேய், எங்களுக்குள்ள இப்பவும் ஒரு ப்ரச்சனையும் இல்லை, நீ சொன்ன மாதிரி இவ்ளவு தூரம் ரியோவுக்கு கூட்டி வந்துதான் கவின் என் மேல கோபத்தை காட்டணும்னு அவசியம் இல்லையே,

இது வேற, உங்கத்தான் லவ் பண்ற ஸ்டைல் இப்படித்தான் இருக்கும், அவர் மிஸ்டர் ரொமான்ஸ், இதுக்கு மேல சின்ன பிள்ள உன்ட்ட இதைப் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது”.

அருகிலிருந்த மிர்னாவை துள்ளலாய் அணைத்து ஒரு முத்தமிட்டாள் தங்கை,

“நான் சின்னபிள்ளையாமா?? இந்த குட்டிப்பிள்ளலாம் என்னைப் பார்த்து இப்டி சொல்ற நிலமை வந்துட்டே, சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டனும், பி.கே வர்றேன் நான், ரெடியா இரு

எம் எம் மானசீகமாக சங்கல்ப்பம் எடுக்கும் அளவுக்கு ஒருவாறு நிதானப் பட்டிருந்தாள்.

உண்மைதானே தன் கோபத்தைக் காண்பிக்க கவின் ஏன் வேரியை இங்கு வரை கூட்டி வர வேண்டுமாம்?!

வேரிக்கோ கணவன் செயல் காரணம் புரிபட உற்சாக வெள்ளம் உள்ளமெங்கும். அவள் வேர் முதலாய் இன்பம் இனபம்,

மிஸ்ட்டர். அழகு சுந்தரம் நீ திரும்ப என்ட்ட மாட்டிகிடுற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை,

ஆனா இந்த வில்லினு சொல்லிக்கிற எலிய,இல்ல சுண்டெலிய கண்டுபிடிச்சாகணும்.

நினைத்துக் கொண்டாள் மிர்னா.

றுநாள் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் தொடங்கியது.

மிஹிரும் வியனும் அவளது பார்வைக்கு உட்பட்ட தூரத்தில். ஆனால் மற்றவர்கள் அவளறியா பார்வையாளர் கூட்டத்தில்.

அடுத்த சுற்றுக்கு மூன்றே ஜம்பில் முதலிடத்தில் தேர்வானாள் மிர்னா.

அன்று இரவு மிஹிருடன் அவள் மறுநாள் ஸ்ட்ரடஜீஸ் பத்தி பேசிக்கொண்டு இருக்கும்போது, மெல்ல அங்கிருந்து நழுவி அறைக்குள் இருந்த வேரி இடம் வந்தான் வியன்.

கவின் அடுத்த அறையில்.

‘அண்ணி எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” கிசு கிசு குரல்.

எதையோ எழுதிக் கொண்டு இருந்தவள் நிமிர்ந்து அதே குரலில் கேட்டாள்,

“என்ன ஹெல்ப்?”

“மிர்னுக்கு என்ன மாதிரி வெட்டிங் டிரஸ் பிடிக்கும்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன், சும்மா இந்த கேட்லாக்ல எது நல்லா இருக்குதுன்னு பேச ஆரம்பிச்சீங்கன்னா அவளே சொல்லுவா” கேட்லாக்கை நீட்டினான்,

அடுத்த பக்கம்